அதிமுக பொதுசெயலாளர் சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதர வாளர்கள் வீடுகளில் நடத்தப்படும் வருமான வரி சோதனை யானது கடந்த சிலமாதங்களுக்கு முன்னரே அதிகாரிகளால் திட்டமிட்டி ருந்ததாக கூறப்படுகிறது. 

வரிஏய்ப்பு,அன்னிய செலாவணி மோசடிபுகார் தொடர்பாக தினகரன் குடும்பத்திற்கு சொந்தமான ஜெயா டி.வி, ஜாஸ் சினிமாஸ், நமது எம்.ஜி.ஆர் உள்ளிட்ட இடங்களில் காலை முதல் வருமான வரித்துறையினர் குடைந்து குடைந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

இது முழுக்க முழுக்க அரசியல் பின்னோக்கம் கொண்டது.தினகரனின் செயல்பாடுகளை முடக்குவதற்காக மத்திய பா.ஜ.க அரசு மேற்கொண்ட ரெய்டு என்பதை பா.ஜ.க மறுத்துள்ளது.

சென்னை மட்டுமின்றி  பெங்களூர், மன்னார்குடி, கூடலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 190 இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது. தமிழகத்தில் முதல் முறையாக 190 இடங்களில் அதுவும் ஒரேநேரத்தில் சோதனை நிகழ்த்துவது என்பது இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது.

ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் அலுவலகங்கள், ஜாஸ் சினிமாஸ், தினகரனுக்கு சொந்தமான புதுவை அருகே உள்ள ஆரோவில் பண்ணை வீடு, திவாகரனுக்கு சொந்தமான மன்னார்குடி கல்லூரி மற்றும் வீடு, விவேக்கின் வீடு, இளவரசியின் மகள் கிருஷ்ணப் பிரியாவின் வீடு, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சிவக் குமாரின் வீடு என ஏராளமான இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெறுகிறது.

 

மொத்தம்190 இடங்களில் ஒரேநேரத்தில் நடத்தப்படும் இந்த சோதனையில்,1500 முதல் 2000 அதிகாரிகள் ஈடுபடுத்தப் பட்டனர்.இதற்காக வெளி மாநிலங்களில் இருந்தும்  அதிகாரிகள் வரவழைக்கப் பட்டுள்ளனர்.

அதிமுகவின் பொதுசெயலாளர் சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவா ளர்கள் வீடுகளில் வருமான வரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்பது கடந்த சில மாதங்களுக்கு முன்னரே அதிகாரிகள் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. கடந்தவாரம் நடைபெறுவதாக இருந்த இந்த ரெய்டு சிலகாரணங்களுக்காக சற்று தாமதமாக இன்று நடைபெறுகிறது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.