கடந்த ஆண்டு நவம்பர் 8 ம்தேதி பிரதமர் மோடி எடுத்த, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு, பொது மக்களிடையே ஆதரவு அதிகம் உள்ளதாக எகனாமிக் டைம்ஸ் நடத்திய ஆன்லைன்சர்வேயில் தெரியவந்துள்ளது.


பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், வேலை இழப்பு, ஜி.டி.பி சரிவு, சிறுதொழில் பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் பலரும் தெரிவித்தனர். ஆ.ர்.பி.,ஐ முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜனே கூட பிரதமரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.


பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்தநிலையில், அன்று இதனை விமர்சித்த பலரும் இன்று ஆதரவு தெரிவித்துள்ளனர். மோடியின் இந்த நடவடிக்கைக்கு மக்களிடையே ஆதரவு பெருகிஉள்ளது.
 

பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்பட்டதன் ஓராண்டு நிறைவை முன்னிட்டு எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கை ஆன்லைன் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. 10 ஆயிரம் பேர் இதில் வாக்களித்தனர்.


இதில், ஒட்டு மொத்தமாக பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எப்படிபார்க்கிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. 38 சதவீதம் பேர் இந்ததிட்டம் வெற்றி அடைந்துள்ளது எனவும், 30 சதவீதம் பேர் இரண்டும்கலந்து ஏற்பட்டுள்ளது எனவும், வெறும் 32 சதவீதம் பேர் மட்டுமே தோல்வி அடைந் துள்ளது எனவும் கூறி உள்ளனர்.


பொருளாதாரத்தில் இது நீண்டகால பாதிப்பை ஏற்படுத்திஉள்ளது என 26 சதவீதம் பேர் மட்டும் தெரிவித்துள்ளனர். 32 சதவீதம்பேர் பொருளாதாரத்தில் வெளிப்படைதன்மை ஏற்பட்டுள்ளது எனவும், 42 சதவீதம் பேர், சிலபாதிப்புக்களை ஏற்படுத்தி இருந்தாலும் அதிக வெளிப்படை தன்மை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

 

வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என 23 சதவீதம்பேர் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளனர். வேலை வாய்ப்பில் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அது குறுகியகால பாதிப்பே என 45 சதவீதம் பேரும், பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என 32 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
இன்னொரு கேள்விக்கு, 77 சதவீதம் பேர் பண மதிப்பிழப்பு, வேலைவாய்ப்பில் எந்தபாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என தெரிவித்துள்ளனர்.

ஒரு வேளை மோடி ரூ.2000 நோட்டையும் வாபஸ்பெற்றால் அது எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு, 56 சதவீதம் பேர் கறுப்புபணம் வைத்திருப்பவர்களையே பாதிக்கும் எனவும், 31 சதவீதம்பேர் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்றும், 13 சதவீதம் பேர் நேர்மையாக தொழில் செய்பவர்களை பாதிக்கும் என தெரிவித்துள்ளனர்.

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.