மத்தியில் முன்பு 10 ஆண்டுகளாக ஆட்சியில்இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, சுகாதாரக்கொள்கையை கொண்டுவர தவறி விட்டது கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமராக வாஜ்பாய் பதவி வகித்தகாலத்தில் சுகாதாரக் கொள்கை அமல்படுத்தப் பட்டது. அதன்பிறகு, மத்தியில் ஆட்சிசெய்த காங்கிரஸ் அரசு, சுகாதாரக் கொள்கையை அமல்படுத்தவில்லை. ஏனென்றால், மக்கள்நலனில் சிறிதும் அக்கட்சி அக்கறை கொண்டிருக்கவில்லை. நாட்டின் வளர்ச்சியையும் அவர்கள் விரும்ப வில்லை. 


நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்து வதிலும் கவனம் செலுத்தவில்லை. தற்போதைய பாஜக அரசு புதிய சுகாதார கொள்கையை அறிமுகப் படுத்தியுள்ளது. முந்தைய அரசுகள் சில விதிமுறைகளை வகுத்திருந்ததால், மருத்துவக் கல்லூரிகளில் குறைந்தளவிலான மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்துவந்தது.


மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் அதிகரிப்பு: மருத்துவம்பயில விரும்பும் மாணவர்களுக்கு இடம் கிடைப்பதை உறுதிப் படுத்துவதற்காக நாடு முழுவதும் 3 அல்லது 4 மக்களவைத் தொகுதிகளுக்கு தலா ஒருமருத்துவக் கல்லூரியைத் திறக்க முடிவு செய்திருக்கிறோம்.  மருத்துவ கல்வியை பயிற்றுவிக்க பேராசிரியர்களின் தேவை அதிகரித்துவருகிறது. எனவே, சிலரின் விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல் கடந்த ஓராண்டில் மட்டும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 6,000 இடங்கள் அதிகரிக்கப்பட்டன. 


நல்ல மருத்துவர்களை உருவாக்க நல்லபேராசிரியர்கள் தேவை என்பதை புரிந்து வைத்திருக்கிறோம். மத்திய அரசின் சீரியமுயற்சியின் காரணமாக சிகிச்சை பயன் படுத்தப்படும் "ஸ்டென்ட்' கருவி மற்றும் பல்வேறு மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. விஷத்தை கிரகிக்கும் வலிமைபெற்றேன்: வாராணசியைப் போல வட்நகரும் சிவனின் சக்திநிறைந்த இடமாகும். குஜராத் முதல்வராக நான் பதவிவகித்த காலத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு கலவரம் ஏற்பட்டது. அப்போது, எதிர்க் கட்சிகள் எனக்கெதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை விஷம்போல் கக்கின. வட்நகர் சிவனிடம் இருந்து நான் பெற்றிருந்த வலிமை, அவற்றை கிரகித்துக்கொள்ள உதவியது என்றார்

வட்நகரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியது:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.