இருநாள் பயணமாக தமிழகம் வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சென்னை விமான நிலையத்தில் கவர்னர், முதல்அமைச்சர், துணை முதல்அமைச்சர் உள்ளிட்டோர் அன்புடன் வரவேற்றனர். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று தமிழகம் வந்தார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மத்தியமந்திரி பொன். ராதாகிருஷ்ணன், சட்டசபை சபாநாயகர் தனபால், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ். அதிகாரிகள் மலர் செண்டுகளை அளித்து அன்புடன் வரவேற்றனர்.வரவேற்புக்கு பின்னர் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று சற்று நேரம் ஓய்வெடுத்த அவர், அங்கு சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் உற்பத்தி அலகை தொடங்கி வைத்தார். மராட்டிய மாநில கவர்னரும், தமிழக முன்னாள் (பொறுப்பு) கவர்னருமான வித்யாசாகர் ராவ் எழுதிய நூலை வெளியிட்டார்.

அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சர்வதேச இந்திய அறிவியல் விழாவில் பங்கேற்றார். நாளை லலித் கலா அகடமியில் நடைபெறும் மறைந்த கர்நாடக இசைப பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைக்கும் வெங்கையா நாயுடு, ஆந்திர வர்த்தக சபையின் 90-ம் ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்.துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி சென்னை மாநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்த பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.