சுழற்சிமுறையில் தாழ்த்தப்பட்டோருக்கு தனித்தொகுதிகள் ஒதுக்குவதை முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பது கண்டனத்துக்குரியது என இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வர இருக்கிறது. உள்ளாட்சி மன்றத் தேர்தலில் இரு ஊர்களில் தாழ்த்தபட்டோர்க்கு ஒதுக்கப்பட்டுள்ளதை எதிர்த்து வருகிறார்கள் முஸ்லீம்கள். ஒன்று நெல்லிக்குப்பம், மற்றொன்று பேரணாம்பட்டு.

நெல்லிக்குப்பத்தில் சென்ற முறை பொது வேட்பாளராக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் கூட்டணிக் கட்சிகளால் தேர்ந்தெடுக்கபட்டார் என்பதால் இந்தமுறை சுழற்சி முறையில் வருகிற தனித் தொகுதி அந்தஸ்தை விலக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர் முஸ்லீம்கள். அதுபோல பேரணாம்பட்டை சுழற்சி முறையில் தாழ்த்தபட்டோருக்கு ஒதுக்குவதை எதிர்த்து முஸ்லீம் அமைப்புகள் (தவ்ஹீத் ஜமாத்) ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

பேரணாம்பட்டுத் தொகுதியில் நகரத்தில் மட்டும் சுமார் 22% முஸ்லீம்கள் இருக்கிறார்கள். இந்துக்கள்

பெரும்பான்மையாக உள்ள அந்த ஊரில் கடந்த சுமார் 30 வருடங்களாக முஸ்லீம்களே நிறுத்தப்பட்டு

வெற்றிபெற்று வந்துள்ளார்கள். இன்று சுழற்சிமுறையில் இதனைத் தனித் தொகுதியாக்கி ஒரு தாழ்த்தப்பட்டவரை ஏற்க முஸ்லீம்கள் மறுக்கிறார்கள். இதனை இந்துக்கள் கட்சிசார்பை கடந்து நினைவில் நிறுத்த வேண்டும். இந்த நிகழ்வுகள் முஸ்லீம் பெரும்பான்மையானால் என்ன நடக்கும் என்றும், முஸ்லீம்கள் தாழ்த்தபட்டோருக்கு கேடயம் அல்ல, கேடு என்பதை அந்த சமுதாயத் தலைவர்கள் உணர வேண்டும் என்றும் இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு ராம.கோபாலன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.