பிரதமர் நரேந்திரமோடி காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார்.ஸ்ரீநகரில் இருந்து 123 கி.மீ. தூரத்தில் குரூஸ் ராணுவமுகாம் உள்ளது. அங்கு சென்ற மோடி ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார். அவர்களுக்கு தீபாவளிவாழ்த்துக்களை தெரிவித்து இனிப்பு வழங்கினார்.

கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதா தலைமையிலான ஆட்சிமலர்ந்து பிரதமரானதும், முதன் முறையாக மோடி இங்கு வந்து ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். தற்போது 2-வது தடவையாக இங்குவந்துள்ளார்.

2015-ம் ஆண்டு பஞ்சாப்பில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் ராணுவவீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். கடந்த ஆண்டு இமாசலபிரதேச எல்லையில் உள்ள ராணுவ நிலைகளுக்கு சென்றார். சீன எல்லையில் உள்ள சின்னாவூர் உள்ளிட்ட ராணுவம் மற்றும் திபெத் எல்லைபோலீஸ் முகாம்களில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

அப்போது அவர் பேசியதாவது மத்திய அரசு ஆயுதப் படைகளின் நலனில் உறுதியுடன் உள்ளது. உதாரணமாக ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை குறிப்பிட்ட அவர். இது போன்ற நன்நாளில் வீரர்கள் மத்தியில் நேரத்தை செலவிடும் போது அவர்கள் புதிய ஆற்றல்பெறுகிறார்கள். கடுமையான நிலைமைகளின் போது வீர்கள் செய்யும் தவம் மற்றும் தியாகத்தை பிரதமர் பாராட்டினார். 

இந்த ஆண்டு தீபாவளியை நான் எனதுகுடும்பத்துடன் கொண்டாட விரும்பினேன். அதனால் தான் இராணுவ வீரர்களிடையே கொண்டாடிக் கொண்டிருக்கிறேன். நான் ராணுவ வீரர்களை எனது குடும்பமாக கருதுகிறேன் என்றார். 

 
 

மேலும் ராணுவ வீரர்கள் கடமை முடிந்த பிறகு ஆயுதப் படைகளை விட்டு வெளியேறியப் பின்னர் சிறந்த யோகாபயிற்றுனர்கள் ஆக முடியும் என்றும் கூறினார். 

 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.