"எது நடந்ததோ அது நல்லதற் கல்ல.பிறர் கையால் தமது வழிபாட்டுத்தலம் உடைபடும் போது எப்படிப்பட்ட வேதனை ஏற்படும் என்பதையாவது இப்போது முஸ்லிம்கள் உணர்ந்திருப்பார்கள்".

 #பாபர்மசூதி இடிக்கப்பட்ட பிறகு RSS தலைவர் தேவரஸ் கூறியது…

(இஸ்லாமிய ஆட்சியாளர்களால் #காசியில் உள்ள விஸ்வநாதர் ஆலயம்,#மதுராவில் இருந்த கிருஷ்னர் ஆலயம்,#குஜராத்தில் இருந்த சோமநாதபுரம் ஆலயம் போன்ற ஆயிரக்கணக்கான இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டு அங்கு மசூதிகள் கட்டப்பட்ட வரலாற்றை நினைவு படுத்தி RSS தலைவர் இவ்வாறு கூறினார்.)

 

டிசம்பர் 6  பாபர்மசூதி அயோத்தியில் இடிகப்பட்டு அந்த இடத்தில் தற்காலிகமான ராமர் கோயில் நிறுவப்பட்ட தினம்.. .அந்த வரலாறு மிக சுருக்கமாக உங்களுக்காக இங்கு பதிவு செய்யப் பட்டுள்ளது..

 

.நண்பர்களே! இது மிக நீண்ட காலமாக நடைபெற்ற இந்துக்களின் போராட்டமாகும்.பல ஆண்டுகளாக பெரும் பான்மையான இந்துக்கள் ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்ட இந்துக் கோயிலை இடித்துகட்டப்பட்ட மசூதியாகவே அதை கருதினர்.

 

பல போராட்டங்கள் நடை பெற்றன. 1528:-அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது.  இதைக் கட்டியவர் பாபரின் தளபதி பெயர் மிர் பாகி. 

பாபர் மசூதி கட்டப்பட்ட இடம் ராமர் பிறந்த இடம் என்றும், அங்கு 11-ம் நூற்றாண்டில் ராமர் கோவில் கட்டப்பட்டது என்றும், அந்தக் கோவில் மீது பாபர் மசூதியைக் கட்டிவிட்டார்கள் என்றும் இந்துக்கள் குற்றம் சாட்டினர்.

1853:- ராமர் பிறந்த இடம் தொடர்பாக இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் நடந்து 75 பேர் கொல்லப்பட்டனர்.

1857:- இந்து சாமியார் ஒருவர், பாபர் மசூதி வளாகத்தில் ஒரு சிறு பகுதியில் ராமர் கோவில் அமைத்தார்.

1859:- இந்துக்களும், முஸ்லிம்களும் தனித்தனியே வழிபாடு நடத்துவதற்கு வசதியாக சுவர் ஒன்றை அரசாங்கம் கட்டியது.

1934:- இந்து – முஸ்லிம் கலவரத்தில், பாபர் மசூதி சுவரும், ஒரு கோபுரமும் சேதம் அடைந்தன.

1983:- பாபர் மசூதி உள்ள இடத்தில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்ற இயக்கத்தை, விஸ்வ இந்து பரிஷத் தொடங்கியது.

 

1986:- இந்துக்களும் சென்று வழிபடுவதற்கு வசதியாக, பாபர் மசூதி கதவுகளைத் திறந்து விடும்படி, பைஜாபாத் மாவட்ட நீதிபதி கட்டளையிட்டார்.

 

1989:- பாபர் மசூதி அருகே இந்து கோவில் கட்ட ராஜீவ் காந்தி அரசாங்கம் அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து நடந்த கலவரங்களில் சுமார் 500 பேர் இறந்தனர்.

