ஸ்டாலின் 30 வருஷமா முதல்வர் கனவிலும்… சசிகலா 30 வருசமா முதல்வர்கனவிலும் இருந்தார்கள்… ஆனால்… ஓபிஎஸ், ஈபிஎஸ் முதல்வர்கள் ஆகி பிரபலமாகி விட்டார்கள்…

எம்ஜிஆர், அண்ணாதுரை, காமராஜர் எதிர்பாராத நிலையில் மரணித்தார்கள் பிரபலமாக இருக்கும் போதே… ராஜீவும், பிரபாகரனும் தங்கள் பிரபல்யம் சறுக்கும் போது மரணித்தார்கள் இன்னொருவரால்…

 

ஈவேரா விநாயகர் சிலையை கல் என கூறி தூக்கி ஏறிந்தார்… ஆனால்… சிறுநீரகத்தில் உருவான கல்லை கூட தூக்கி எறிய முடியாமல் சிறுநீர் கழிக்ககூட சிரமப்பட்டு சிறுநீரை சுமக்க வாளியோடு சுற்றினார்…

 

ஜெயலலிதா சிறைக்கு போகனும்னு கருணாநிதியும்…. கருணாநிதி சாகணும்னு ஜெயலலிதாவும் நினைத்தார்கள்… ஆனால் கண்ணுக்கு எட்டிய வரை எதிரியே இல்லை என்ற ஜெயலலிதா இறந்து விட்டார். பிறகு குற்றவாளி என அறிவிக்கவும் பட்டார்.

 

கருணாநிதி சாகவில்லை.. ஆனால்.. கருணாநிதி விருப்பப்படி ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டதற்கு எந்தவொரு கருத்தும் சொல்ல இயலவில்லை கருணாநிதியால்… 93 வயதிலேயே நூறாண்டு கொண்டாட்ட ஆசை கருணாநிதிக்கு… 

அது நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது… ஆனால் அதை உணரும் நிலையில் கருணாநிதி இருப்பாரா என உறுதியாக சொல்ல முடியாது…. மெத்த படித்த மன்மோகன் சிங், சோனியாவின் கருத்துக்கு பொம்மையாய் ஆட … . ஏதோ படித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு தெற்கு ஆசியாவே ஆடுகிறது…

 

உலகமே தங்களுக்கு கட்டுப்படணும்னு நினைக்கும் வெளிநாட்டு முஸ்லிம்கள் நாளுக்கு நாள் தங்களுக்குள்ளேயே சிதறுகிறார்கள். உயிர் வாழ மட்டுமே சிதறி ஓடிய யூதர்கள் ஒருங்கிணைகிறார்கள். விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தையே அடக்கி ஆள முயல்கிறார்கள்… ஆனால் பூமி நாளுக்கு நாள் மனித வாழ்வுக்கு உகந்த நிலையில் இருந்து விலகிச் செல்கிறது.

 

கர்மா… உங்களுக்கு எதிராக வினையாற்றுவதில்லை… உங்கள் செயல்களுக்கு எதிர்வினையாற்ற தவறுவதும் இல்லை. உங்கள் செயல்களுக்கான பலனை ஏதோ ஒரு வடிவில் உங்களிடம் சேர்த்து விடும் மிகச் சிறந்த நிர்வாகிதான் கர்மா.

 

யாரை அலட்சியம் செய்கிறோமோ அங்கேதான் மண்டியிட வேண்டியதும் வருகிறது. பாலமும்… சுவரும் கட்டிடத் தொழிலாளர்களால்தான் கட்டப்படுகிறது.. சுவர் பிரிக்கிறது… பாலம் இணைக்கிறது.

 

கேடு செய்ய யாருக்கு நினைக்கிறோமோ அதே கேடு நமக்கே வருகிறது. கொஞ்ச நாள் வாழும் வாழ்க்கையில் தீமையை அகற்றுவோம். நன்மையை விதைப்போம்.

 

நல்லவர்களே!… நல்ல சிந்தனையோடு நாலு பேருக்கு உதவுங்கள்.  அதுதான் தர்மம் காக்கும் நல் அரசியல். கெட்டவன் தானே தன் அழிவை தேடிக் கொள்வான். அவனோடு உங்களை கொஞ்சம் கூட ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.

 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.