குஜராத் மாநில் முதல்வர் நரேந்திரமோடியின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏராளமான பொதுமக்கள் மட்டும் பா ஜ க தலைவர்கள் குவிந்து வருகின்றனர் .

அமைதி, மத நல்லிணக்கம், ஒற்றுமை போன்றவற்றை வலியுறுத்தி

குஜராத் பல்கலை கழக வளாகத்தில் நரேந்திரமோடி சனிக்கிழமை உண்ணாவிரதத்தை துவங்கினார் . நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) அவருக்கு ஆதரவுதெரிவிக்கவும், வாழ்த்து கூறியும் உண்ணாவிரத அரங்கில் பொது மக்கள் மட்டும்மின்றி கட்சி தலைவர்களும் பெரும் அளவில் திரண்டனர்.

அவர்களில், பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் பிரகாஷ்ஜாவேடகர், ஷாநவாஸ் ஹுசேன், ஜம்மு, காஷ்மீர் பாரதிய ஜனதா தலைவர் ஜெகதீஷ் முஹி, தில்லி பாரதிய ஜனதா தலைவர் ஜிதேந்திர குப்தா, பிகார் பாரதிய ஜனதா தலைவர் சி.பி. தாக்கூர்,பாரதிய ஜனதா மகளிர் அணிதலைவர் மீனாட்சிலேஹி போன்றோர் குறிப்பிடதக்கவர்கள். விஜய் கோயல், அஸ்வின் சூபே. அஜித்கட்டாரி,அருண்சிங் போன்றோரும் உண்ணாவிரத மேடைக்கு வந்தனர்.

பா ஜ க தலைவர்கள் மற்றும் தொண்டர்களை தவிர, கிறிஸ்துவ மத தலைவர்கள், 10000த்துக்கும் அதிகமான முஸ்லிம்கள், வைர வியாபாரிகள் சங்கத்தினர், போன்றவர்களும் உண்ணாவிரததில் பங்கேற்றனர்.

அரங்கில் திரண்ட அனைவரும், மோடிக்கு வாழ்த்துதெரிவித்தது அவரது முயற்சிக்கு தங்களது ஆதரவை தெரிவிபதாக உறுதி தந்தனர் . நாட்டின் ஒட்டு மொத்த கவனத்தையும் மோடியின் உண்ணாவிரதம் ஈர்த்து வருகிறது .

இறுதி நாளான இன்று , நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பா ஜ க தொண்டர்கள், தலைவர்கள், தேசிய_ஜனநாயக கூட்டணி தலைவர்கள், பல்வேறு மததலைவர்கள் மற்றும் அமைப்பினர் பெருமளவில் திரண்டு வருகின்றனர்

TAGS; நரேந்திரமோடியின் , நரேந்திரமோடி  , நரேந்திரமோடி சனிக்கிழமை

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.