1.எனக்குத்தெரிந்த மளிகைக் கடைக்காரர் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நோட்டுகளை தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கிக்கொண்டார்.ஒரே நிபந்தனை மாதாமாதம் மளிகை பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்!


2.பண மதிப்பு இழப்பு அறிவிக்கபட்ட சமயத்தில் நான் வீட்டுக்குபெயிண்ட் அடிப்பது உள்ளிட்ட வேலைகளை மேற்கொண்டு இருந்தேன்.பெயிண்ட் அடிக்கும் பையன்கள் வேலைக்கு வரவில்லை. காரணம் அண்ணா சாலை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ராமநாதபுரம் கீழக்கரையைச் சேர்ந்தவர்கள் வங்கிவரிசையில் நின்று பணம்  மாற்ற அவர்களை அமர்த்திக் கொண்டனர்.தினமும்  நான்கு முறை வரிசையில் நின்று பையன்கள் 2000 ரூபாய் கூலி பெற்றனர்


3.என்னிடம் வேலைசெய்து கொண்டிருந்தபிளம்பருக்குphone வந்தது அழைத்து ஒரு ஐஏஎஸ் அதிகாரி.பிளம்பரின் வழக்கமான வாடிக்கையாளர்களின் ஒருவர்.தனதுபணத்தை பிளம்பரின் வங்கிக் கணக்கில் போட ஐஏஎஸ் அதிகாரி கோரினார்.நம்பகமான நபர்கள் சிலரை திரட்டும்படி பிளம்பரை அவர் கேட்டுக்கொண்டார்


4எங்கள் வீட்டில் வேலைபார்க்கும் பெண்மணியிடம் அவர் வசிக்கும் பகுதியின் உள்ளூர் அரசியல் பிரமுகர் தனது பணத்தை அவரது வங்கிக்கணக்கில் போடச் சொன்னார். இதுபோல் பலரையும் அவர் அமர்த்தி இருப்பதாக அந்த அம்மாள் கூறினார்.ஏதாவது பிரச்சினை என்றால் அந்தபிரமுகர் தான் உதவுகிறார் என்பதால் அவருக்கு உதவி செய்யவேண்டியது தன் கடமை என்று கூறினார்.
4.வங்கி ஊழியர்கள் கல்விக்கடன் திட்டத்தில் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு

முன்னுரிமை தருவது போலவே செல்லாத நோட்டுகளை மாற்ற உதவிசெய்ததை நான் அறிவேன்.வங்கி ஊழியர்கள் வீட்டில் செல்லாகாசை தந்து விட்டு மறுநாள் புதியநோட்டுகளை பெறமுடிந்தது.


5.வயதான ஒருவர் தனது வங்கி கணக்கை நீண்ட காலமாக பயன் படுத்தாமல் இருந்தார் .பணமாற்று நடந்து கொண்டு இருந்த போது அவரதுகணக்கில் ஒரு பெரிய தொகை டெப்பாஸிட் செய்யப்பட்டதாக அவருக்கு எஸ்எம்எஸ் வந்தது.அவர் பயந்துபோய் வங்கிக்கு ஓடினார்.தவறாக வரவு வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.தவறாக வரவு வைக்கப்பட வில்லை.செயல்படாத  நிலையில் உள்ள கணக்குகளில் மற்றவர்கள் பணம் வரவுவைக்கப்பட்டு பிறகு டிடிகளாக மாற்றி கொள்ளப்பட்டது! இன்னும் நிறைய இருக்கின்றன! உங்களுக்கு இப்படிப் பட்ட அனுபவம் உண்டா? சொல்லுங்கள்!

நன்றி; வசந்தன் பெருமாள்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.