அமித்ஷா அவர்களின் மகன் திரு. ஜெய்ஷா அவர்கள் மீது "தி ஒயர்" என்ற மின் இதழ் அவதூறு பரப்பிய போது அந்த இதழின் ஆசிரியர், கட்டுரை ஆசிரியர் ஆகியோருக்கு எதிராக ஜெய்ஷா மானநஷ்ட வழக்கு தொடர போவதாக தெரிவித்தார்.

உடனே கருத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வந்துவிட்டதாக இடதுசாரி ஊடகவியலாளர்களும், அவர்களின் வழித்தோன்றல்களும் கதறினார்கள். நேர்மையானவர்களாக இருந்திருந்தால் வழக்கை சந்திக்க முன்வந்திருப்பார்கள். போகிறபோக்கில் சேற்றை மற்றவர் மீது வாரி இறைத்து விடலாம்; கேட்க யாரும் வரமாட்டார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு. ஆனால் பாதிக்கப் பட்டவர் வழக்கு தொடர்ந்தால் கதறுவார்கள்.

அதேபோல் ஒரு நிலைமை தான் நடிகர் ஜோசப் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப் படத்திற்கும் வந்துள்ளது. அரசாங்கத்தின் திட்டங்கள் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கில் பொய்யான, ஆதாரமற்ற வசனங்களை பேசிவிட்டு அதற்கு எதிர்ப்பு கிளம்பும்போது கருத்துரிமை பாதிக்கப்படுவதாக தொடரச்சியாக புலம்பி வருகிறார்கள்.

உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும் என்பது விதி. அவதூறு பரப்பினால் அதற்கான விளைவுகளையும் சந்தித்தே ஆக வேண்டும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் ராஜிவ்கொலை பற்றிய குற்றப்பத்திரிக்கை திரைப்படம் வெளியாக விடாத காங்கிரஸ் கட்சியினரும், கம்யூனிஸ்ட்களின் படுகொலைகளை தோலுரித்த TP 51 என்ற படத்தை வெளியிடாமல் தடைபெற்ற கம்யூனிஸ்டுகளும் கருத்து சுதந்திர வகுப்பெடுப்பது தான் கேலிக்கூத்து.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.