மெர்சல் படத்தை எதிர்ப்பதன் மூலமாக அந்தப்படத்தை வெற்றிப்படமாக்கி விட்டோம் என்றும், இதெல்லாம் தவறு … நாளை வேறொரு அமைப்பு இதே போல செய்தால் நாம் ஏற்போமா என்றும் சில நண்பர்கள் சொல்கிறார்கள்… அவர்களுக்கு   சில விளக்கங்கள்…

 

முதலாவதாக , பாஜக எதிர்ப்பால்தான் படம் வெற்றி பெற்றது என்பதே தவறு… இதற்குமுன் விஜய் படங்கள் நன்றாக ஓடியதே  இல்லையா என்ன? இனிப்பில் விஷத்தை தடவிக்கொடுத்தால் அதை மருந்தாக உண்பதே தமிழர்கள் வழக்கம்…காலம் காலமாக இங்கு அதுதான் நடக்கிறது…தமிழையும் தமிழர்களையும் மிகக்கேவலமாக திட்டித்தீர்த்த ஈ.வெ.ராதான் இங்கு தமிழர் தந்தையாக முன்நிறுத்தப்படுகிறார்…

 

நாம் இருப்பது தமிழகம் என்பதை மறந்துவிடவேண்டாம்… இங்கு தமிழ் சினிமாதான் ஐம்பது வருடமாக தமிழகத்தை ஆள்கிறது….ஆனானப்பட்ட காமராஜராலேயே சினிமா கவர்ச்சியை எதிர்கொள்ள முடியவில்லை….நாம் எல்லோரும் 1967 ம் ஆண்டு காமராஜரின் தோல்வியை மட்டுமே  பேசிக்கொண்டிருக்கிறோம்… ஆனால் 1971 ம் ஆண்டு நடந்த சட்டமன்றத்தேர்தல் நிலவரம் நம்மில் பலருக்கும் தெரியாது…அப்போது காங்கிரஸ் வெற்றிபெறும் நிலையில் இருந்தது…. கருணாநிதிக்கு எதிரான அலை பலமாக இருந்தது…இப்படியே போனால் நாம் ஜெயிக்கமுடியாது என்பதைத்தெரிந்துகொண்ட கருணாநிதி எம்.ஜி.ஆர் காலில் போய் விழுந்து பிரச்சாரத்துக்கு அழைத்துவந்தார்….எம்.ஜி.ஆரின் சூறாவளி சுற்றுப்பயணம் தேர்தல் முடிவுளை மாற்றியமைத்தது….[ தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றிய ஆசிரியர்கள் துணையுடன்ப் திமுகவினர் கணிசமாக போட்ட கள்ள ஓட்டும் ஒரு காரணம்…]

திமுக மீண்டும் ஆட்சியமைத்தது….

 

1967 முதல் இன்றுவரை சினிமா தொடர்பு இல்லாத அவரும் வென்று முதல்வரானதில்லை…அதுமட்டுமல்ல காமராஜருக்குப்பிறகு இரண்டு கழகங்களுக்கும் மாற்றாக இன்னொரு கட்சியை கொண்டுவர எத்தனையோ முயற்சிகள் நடந்தன… எதுவும் பலிக்கவில்லை….கழகங்கள் இல்லாத இன்னொரு கட்சி பத்து சதவீத ஓட்டுப்பெற இன்னொரு நடிகரான விஜயகாந்த கட்சி ஆரம்பித்த பிறகுதான் முடிந்தது….அதனால்தான் இரண்டே படம் நடித்தவனெல்லாம் முதல்வர் கனவில் மிதக்கிறான்…இங்கு சினிமாதான் எல்லாம்….

 

 சினிமாவில் வருவதை உண்மை என்றும் நம்பும் பெரும்கூட்டம் வெளியே இருக்கிறது…அதுதான் பெருவாரியாக ஓட்டும் போடுகிறது…. சமூக வலைத்தளங்களில் உட்கார்ந்துகொண்டு எலீட் உபதேசம் செய்யும் பெரும்பாலானோர் வாக்குச்சாவடிப்பக்கம் போவதே இல்லை…

 

சரி…. ஏன் எதிர்க்கிறோம்? காரணம் வேறு வழியில்லை…. ஐம்பது ஆண்டுகாலமாக ஹிந்து எதிர்ப்பு , பிரிவினைவாத விஷத்தில் ஊறிப்போயிருக்கிறது இந்த மாநிலம்… இங்கு எதிர்த்தால் மட்டுமே காரியம் நடக்கும்…சென்சார் போர்டு , பத்திரிக்கைகள் , சமூக வலைத்தளங்கள் , அரசு நிர்வாகம் , நீதிமன்றங்கள் அனைத்தும் ஹிந்துவிரோதிகளால் நிரம்பி வழிகின்றன… இங்கு நியாயமாக பேசினால் எந்த காரியமும் நடக்காது…

 

கமலஹாசன் மன்மதன் அம்பு படத்தில் வைத்த ஸ்ரீ ஆண்டாளுக்கு எதிரான ஆபாசக்குப்பையை ஹிந்துமுன்னணியின் எதிர்ப்புதான் நீக்க வைத்தது…சொல்லப்போனால் பாஜகவின் எதிர்ப்பில் கடுமை இல்லை என்பதே உண்மை…

 

 நண்பர் Pugal Machendran Pugal சொன்னதுபோல  நாங்கள் படப்பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடவில்லை…. மௌன்ட்ரோட்டில் மறியல் செய்யவில்லை…தியேட்டர் ஸ்க்ரீனை கிழிக்கவில்லை…சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றுதான் சொன்னோம்..படத்தில் வந்த தப்பும் தவறுமான  வசனக்களுக்கு மாற்றாக உண்மை நிலவரத்தை எடுத்துரைத்தோம்… இதோ  , வடமாநில சேனல்களில் அந்தப்பட வசனங்களை கிழித்து தொங்கவிட்டுக்க்கொண்டிருக்கிறார்கள்…

 

இந்த எதிர்ப்பு கூட இல்லையென்றால் நாளை நிலவரம் கட்டுக்கடங்காமல் போய்விடும்…ஏற்கனவே பத்திரிக்கை உலகம் ஹிந்துக்களுக்கும் , தேசத்துக்கும் எதிரான விஷமப்பிரச்சாரத்தில் முழுமூச்சில் ஈடுபட்டுள்ளன…முழுக்க முழுக்க ஹிந்துவிரோதிகளின் பிடியில் உள்ள தமிழ் சினிமாவும் இப்படியே செய்ய அனுமதித்தால் நிலவரம் கட்டுக்கடங்காமல் போய்விடும்…யாருக்கு எந்த மொழியில் பேசினால் புரியுமோ  , அந்த மொழியில் பேசித்தான் ஆகவேண்டும்…இந்த திருட்டுப்பூனைகளுக்கு மணிகட்டியே ஆகவேண்டும்…

 

எங்களால்  முடிந்ததை நாங்கள் செய்கிறோம்… உங்களால் முடிந்தால் ஆதரவு கொடுங்கள்… இல்லாவிட்டால், 

 

சற்றே விலகியிரும் பிள்ளாய்…

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.