இந்திய -மங்கோலியா பொருளாதாரத்தில் வளர ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. உலகம்முழுவதும் பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதாக ஒரேகுரலாக ஒலிக்கிறது. இந்த நிலையில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பிரகாசமாக இருக்கிறது .

மேலும் நாங்கள் எங்களிடம் உள்ள ஆன்மிகசக்தி, மற்றும் மனிதாபி மானத்தை கொண்டு இந்த உலகத்திற்கு சேவைசெய்ய முடியும் என நான் உறுதியாக நம்புகிறேன். புத்தமதம் மற்றும் ஜனநாயகம் ஆசியாவின் அமைதியையும் ஒருங்கிணைப்பையும், சமத்துவத்தையும் ஏற்படுத்துகிறது.

ஆசிய கண்டம்தான் 21ம் நூற்றாண்டில் உலகிற்கு தலைமை வகிக்கும். கடந்த அரை நூற்றாண்டுகளில் ஆசியாவை போன்று உலகின் வேறு எந்தபகுதியும் வளர்ச்சி அடையவில்லை. மங்கோலியாவுக்கு வந்துள்ள முதல் இந்தியபிரதமர் நான் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.

ஜனநாயக உலகின் புதியவெளிச்சம் மங்கோலியா. இந்த உலகம் எவ்வளவு அழகானது என இந்நாடு நினைவுபடுத்துகிறது. இந்தியாவும் மங்கோலியாவும் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளன. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மங்கோலியாவுக்கும் இந்தியாவுக்குமான உறவு நெருக்கமானது.

60 ஆண்டுகள் பழமையான நமது உறவு எதிர் காலத்தில் மேலும் நெருக்கமானதாக இருக்க வேண்டும்.
ஓராண்டிற்கு முன் 1.25 பில்லியன் மக்கள் மாற்றத்திற்கு ஓட்டளித்தன் மூலம் மனித வரலாற்றில் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலில் வளர்ச்சியை ஏற்படுத்தினர். கடந்த ஓராண்டுகளில் உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது என்று மங்கோலிய நாடாளு மன்றத்தின் சிறப்பு கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.

Leave a Reply