1 . குஜராத்தில் பா ஜ க 150 இடங்களில் வெற்றி பெரும்.

2 மோடியோ நானோ எங்களை ஹிந்து என்று அடையாள படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இல்லை..காங்கிரஸ் தலைவர் ராகுல் தன்னை இந்துவாக அடையாள படுத்திக் கொள்வதில் எங்களுக்கு ஆட்சபனை இல்லை. நாங்கள் குஜராத்தின் வளர்ச்சியை சொல்லி ஓட்டு கேட்கிறோம். மதப் பாகுபாடின்றி ஒட்டுமொத்த குஜராத்தின் வளர்ச்சிதான் எம் விருப்பம்.

3 . ராகுல் இப்போது போல் குஜராத் தேர்தல் முடிந்த பின்னும் கோவில்களுக்கு சென்று வருவார் என எதிர்பார்க்கிறேன்.

4 . எந்த மதத்தை சார்ந்தவரும் போட்டியிடலாம் ; உயர்பதவிக்கு வரலாம். ஒருவர் தமது மத அடையாளங்களை மறைப்பதால்தான் விவாதம் எழுகிறது.

5 . .நர்மதா அணையின் முழு உயரம் எங்கள் வாழ்நாளில் எட்டப்படும் என்று நினைக்கவில்லை. சாதித்துள்ளோம். குஜராத்தின் எல்லா மூலைகளுக்கும் தண்ணீர் சென்றடைகிறது. பருத்தி, காய்கறிக்களின் மகசூல் ஆறு மடங்கு உயர்ந்துள்ளது. பால் உற்பத்தியும் பல மடங்கு பெருகி உள்ளது.

6 . ஆறு மணி நேரமே கிடைத்த மின்சாரம் மாநிலத்தின் மூலை முடுக்குகளில் கூட 24 மணி நேரமும் கிடைக்க செய்துள்ளோம்.

7 பள்ளி மாணவர் சேர்க்கை 63 % இலிருந்து 99 % ஆக உயர்த்தி உள்ளோம். இடை நிற்றலை 38 % இலிருந்து 3 % ஆகக் குறைத்துள்ளோம்.

8 மோடி பிரதமரானவுடன் மத்திய அரசிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொகைகள் வந்து மாநிலம் சுபிக்ஷமாக உள்ளது.

9 . காங்கிரஸ் எங்கள் மீது தொடர்ந்து பொய் குற்றச் சாட்டுகளையே கூறிவருகிறது. 13000 பள்ளிகள் மூடப்பட்டதாக ராகுல் பொய் சொல்கிறார். ஒரே ஒரு பள்ளி கூட மூடப்படவில்லை. அவரால் மூடப்பட்ட ஒரே ஒரு பள்ளியின் பெயரை சொல்ல முடியுமா?

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.