 

1990:- ராமர் கோவில் கட்ட ஆதரவு திரட்டும் நோக்கத்துடன் கஜினி முகமதுவால் இடிக்கப்பட்ட குஜராத் சோமநாதர் கோயிலில் இருந்து பாரதீய ஜனதா தலைவர் எல்.கே.#அத்வானி "ரத யாத்திரை" தொடங்கி னார். அயோத்தியில், ராமர் கோவில் கட்ட ஒரு லட்சம் தொண்டர்கள் ("கர சேவகர்கள்") திரண்டனர். போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

 

.1949இல் ராமர் சிலைகள் மசூதியுள் வைக்கப் பட்டது. அதை அகற்றக் கூடாது என்று கோர்ட்டுகளும் கூறின.  நீண்ட காலத்திற்கு அங்குள்ள கதவுகள் மூடப்பட்டிருந்தன. வழிபட வரும் பக்தர்கள் வெளியே நின்றுதான் வணங்கிச் சென்றனர். 

 

பின்னர் ராஜீவ் காந்தி காலத்தில்தான் கோர்ட் உத்தரவை ஏற்று பிப்ரவரி1 1986இல் ராமர்கோவிலின் பூட்டுக்கள் திறக்கப்பட்டு கதவுகள் திறக்கப்பட்டன. சுமார்2 கோடி பேர் வரிசையாக அமைதியாக வழிபட்டனர்.

 

ராஜீவ் காந்தி காலத்தில்தான் கோவிலுக்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது. அதாவது ஒரு அடையாளமாக மசுதிக்கு தொலைவில் ஒரு தலித் முதல் செங்கல்லை வைத்து அடிக்கல் நாட்டினார்.(இவர் பீகார் VHP தலைவர் காமேஷ்வர் சௌபல்)ஆயிரக்கனக்கானோர் திரண்டிருந்தும் இந்த நிகழ்ச்சி அமைதியாக நடந்து முடிந்தது.

 

பிறகு1990,ஜூன்23,24இல் மீண்டும் ஓர் அடையாள கரசேவை நடத்த தீர்மானிக்கப்பட்டது.(அதாவது செங்கல் வைத்து பூஜை செய்தல்). முலாயம்சிங் அரசு அமைதியாக நடக்கவிருந்த நிகழ்ச்சியை தடை செய்தது.

 

உத்தரப்பிரதேசமே நான்கு பக்கமும் அடைக்கப் பட்டது.மாநிலமே சிறைச்சாலை போல ஆனது. நாட்டின் பல பாகங்களில் இருந்து 10 லட்சத்திற்க்கும் மேற்ப்பட்ட மக்கள் சுமார் 250 கிலோமீட்டர் துரம் நடந்தார்கள்.வழியில் கைது செய்யப் பட்டார்கள்.சிறைச்சாலைகள் போதவில்லை.

 

அகிம்ஸை வழியில் நடைபெற்ற போராடத்தில் ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை.ராம நாமம் மட்டுமே உச்சரித்து கைதானார்கள்.இத்தனை பெரிய கூட்டம் அமைதியாக உலகில் எங்கும் நடைபெற்றதில்லை.

 

ஆனால் ராம நாமம் உச்சரித்து உத்தரப்பிரதேச எல்லைக்குள் நுழைந்தவர்களை போலீசார் சுட்டுக்கொன்றனர்.நுற்றுக்கணக்கான இந்துக்களின் ரத்தம் ஆறாக ஓடியது. 

 

முலாம்சிங் அரசால் சுட்டுக் கொல்லப்பட்ட நுற்றுக்கணக்கான பிணங்கள் சம்பவத்தை மறைக்க மூட்டை கட்டப்பட்டு நதியில் வீசப்பட்டன.இதை எதிர்த்து பிரமாண்டமான அமைதி பேரணி டெல்லி போர்ட் கிளப்பில் நடந்தது.நாட்டு விடுதலைக்குப் பிறகு நடந்த பேரணியைவிட பிரமாண்டமாக இருந்ததாக பத்திரிகைகள் எழுதின.

