சோமபாய் மோடி (75) பப்ளிக் ஹெல்த் டிபார்ட்மெண்டில் இன்ஸ்பெக்டராக இருந்து ரிடையரானவர். தற்போது வசிப்பது வாத்நகரில் இருக்கும் ஒரு சிறிய வீட்டில்.

அம்ருத்பாய் மோடி (72) 2005 இல் ஒரு பாக்டரியில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். கடைசியாக அவர் வாங்கிய சம்பளம் ரூ10,000/- தற்போது அஹமதாபாத்தில் ஒரு சிறிய ப்ளாட்டில் மகனுடனும், மருமகளுடனும் வசித்து வருகிறார்.

ப்ரஹ்லாத் மோடி (64) ஒரு சிறிய கடை ஒன்றை நடத்துகிறார். தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்துகிறார்.

பங்கஜ் மோடி (58) குஜராத் மாநிலத்தின் இன்பர்மேஷன் டிபார்ட்மெண்டில் அதிகாரியாக வேலை செய்கிறார். இருப்பவர்களுள் நல்ல நிலையில் இருக்கும் இவருக்கு காந்திநகரில் ஒரு 3 படுக்கை அறை கொண்ட ப்ளாட் சொந்தம். அங்கேயே வசிக்கிறார்.

மேலே குறிப்பிட்டிருப்பவர்கள் யார் என்று தெரிகிறதா….? ஆம்…. இவர்கள் அனைவரும் நம் பாரதப் பிரதமர் மோடிஜியின் உடன் பிறந்தவர்கள். இவர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்களுக்கு சொந்தமாக கார் கிடையாது. இவர்கள் யாருமே விமானத்தில் பயணித்ததும் கிடையாது.

எல்லோருமே மத்தியதர வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் இவர்களின் சகோதரர் குஜராத்தின் முதலமைச்சராக 12 வருடங்கள் இருந்தவர். பாரதத்தின் பிரதமராக 3 வருடங்களாக இருந்து வருகிறார்.

இப்போது மற்ற மோடிகளையும்… அதாவது நம் பிரதமரின் பங்காளிகளையும் பற்றி பார்க்கலாம்.

போகிலால் மோடி (67) ஒரு மளிகைக் கடை நடத்துகிறார்.

அரவிந்த் மோடி (64) பழைய பொருடகளை விற்கும் கடை ஒன்றை (சாதாரண நிலையில்) நடத்துகிறார்.

பரத் பாய் மோடி (55) ஒரு பெட்ரோல் பங்கில் அட்டெண்டராக வேலை செய்கிறார். இவரின் மாத வருமானம் ரூ6000/- இவர் மனைவி காய்கறி, பழங்கள், சிறிய உணவுப் பொட்டலங்கள் விற்று மாதம் ரூ3000/- சம்பாதிக்கிறார்.

அஷோக் மோடி (51) இவர் ஒரு சிறிய உணவுகடை (8*4) மற்றும் பட்டம் முதலியவைகளை விற்கும் கடை வைத்திருக்கிறார். அது ஒரு தகரத்தால் ஆன கடை. மாத வருமானம் ரூ5000/- இவர் மனைவி ஒரு உணவு விடுதியில் உதவியாளராக இருந்து கொண்டு ரூ3000/- சம்பளமாக ஈட்டுகிறார்.

மேலே கூறிய இந்த நான்கு பேருமே நம் பிரதமரின் தந்தை தாமோதர மோடியின் சகோதரர் நரசிம்ஹதாஸ் மோடியின் மகன்கள்.

மோடிஜியின் தாயார் ஒரு சிறிய 10 க்கு 8 அறையில் வசிக்கிறார். பாங்க், கோவில், மருத்துவமனைகளுக்கு ஆட்டோவில் பயணிக்கிறார்.

இப்படிப்பட்ட ஒரு பிரதமரைப் பற்றிதான் நம் தமிழ்நாட்டில்….

தங்கள் வாய்க்கு வந்ததைப் பேசுகிறார்கள். மீம்ஸ் போட்டு அவமானப் படுத்துகிறார்கள்…!

வெளங்கிடும் தமிழ் நாடு

நன்றி ராஜேஷ் ராவ்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.