கல்வி, பொருளா தாரத்தில் தலித்மக்கள் பின் தங்கியுள்ளதற்கு மத்தியில் பல ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸை காரணம் என மத்திய ரசாயனத்துறை அமைச்சர் அனந்த் குமார் குற்றஞ் சாட்டினார்.


பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் அம்பேத்கரின் நினைவு தினநிகழ்ச்சியில் அவர் பேசியது:


காங்கிரஸ் கட்சி ஆரம்பத்திலிருந்தே தலித்துகள், அம்பேத்கர் ஆகியோருக்கு எதிராகவே செயல்பட்டுவருகிறது.  அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி எப்போதும் அவமதித்தேவந்துள்ளது.  வாழ்ந்த காலத்திலேயே அம்பேத்கரை தேர்தலில் தோல்வி அடையச்செய்த கட்சி காங்கிரஸாகும். 


முதல்வர் சித்தராமையாவும்,  காங்கிரஸ் கட்சியின் கொள்கையை தொடர்ந்து கடைப் பிடித்து வருகிறார்.  ஆனால்,  பிரசாரத்துக்காக அவர் அம்பேத்கரின் புகைப் படத்தை பயன் படுத்திக் கொள்கிறார்.  இது அம்பேத்கருக்கு காங்கிரஸ் கட்சியினர் செய்யும் அவமானமாகும்.  இதற்கு சித்தராமையா உள்ளிட்ட அக்கட்சியினர் மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். 


பாஜக கூட்டணியில் மத்தியில் ஆட்சிசெய்த வி.பி.சிங்,  அம்பேத்கருக்கு பாரதரத்னா விருதை வழங்கி கெளரவித்தார்.  அதற்கு முன்பு மத்தியில் ஆட்சிசெய்த காங்கிரஸார், அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து ஒருபோதும் யோசித்ததில்லை.


பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றதிலிருந்து அம்பேத்கருக்கு உரிய கெளரவத் தையும், மரியாதையையும் செலுத்திவருகிறார்.  தலித்மக்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் பின் தங்கியுள்ளதற்கு மத்தியில் பல ஆண்டுகள் ஆட்சிசெய்த காங்கிரஸை காரணம்.


அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை அனைத்துமொழிகளிலும் அச்சிட்டு,  அனைவருக்கும் வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.       நிகழ்ச்சியில், மக்களவை உறுப்பினர் ஷோபா கரந்தலஜே,  முன்னாள் அமைச்சர் ராமசந்திரகெளடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.