கங்கைநதியை தூய்மைப்படுத்துவதற்காக கழிவுகளை உண்ணும் நுண்ணு யிரிகளை பயன்படுத்தும் நவீன தொழில்நுட்ப முறையை கையாள திட்டமிடப் பட்டுள்ளது. கங்கை நதியில் ஏராளமான கழிவுகள் கலந்து சுகாதார மற்ற முறையில் காணப் படுகின்றது. இதனையடுத்து தேசிய கங்கை நதி தூய்மைஇயக்கம் (என்எம்சிஜி) சார்பில் கங்கை நதியை தூய்மைப் படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் படி ஒவ்வொரு மாநிலத்திலும் கங்கையில் கழிவு நீர் கலக்கும் இடத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையை அமைத்து சுத்திகரிக்கப் பட்ட நீர் கங்கையில் கலக்கும்படி செய்ய திட்டமிடப் பட்டது. ஆனால் இந்த நடைமுறையை பின் பற்றுவதற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் தேவைப்படும். இதற்குள்ளாக கங்கைநதி மேலும் மாசடையும் அபாயம் நிலவுகிறது. இந்நிலையில் கால அளவை குறைக்கும்வகையில் நவீன முறையை பயன்படுத்துவதற்கு தேசிய கங்கை நதி தூய்மை அமைப்பு திட்டமிட்டுள்ளது.
 
இதன்படி உயிரிமருத்துவ தொழில்நுட்பத்தின் மூலம் நுண்ணுயிரிகளை பயன் படுத்தி கங்கையை சுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப் படவுள்ளது. இதன் பாசி வடிவில் உள்ள இந்த நுண்ணுயிரிகளை விடுவதன் மூலம் அவைகங்கையில் உள்ள கழிவுகள், எண்ணெய் படலம் உள்ளிட்டவற்றை உண்டுவிடும். இந்த நுண்ணுயிரிகள் மூலம் கங்கைநீர் மாசுபடுவது பெருமளவில் தடுக்கப்படும். மேலும் இந்தநுண்ணுயிரிகள் துர்நாற்றத்தை ஏற்படுத்தாது. இதனால் பாசி படர்ந்திருந்தாலும் அதனால் பாதிப்பு ஏற்படாது. இதுமட்டுமின்றி ஆபத்தான ரசாயனங்களும் நுண்ணு யிரிகளால் குறைக்கப்படும். பாட்னாவில் உள்ள பகர்கன்ச் நளாவில் வெற்றிகரமாக, இந்த பாசி நுண்ணு யிரிகளை கொண்டு சோதனை செய்யப் பட்டுள்ளது.

இதனையடுத்து தேசியகங்கை நதி தூய்மை இயக்க அதிகாரிகள், மேலும் இரண்டு சோதனை திட்டங்களுக்கு சமீபத்தில் அனுமதி அளித்துள்ளனர். இதன்படி பாட்னா மற்றும் அலகாபாத்தில் பாசிகளை கொண்டு சோதனை செயல் படுத்தப்படவுள்ளது. இதனையடுத்து 4 மாநிலங்களில் அடையாளம் காணப் பட்டுள்ள 54 கழிவுநீர் வடிகால்களில் இந்தமுறை கையாளப்படவுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 30, மேற்குவங்கத்தில் 20, பீகாரில் 3 மற்றும் ஜார்கண்டில் ஒரு கழிவு நீர் வடிகால் என 54 இடங்களில் இந்த நுண்ணுயிரி முறையை பின்பற்றி கங்கை நிர் மாசடைவது தடுக்கப் படவுள்ளது. இது தொடர்பாக திட்ட அதிகாரிகள் கூறுகையில்,

“கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை திட்டத்தினை செயல்படுத்துவதற்கு நீண்டகாலம் ஆகும். இடைப்பட்ட காலத்தில் கங்கை மற்றும் கிளை நதிகளில் தொடர்ந்து கழிவு நீர் கலந்துகொண்டே இருக்கும் எனவே கழிவுகள் அதிகரிப்பதை தடுப்பது அவசியமாகும். எனவே தான் இந்த முறையை தேர்ந்தெடுத்துள்ளோம். இந்தமுறை மிகவும் எளிதானது. செலவும் மிககுறைவாகும். வடிகாலில் கலக்கும் கழிவு நீரின் அளவை பொறுத்து ரூ.7 லட்சம் முதல் ரூ.17 கோடி வரை திட்டத்திற்காக செலவாகும்” என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.