 

பிறகு அனுமதிக்கப்பட்ட இரண்டாவது கரசேவைக்கு லட்சக்கணக்கானவர்கள் அங்கு செல்வார்கள் என்பதை உச்சநீதிமன்றம் அறிந்திருந்தும் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உடனே விசாரிக்காமல் 1992 டிசம்பர் 11 தேதிக்கு தள்ளி வைத்தது.

பல ஆண்டுகள் பொறுமையாக காத்திருந்தும் அமைதி வழியில் போராடியும் நம்மால் இந்த அவமானச் சின்னத்தை எதுவும் செய்யமுடிய வில்லையே என்ற இந்துக்களின் ஆதங்கம் ,கோபமாக ,ஆத்திரமாக மாறியது.

அன்று ராம பஜனை செய்வார்கள் என்று எதிர்பார்த்த நரசிம்மராவ் அரசு நினைத்தது நடக்கவில்லை. தடுப்பு வேலிகளை உடைத்து உள்ளே நுழைந்து கையில் கிடைத்த ஆயுதங்களாளும்,கையாலுமே பாபர்மசூதி தரைமட்டமாக்கப் பட்டது 

 

.கஜினி முகம்மதுவால் இடிக்கப்பட்ட சோமநாதபுரம் கோயிலைப் போன்றுஆயிரக் கணக்கான இந்துக்களின் கோயில்களை இடித்த முஸ்லிம் மன்னர்களின் செயல்களையும் சகித்துக் கொண்ட சாதுவான இந்துக்கள், ஆயிரம் ஆண்டுகளாக மசுதிகளையும் சர்சுகளையும் மதித்து நடந்த இந்துக்கள்,

தனது கோயிலை இடித்துக் கட்டப்பட்டஇந்துக்களின் அவமானச் சின்னத்தை ஏற்க இயலாமல் தனது உணர்வை வெளிப் படுத்திய நாள் டிசம்பர்6.(அப்போதைய உத்தரப்பிரதேச BJPமுதல்வராக தலித் இனத்தைச்சேர்ந்த கல்யாண்சிங் பதவியில் இருந்தார்)

.இதன் பின்விளைவுகள்; 

#RSS, VHP, பஜ்ரங்தள்,அமைப்புகள் தடை செய்யப் பட்டன. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநில பிஜேபி அரசுகள் மத்திய அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்டன.

இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் இந்துக்கள்மீது தாக்குதல் நடத்தினர்.இந்துக்களும் பதிலடி கொடுத்தனர்.இதனால் நாடு முழுவதும் மதக் கலவரம் ஏற்பட்டது .

 

பல மாதங்களாக இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களும் ஒருவரையொருவர் தாக்குவதும் வீடுகளுக்குத் தீ வைப்பதும் கடைகளையும் வழிபாட்டுத் தலங்களையும் சேதப்படுத்துவதுமாக இருந்துவந்தது.

 

 இக்கலவரம் மும்பை, சூரத், அகமதாபாத், கான்பூர், டெல்லி போன்ற இன்னும் பல நகரங்களுக்கும் பரவி கிட்டத்தட்ட 1,500 பேரின் உயிரிழப்புக்கு வழிவகுத்தது.

 டிசம்பர் 1992இலும் சனவரி 1993இலும் ஏற்பட்ட மும்பைக் கலவரங்களில் மட்டும் 900 மக்கள் உயிரிழந்தனர். 

பாகிஸ்தானில், அரசு பாபர் மசூதி இடிப்பை எதிர்க்கும் வகையில் டிசம்பர் 7 அன்று பள்ளிகளையும் அலுவலங்களையும் மூடியது. பாகிஸ்தான் முழுவதும் கடையடைப்புகள் மேற்கொள்ளப் பட்டன. மேலும் ஒரேநாளில் 30க்கும் அதிகமான கோவில்கள் தீவைத்தும் புல்டோசர் மூலமும் இடித்து தரை மட்டமாக்கப் பட்டன.

