பிரதமர் நரேந்திரமோடி சிறப்பான முறையில் ஆட்சி செய்கிறார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி புகழாரம் சூட்டினார்.

கருணாநிதி – மோடி சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தசந்திப்பு தொடர்பாக கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி ‘தி இந்து’வுக்குஅளித்த சிறப்புப்பேட்டி:

கருணாநிதி – மோடி சந்திப்பை எப்படி பார்க்கிறீர்கள்?

நரேந்திரமோடி இந்தியாவின் பிரதமர். கருணாநிதி நாட்டின் மிகமூத்த அரசியல் தலைவர். இருவரும் மக்கள் செல்வாக்கு பெற்றதலைவர்கள். உடல்நலக் குறைவால் ஓய்வெடுத்து வரும் எனது தந்தை கருணாநிதியையும், தாயார் தயாளு அம்மாளையும் பிரதமர் மோடி நேரில்சந்தித்து நலம் விசாரித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

மோடி வருகை குறித்து உங்களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டதா?

பிரதமர் வந்த 6-ம் தேதி காலையில் தான் எனக்கு தகவல்கிடைத்தது. முன்கூட்டியே தெரிந்திருந்தால் நானும் சென்னை வந்திருப்பேன். மோடிசந்திப்பு கருணாநிதியின் பல லட்சக்கணக்கான உண்மையான தொண்டர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இது கருணா நிதிக்கும், அவரது தொண்டர்களுக்கும் புத்துணர்வைத் தரும்.

இந்தசந்திப்பின் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாக நீங்கள் நினைக்க வில்லையா?

அதுபற்றி நான் கவலைப் படவில்லை. கருணாநிதியை சந்தித்தமோடி அவரது கரங்களைப் பற்றிக்கொண்டு, பிரதமர் இல்லத்துக்கு ஓய்வெடுக்க வருகிறீர்களா எனக் கேட்டது என்னை நெகிழச் செய்துள்ளது. எனவே, இதற்கு அரசியல்நோக்கம் கற்பிக்க விரும்பவில்லை.

மோடி வருகைக்குப்பிறகு பாஜக தலைவர்களை தொடர்புகொண்டு பேசினீர்களா?

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை தொலை பேசியில் தொடர்புகொண்டு நன்றி தெரிவித்தேன். மேலும் எனது பெற்றோரை நேரில்சந்தித்து நலம் விசாரித்த பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட முறையில் நன்றிதெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளேன்.

கருணாநிதி – மோடி சந்திப்பு தமிழக அரசியலில் ஏதாவதுதாக்கத்தை ஏற்படுத்துமா?

மூத்த அரசியல் தலைவருக்கு நாட்டின் பிரதமர் அளித்தமரியாதையே இந்தசந்திப்பு. இது மோடியின் அரசியல் நாகரிகத்தை வெளிப் படுத்துகிறது. மோடி சிறப்பான முறையில் ஆட்சிசெய்கிறார். ‘தினத் தந்தி’ நாளிதழின் பவளவிழாவில் மோடியின் பேச்சு அவரது ஆளுமைத்திறனை வெளிப்படுத்தியது. நாட்டின் முன்னேற்றத்துக்காக அவர் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த வாரம் கருணாநிதியை சந்தித்தீர்களே, அவரது உடல் நிலை எப்படி உள்ளது?

அண்ணன் மு.க.முத்துவின் பேரன் திருமணத்தில் அப்பாவை குடும்பத்துடன் சந்தித்தேன். என்னை அடையாளம்கண்டு, கைகளை பற்றிக் கொண்டு அவர் பேசமுற்பட்டார். அந்தத் தருணம் மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்தது. அவரது உடல் நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு மு.க.அழகிரி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.