சர்ச்சைக் குள்ளாகி இருக்கும் பத்மாவதி பட இயக்குநர் சஞ்சய் லீலாபன்சாலி மக்களின் உணர்வுகளுடன் விளை யாடுவதை வாடிக்கையாக கொண்டவர் என உ.பி. முதல்மந்திரி யோகி ஆதித்ய நாத் குற்றம் சாட்டியுள்ளார்.

சித்தூர்பகுதியை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து பத்மாவதி என்ற இந்தி திரைப்படம் தயாராகி உள்ளது. இந்தப்படம் வரும் டிசம்பர் மாதம் முதல் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறுதரப்பினர் இந்தப்படத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், திட்டமிட்டபடி, இந்தபடம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும்வரை பத்மாவதி படத்தை திரையிட அனுமதிக்கமாட்டோம் என உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநில அரசுகள் முன்னர் அறிவித்திருந்தன.

இந்நிலையில், ராஜபுத்திரர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் என்பதால் பத்மாவதி படத்தை குஜராத்தில் திரையிட அனுமதிக்கமுடியாது என அம்மாநில முதல் மந்திரி விஜய் ருபானி  உறுதிபட தெரிவித்துள்ளார்.

அகமதாபத் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜய்ருபானி, பத்மாவதி பட விவகாரத்தில் பிரச்சனைகள் உள்ளன. இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடு பவர்களுடன் எங்களது அணுதாபங்கள் சேர்ந்துள்ளது. எனவே, இந்தபிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் வரை பத்மாவதி படத்தை திரையிட அனுமதி அளிக்கமாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பேச்சு மற்றும் உணர்வு சுதந்திரத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. ஆனால், வரலாற்றை திரிப்பதையும், நமது மிகஉயர்ந்த கலாசாரத்தை களங்கப்படுத்து வதையும் நாங்கள் சகித்துக்கொள்ள முடியாது. மேலும், இங்கு விரைவில் சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளதால் சட்ட – ஒழுங்கு தொடர்பான எந்தபிரச்சனையும் ஏற்பட கூடாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.