 மேலும், லாகூரிலுள்ள ஏர் இந்தியா அலுவலகமும் தாக்கப்பட்டது. 

மசூதியிடிப்பை தொடர்ந்து பல கலவரங்களும் வன்முறைகளும் நடந்தகாரணத்தினால் long visa பெற்று பல இந்தியர்கள் பாகிஸ்தானிலிருந்து இந்தியா திரும்பினர்.

 

வங்க தேசத்தில்

டிசம்பர் 1992இல் இஸ்லாமிய கும்பல்கள் நாடு முழுக்க இந்துக்கோவில்களையும் கடைகளையும் வீடுகளையும் அடித்துநொறுக்கித் தீ வைத்தனர். இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தியா-வங்கதேசம் இடையில் வங்கதேசத் தலைநகர் டாக்காவில் நடந்துகொண்டிருந்த கிரிக்கெட் போட்டி கிட்டத்தட்ட 5,000 பேர் பங்கபந்து தேசிய மைதானத்தினுள் நுழைய முயன்றதால் தடைபட்டது.

டாக்காவில் இருந்த ஏர் இந்தியா அலுவலகம் தாக்கப்பட்டது. 10 பேர் கொல்லப்பட்டனர்.

இந்துக்கள் மீதான இஸ்லாமியர்களின் கொலைவெறித் தாக்குதல்களை எதிர்த்து   லஜ்ஜா (அவமானம்) என்று நூலை எழுதிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமாவுக்கு மரணதண்டனை (பத்வா) இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்தன.அதனால் அவர்  உயிருக்கு பயந்து வெளியேறி வெளிநாடடுகளில்அடைக்கலமானார்.

இவைமட்டுமல்ல, பல இஸ்லாமிய நாடுகளில் நுற்றுக்கணக்கான இந்துக்கோவில்கள் தகர்க்கப்பட்டன.

பாபர்மசூதி இடிப்புக்கு பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று அங்கு முன்பு இந்து ஆலயம் இருந்ததற்கான ஆதாரங்கள் அலகாபாத் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.பல ஆண்டுகள் நடைபெற்ற வழக்கில் அளஹாபாத் நீதிமன்றம்   தீர்ப்பு வழங்கியது.

 

தீர்ப்பில் அந்த இடம் ராமர் பிறந்த இடம் என்ற இந்துக்களின் நம்பிக்கையை ஏற்பதாகவும் சர்ச்சைக் குரிய இடத்தில், முதலில் கோயில் இருந்ததாகவும் அதை இடித்துவிட்டு அங்கு மசூதி கட்டப் பட்டதாகவும், இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் ஆவணங்களின் மூலம் அது நிரூபணமாகி யுள்ளதாகவும் நீதிபதிகள் அகர்வாலும், ஷர்மாவும் தெரிவித்துள்ளனர்.

.மேலும் தீர்ப்பில் கூறியுள்ளது உங்களுக்காக.

"ராம்கோட் என்ற கோட்டையை #ஔரங்கசீப் இடித்துவிட்டு அங்கே மூன்று கும்மட்டங்களை உடைய மகமதிய வழிபாட்டுத் தலத்தைக் கட்டினான். அதை ஹிந்துக்கள் 1707ல் ஔரங்கசீப் இறந்த பிறகு போரிட்டுப் பிடித்து மீண்டும் வழிபாடு நடத்தினர். 

 

ஜஹாங்கீர் காலத்தில் ஒரு முறை இவ்வாறு போரிட்டு ராம்கோட் கோட்டையைப் பிடித்து #ஹிந்துக்கள் இராமரை வழிபட்ட வரலாறு இருக்கிறது.

 

 இது போல முன்காலங்களில் பல முறை இராமர் பிறந்த இடத்தை ஹிந்துக்கள் போரிட்டுப் பிடித்து வழிபடுவதும் #இசுலாமியர்கள் மீண்டும் அவ்விடங்களைப் பிடிப்பதும் நடந்திருக்கிறது.

