ஆர்.கே நகர் தேர்தலில் மாற்றத்தை கொண்டு வர நடிகர் கமல் பாஜகவுடன் கைகோர்த்தால் வரவேற்போம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார். கமல் மட்டுமல்ல யார் பாஜகவுடன் கைகோர்க்க முன் வந்தாலும் அவர்களையும் வரவேற்பதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த கேளம்பாக்கத்தில் பா.ஜ.,கட்சியின் ஆதிதிராவிடர் அணி சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அம்பேத்கர் வழங்கியநாளை முன்னிட்டு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் பங்கேற்றார்.

கூட்டத்திற்குப் பின்னர் அவர் செய்தியா ளர்களிடம் பேசியதாவது : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமா வளவன் பா.ஜ.க.வை மதவாதகட்சி என கூறுகிறார். சாதியவாதம் பேசும் கட்சியான விடுதலை சிறுத்தைகள்கட்சி பா.ஜ.க.வை மதவாதம் என்று கூறுகிறது.

தெலுங்கானா மாநிலத்தை உதாரணம்காட்டி பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீடு தர வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கைமூலம் கேட்டுக் கொண்டிருக்கிறார். பலவருடங்கள் தமிழகத்தை ஆட்சி செய்த திமுக. பிற்படுத்தப் பட்டோருக்காக என்ன செய்தது. ஆட்சி காலத்தில் எதையும் செய்யாமல் மத்திய, மாநில அரசுஅதிகாரங்கள் குறித்து தற்போது மட்டும் ஏன் அறிக்கை வெளியிட வேண்டும்.

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் இடைத் தேர்தலில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும். அந்தமாற்றத்தை கொண்டுவருவதற்கு கமல் மட்டும் அல்ல, யார் எங்களுடன் கைகோர்த்தாலும் பாஜக அதனை வரவேற்கும் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.