கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவு க்காக அவிநாசி சாலையில் அமைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி ரகு என்றபொறியாளர் பலியானார். இந்தசம்பவம் கோவையில் மட்டுமல்லாது தமிழகம் முழுக்க எதிரொலித்தது. அரசுநிதியில் அமைக்கப்பட்டுவரும் ஆபத்தான, விதிமீறல் பிளக்ஸ்பேனர்கள், கட் அவுட்டுகள் அகற்றப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது.

பிளக்ஸ்பேனர் பிரச்சினை குறித்து

பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா கூறும்போது, ‘சாலை போக்கு வரத்துக்கும், மக்களுக்கும் இடையூறாக பிளக்ஸ்பேனர் வைக்க கூடாது என்பதே பாஜகவின் நிலைப்பாடு. ஆனால் பேனர்கள் வைக்கலாம், அதில் உயிரோடு உள்ள தலைவர்கள் படங்களை வைக்கக் கூடாது என்ற வகையில் நீதிமன்றம் கூறியிருப்பதே முரண்பாடாக உள்ளது. கட்- அவுட் கலாச்சாரம் தவறான முன்னுதாரணம். இது தவிர்க்கப்படவேண்டியது’ என்றார்.

பாஜக மூத்த தலைவரும், எம்பி.,யுமான இல.கணேசன் கூறும் போது, ‘கோவையில் அலங்கார வளைவினால் ஏற்பட்ட உயிர்ப் பலி விபத்துதானா என்ற கேள்வியை எழுப்புகிறது. அதில் முழுமையான விசாரணை தேவை. அதேபோல கட் அவுட், பேனர்கள் வைப்பதில் நிச்சயம் வரைமுறைகள் தேவை. பலமாநிலங்களுக்கு சென்றிருக்கிறேன். ஆனால், தமிழகத்தைப்போல மக்களை பாதிக்கும் விளம்பரங்களை எந்தமாநிலத்திலும் பார்த்ததில்லை. தேர்தல் சமயங்களில் கூட அந்த நிலை இருக்காது. எனவே தமிழகம் நிச்சயம் மாறி ஆகவேண்டும். அதேசமயம், மறைந்த தலைவர்கள் படத்தைமட்டும் பேனர்களில் பயன்படுத்த வேண்டும் என்பதை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.