 

பாப்ரி மசூதி சையத் மூசா அஷிகன் என்பவரது வழிகாட்டுதலில் ஜன்மஸ்தான் கோவிலின் மீது கட்டப்பட்டது. அப்பகுதி ஹிந்துக்களின் சிறந்த வழிபாட்டுக்கு உரியதாகவும் #இராமனின் தந்தையின் தலைநகரமாகவும் இருந்தது. ஹிந்துக்கள் இதை சீதையின் சமையற்கூடம் என்று அழைத்தனர்."

 

ஃபசானா இ இப்ராத் என்ற நூலை எழுதிய மிர்சா ரஜப் அலி பெக் சுரூர் (1787–1867) என்பவர் அந்நூலில் குறிப்பிடுகிறார் “பாபரின் ஆட்சிக்காலத்தில் சீதையின் சமையற்கூடம் என்று அறியப்பட்ட பகுதியில் பெரிய மசூதி ஒன்று கட்டப்பட்டது. அனுமான் கார்ஹியில் ஔரங்கசீப் ஒரு மசூதி கட்டினார். அவர் காலத்துக்குப் பிறகு பைராகிகள் அதை உடைத்து மீண்டும் கோவிலை எழுப்பினார்கள்.”” 

 

என்ற இந்தக் குறிப்பு முழுவதும் அயோத்தி இராமஜென்மபூமி தீர்ப்பில் இருக்கிறது.

Ram JanmBhoomi Babri Masjid Judgement – Annexure IV – Page 129 to 162, pp. 129–162, retrieved .

முழு தீர்ப்பை கீழேயுள்ள இணைப்பில் படிக்கவும்.

http://elegalix.allahabadhighcourt.in/elegalix/ayodhyafiles/honsukj.pdf

 

இஸ்லாமிய நண்பர்களே! அந்த மசூதி ராமர்கோயிலை இடித்துக் கட்டப் பட்டது என்ற உண்மையை உணர்ந்து அங்கு பிரம்மாண்டமான ராமர் ஆலயம் அமைவதற்கு தடையாக இருக்காதீர்கள்.

 

நாடு முழுவதும் உள்ள மசூதிகளையும் சர்சுகளையும் மதிக்கும் இந்துக்கள் இந்த மசூதியை மட்டும் இடித்தது ஏன் என்பதை சிந்தியுங்கள்.உண்மை புரியும்.

 

இந்த சம்பவத்தைப் பற்றி உணர்வுள்ள ஒரு இந்துவின் கருத்து இதுதான்

 

 "எது நடந்ததோ அது நலதற்கல்ல.பிறர் கையால் தமது வழிபாட்டுத்தலம் உடைபடும்போது எப்படியான வேதனை எற்படும் என்பதையாவது இப்போது முஸ்லிம்கள் உணர்ந்திருப்பார்கள்".

 

.(RSS தலைவர் தேவரஸ் பாபர்மசூதி இடிக்கப்பட்ட பிறகு கூறியது.)

 

இறுதியாக ஒரு தகவல்….

 

அயோத்தியில் ராமர் ஆலயம் அமையும் வரை தங்கள் காலில் செருப்பு அணிவதில்லை என்று சபதம் ஏற்றுள்ள அயோத்தி மக்கள் பலர் பல தலைமுறையாக இன்று வரை காலனிகள் அணியாமல் வெறும் கால்களில் நடந்து செல்கிறார்கள்.இதை இன்றும் உத்தரப்பிரதேசம் செல்பவர்கள் காண முடியும்..

 

ராமஜென்மபூமிக்காக உயிர்த்தியாகம் செய்த இந்துக்களின் தியாகம் வீண்போகாது.

 

இறையருளால்  விரைவில்

 ராமஜென்ம பூமியில் பிரம்மாண்டமான ராமர் ஆலயம் அமைவது உறுதி!

 

#ஜெய்_ஸ்ரீராம் !

 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.