ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சிதம்பரத்தையும் வழக்கில் சேர்த்து விசாரிக்கவேண்டும் என்று கோரும் சு.சாமியின் மனு சுப்ரீம்கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரத்தில் கடந்த மார்ச்மாதம் தற்போதைய நிதி அமைச்சக (பிரணாப் முகர்ஜி) அதிகாரிகள்குழு பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி உள்ள கடிதத்தை தாக்கல் செய்துள்ளனர் . இந்தகடிதம் தகவல் பெறும்

உரிமை சட்டதின் கீழ் பெறபட்டுள்ளது.

இந்த 14பக்க கடிதத்தில் இருக்கும் விஷயம் என்னவெனில் ; ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பாக நிதிஅமைச்சக அதிகாரிகள் ஏலம்விடத்தான் வேண்டும் என்று வலியுறுதினோம். இது நிதி_அமைச்சரின் ( ப.சிதம்பரம் ) கவனத்திற்க்கும் கொண்டு செல்லபட்டது. ப.சிதம்பரம் நினைதிருந்தால் ஏலம் மூலமாகதான் விற்கபட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கலாம்.

இவ்வாறு செய்திருப்பின் ஸ்பெகட்ரம் முறைகேட்டை தவிர்த்து பலகோடி இழப்பை தடுத்தியிருக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கடிதத்தின் அடிபடையில் சிதம்பரம் தனது மத்தியமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என பா ஜ க மற்றும் இடதுசாரிகள் வலியுறுத்தியுள்ளன.

{qtube vid:=cOBatoH7iV0}

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.