உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கும்வகையிலும், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும், நாடுமுழுவதும், 83 ஆயிரம் கி.மீ.,க்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட உள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஏழுலட்சம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப் பட உள்ள நெடுஞ் சாலை திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர், நரேந்திரமோடி தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இதில், நாடு முழுவதும், 83 ஆயிரம் கி.மீ., நீள நெடுஞ் சாலை அமைக்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. இதற்காக, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 7 லட்சம்
கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.
 

இதுகுறித்து மத்திய அரசின், நெடுஞ்சாலைதுறை உயரதிகாரிகள் கூறியதாவது:நாட்டின் மிகப் பெரிய உள்கட்டமைப்பு மேம்பாட்டுதிட்ட ஒப்புதலாக இது அமைந்துள்ளது. 'பாரத் மாலா' எனப்படும், நாட்டின் எல்லையோர பகுதிகளை இணைக்கும்திட்டத்தின் முதல்கட்டமான, 3.5 லட்சம் கோடி ரூபாய் செலவில்,40 ஆயிரம் கி.மீ., சாலைகள் அமைக்கும்திட்டமும், இதில் அடங்கும்.வாகனப் போக்குவரத்து நெரிசல்குறைந்தால், பொருட்களை ஒருஇடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்து செல்வது சுலபமாகும்.

தற்போதைய மோசமான சாலைகள், போக்கு வரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால், ஒரு லாரி சராசரியாக ஒருநாளில் 250 முதல், 300 கி.மீ., பயணத்தையே மேற்கொள்ளமுடிகிறது. வளர்ந்த நாடுகளில், சராசரியாக ஒரு நாளில், 800 கி.மீ.,யை ஒரு லாரி கடக்கிறது.
 

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நெடுஞ் சாலை திட்டத்தில், பலபொருளாதார பாதைகள் அமைக்கும் திட்டமும் அடங்கும். மும்பை – கொச்சி – கன்னியாகுமரி, பெங்களூரு – மங்களூரு, ஐதராபாத் – பனாஜி, சம்பல்புர் – ராஞ்சி உள்ளிட்டவை இதில் அடங்கும். பாரத் மாலா திட்டத்தில், 44 பொருளாதார பாதைகள் திட்டத்தை செயல்படுத்தமுடியும் என, கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

'பாரத் மாலா' திட்டம் என்ன?


வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, தங்க நாற்கர சாலை திட்டம் உள்ளிட்டவை அடங்கிய, தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டம் நிறைவேற்றபட்டது. அந்ததிட்டத்துடன், நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங் கள் உள்ளிட்டபகுதி களிலும், சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளையும் இணைக்கும் வகையில் சாலைகள் அமைக்க உருவாக்கப் பட்டது, 'பாரத் மாலா' திட்டம். இதற்கு, 10 லட்சம்கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.

இந்ததிட்டத்தின் கீழ், குஜராத்,ராஜஸ்தான் மாநிலங்களில் துவங்கி, பஞ்சாப் வழியாக, இமயமலை பிராந்தியத்தில் உள்ள, ஜம்மு – காஷ்மீர், ஹிமாச்சலப்பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்கள் வரை நெடுஞ்சாலை அமைக்கப் படும். உத்தர பிரதேசம், பீஹார் மாநிலங்களில் எல்லைப் பகுதி வழியாக, மேற்கு வங்கம், சிக்கிம், அசாம், அருணாசலப் பிரதேசம் மற்றும் மியான்மர் நாட்டின் எல்லையில் உள்ள மணிப்பூர், மிசோரம் வரை நெடுஞ்சாலை அமைக்கும்பணி நீட்டிக்கபடுகிறது. 51 ஆயிரம் கி.மீ., சாலைகள் இந்த திட்டத்தின் கீழ் அமைக்கப்படும்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.