ஹலோ கமல்ஜீ ..நீங்க நடிச்ச சிம்லாஸ்பெஷலுக்கு கதை திரைக்கதை வசனம் எழுதின விசு நான்.. பெரிய அரசியல் வாதி ஆயிடுவீங்க வாழ்த்துக்கள். இந்து, மதமும் இந்துக்களும் வடிவேலுவோட பாஷைல சொல்லப்போனா எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்கங்கறதைப் புரிந்துகொண்டு, அவர்களை சீண்டி விட்டா, யாராவது எங்கேயாவது எகிறுவான், அவனைவச்சு பாலிடிக்ஸ் பண்ணலாம்னு யாரோ ஒருகுள்ள நரி உங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கு.

இந்து மதம் தீவிரவாதிகள் இல்லாதமதம் இல்லைன்னு சொல்ல முடியாதுன்னு நீங்க எதையோ வழக்கம்போல தலைய சுத்தி வளைச்சு மூக்கைத் தொடப்போக, யாரோ ஒருத்தன் எங்கேயோ மூளைல உங்களைத்தூக்கில போடணும்னு கதறப் போக, அரசியல்ல போணி ஆனவன் ஆகாதவன், அரசியலில் விளங்கினவன், விளங்காமபோனவன், அரசியல்ல கொடிகட்டிபறக்கறவன், கொடியை ஆடுமாடு மேயவிட்டவன் எல்லாரும், நான், நீன்னு போட்டி போட்டுக்கிட்டு டிவி முன்னாடி வந்து வரிசைல நிக்கறாங்க.

அவங்கவங்க மேதாவிலாசத்தை காட்ட. ஊடகத்துக்கு அடுத்த 15 நாளைக்குத் தீனிகிடைச்சாச்சு. அடுத்தது இருக்கவேஇருக்கு பாயின்ட்ஸ் நான் எடுத்துத்தரேன். பார்ப்பனன்.. ஆரியக் கூட்டம்.. கைபர்/போலன் கணவாய்.. ஆப்கானிஸ்தான்ல ஆடுமாடு மேச்ச கூட்டம்…. இப்படி ஒவ்வொண்ணா எடுத்து விடுங்க, பிச்சுக் கிட்டு போகும்.

பாவம் உங்களுக்கும் வீட்டுல பொழுதுபோக வேணாமா, யாருமே இல்லை. தனிக்கட்டை, வயசும் ஆயாச்சு. ஆமாம் உங்களுக்கு BJP மேல அப்படி என்னசார் கோவம்? சென்சார் போர்டில உங்களுக்கு வேண்டாத வங்களை அதிகாரி ஆக்கினாங்களே அதெல்லாம் இருக்காது அவர் இதுக்கெல்லாம் மேல பாத்தவர்ன்னு நான் சொல்லிட்டேன்.

அது இருக்கட்டும்சார் ஒழுங்கா வரி கட்டறீங்களாமே… அப்படியா? சூப்பர்… புககுல காட்டற வரவுக்குத் தானே? அதாவது 100 ரூபாய் வரும்படின்னா, அதை 40 ரூபாய்ன்னு புக்குலகாட்டி, அந்த 40 ரூபாய்க்கு ஒழுங்கா வரி கட்டறீங்க அதானே.. அப்பமீதி 60 ரூபாய் கருப்புதானே.
புரியும்படியாக சொல்லுங்க நான் ஒரு ஞான சூனியம், ஒருயோசனை பையில ஒருமைக் வச்சுக்குங்க, நாளைக்கே நெய்வேலிபோங்க, பழுப்பு நிலக்கரி சுரங்கத்து மேல ஏறிநின்னு சும்மா சுத்தி வேடிக்கை பாருங்க, கூட்டம்கூடும் அது போதும். அதுக்குப் பேருதான் பப்ளிசிட்டி ஸ்டன்ட். உனக்கென்ன மேலே நின்றாய் ஓ கமலஹாசா ன்னு பாட்டு எங்கேயோ கேக்குது.. ஜமாய்ங்க…!

பா.ஜ.,வை சேர்ந்தவரும், நடிகரும், இயக்குநருமான விசு, கமல் குறித்து அவரது பாணியில் ஒரு அறிக்கை வெளியிட்டு வெளுத்து வாங்கியது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.