பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபை "உலக யோகா நாள்" அறிவிக்க வேண்டும் என்று அச்சபையில் உரையாற்றியதை ஏற்று ஜூன் 21-ஆம் தேதியை "உலக யோகா தினம்" என்று ஐ.நா அறிவித்ததை நான் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.

ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தேசத்தால் வைக்கப்பட்ட ஒரு கருத்து 90 நாட்களுக்குள் நடைமுறைக்கு வந்தது என்பது இதுதான் வரலாற்றிலே முதன்முறை.

இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் தோன்றிய மனித இனம், உடல் ஆரோக்கியத்திற்கான நம் பாரம்பரியமிக்க யோகா பயிற்சி முறையை உலகம் அறிந்துக்கொள்ளும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஐ.நா சபையின் இந்த யோகா அறிவிப்பினை 175 நாடுகள் ஏற்று நடைமுறைக்கு ஒப்புதல் தந்துள்ளன என்பது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கருத்தினை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டதற்கு ஒப்பாகும். சுவாமி விவேகனந்தர் சிக்காகோவில் 1893-ஆம் ஆண்டு உரையாற்றிய போது உலக நாடுகள் அதுவரை இந்தியாவின் மீது வைத்திருந்த கருத்துக்கள் மாற்றப்பட்டு புதிய கோணத்தில், புதிய வடிவத்தில் இந்தியாவை உலகம் பார்க்க ஆரம்பித்ததோ, அதே போன்ற துவக்கம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இச்செயலால் இந்தியாவிற்கு துவக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் இந்த அறிவிப்புக்கு காரணமாக இருந்த திரு.நரேந்திர மோடி அவர்களுக்கும், ஐ.நா சபையில் இந்த தீர்மானத்தை அறிமுகப் படுத்திய திரு.அசோக் முகர்ஜி அவர்களுக்கும், ஐ.நா சபைக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

(பொன்.இராதாகிருஷ்ணன்)

Leave a Reply