விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புத்த – இந்து கோவில்களை கொண்டு உருவாக்கிய குழப்பத்தை சார்ந்து பலர் கேள்வி எழுப்பியதால் – அதற்கான எனது பதில் இந்த பதிவு:

திருமாவளவன் அவர்களுக்கு:

உங்கள் கொள்கையில் குழப்பம் இருந்தால் கொஞ்சம் பொறுமையாக படித்துவிட்டு – தீர விசாரணை செய்து பேச வரவும். உங்களை நம்பி ஒரு 0.8சதவீதம் வோட்டு இருக்கு. அவர்களை சரியாக வழிநடத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கு அரைகுறையாக படித்து குழப்ப வேண்டாம் என்று பிஜேபி ஆதரவாளர்கள் சார்பாக கேட்டு கொள்கிறேன்.

அது ஏன் கூறுகிறேன் என்றால் :

உங்களுக்கு ஒன்று தெரியுமா -புத்தம் பற்றி நீங்கள் ஆதரவாக குரல் எழுப்பினால் பிராமணம் வெறுப்பை நீங்கள் கைவிட வேண்டும். அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் திருமாவளவன் . அதாவது நான் சொல்வது ஜாதி பிராமணம் அல்ல – வேதம் சொன்ன பிராமண வாழ்வை கூறுகிறேன்.

அதை விட உங்களுக்கு யார் புத்தர் இந்து இல்லை என்று கூறியது???? அவர் இந்து தான், அவரை தனியாக பிரித்து வேறு மதமாக சொல்வது முட்டாள்தனம்.

அனேகமாக நீங்கள் ஒழுங்கா புத்திஷம் பற்றி படிக்கவில்லை என்று நினைக்கிறேன். மொத்தம் எத்தனை புத்தர்கள் என்று நினைக்கிறீர்? ஏறக்குறைய 28க்கும் மேல். அதில் நீங்கள் கௌதம புத்தரை மட்டும் பிடித்து கொண்டீர். அது தான் குழப்பம். இவர்கள் புத்தம் என்ற வாழ்வு முறைய ஏன் மக்களுக்கு சென்று சேர்த்தார்? அதற்கான தேடல் – அறிவுரைகள் எல்லாமே இதே இந்துமத வேதங்கள் வழிதான் அவர் பெற்றார். இதனால் தான் நான் புத்தம் தனி மதம் என்று கூறாதீர் என்பேன்.

மொத்தம் 28புத்தர்களில் 8பேர் எனக்கு தெரிந்து பிராமணர்கள். அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். கௌதம புத்தருக்கு வேதம் – ஆன்மவியல் தெளிவி கிடைக்க காரணமான அவருக்கு முன் வந்த மூன்று புத்தர்கள்  ககுசந்தா , கொனகமநா , கச்ஷப்பா. இந்த மூவருமே பிராமணர்கள். இப்போ என்ன அதுவும் பார்ப்பனீயம் என்று கூச்சல் போடபோகிறீரா?

 எனவே பிராமணம் என்ற வேதம் சொன்ன வாழ்வு முறை என்பது சீனா முதல் – ஆப்கன் வரை பரவி விரிந்த ஒன்று.

"இந்த மொத்தம் உலகத்திற்கு ஆன்மவியல் கொடுத்தது இந்த இந்துமதமே…. இந்த இந்திய தேசமே…".

{உடனே மனுஷ்மிருதி என்று ஸ்மிருதிகளை பிடித்து குழப்ப வேண்டாம். அதற்கு நான் முன்பே பதில் கூறிவிட்டேன் தேடி படிக்கவும். உண்மையல் ஜாதி ஒழிய வேண்டும் என்றால் நீங்கள் இந்துமத வேதம் தவிர்த்து இந்த மண்ணில் உருவான அனைத்தையும் திருத்த வேண்டும். இதை நான் கூறவில்லை விவேகானந்தர் கூறினார். அப்புறம் இன்னொரு விஷயம் மனுஷமிருதி மட்டும் ஸ்மிருதி இல்லை. அதுவும் நிறைய இருக்கு. உங்கள் பெரியார் என்ற ஈவே ராமசாமி உருவாக்கிய குழப்பம் அது. அதையும் நீங்கள் ஒழுங்கா படிக்கவில்லை}

சரி புத்த கோவில்களை இடித்து இந்து கோவில்கள்????

வழிபடும் முறையால் புத்தம் மட்டும் அல்ல   சைவம், வைணவம், சாக்தம்,கௌமாரம், சௌரம், காணாபத்தியம் என்று இன்று ஒன்றாக இருக்கும் பெருமாள் சிவன் விநாயகர் சக்தி கடவுள் வழிபாடுகள் எல்லாம் ஒரு காலத்தில் ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டுக்கொண்ட தெய்வ வழிபாடுகள் தான். எனவே இந்த வரலாறு மிக குழப்பமானது – நாம் நல்லதை எடுத்து கொண்டு பயணிக்க தான் நம் முன்னோர்கள் வழிகாட்டினர்.

இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது :

மற்ற நாடுகளில் கிருஸ்தவம் , இஸ்லாம் பரவும் போது அங்கே இருந்த கடவுள் வழிபாடுகள்-வழிபாட்டு முறையகளை அழித்து ஒழித்தன, வேறு மதவழிபாடு இல்லை என்றன. ஆனா இந்தியாவில் மட்டும் தான் வேதம் அறிந்த பெரியவர்கள் சண்டையை நிறுத்தி அனைத்தையும் ஒன்றுமை ஆக்கி ஒரே இந்து மதமாக ஒருவரை ஒருவர் மதித்து நடக்கும் பக்குவம் போதித்தனர். இன்று ????  சிவனும் பெருமாளும் விநாயகன் சக்தி என்று எல்லோருமே ஒன்றுபட்டு விட்டோம்.

சொல்லுங்கள் இந்த பக்குவம் எந்த தேசத்தில் நடந்தது!

இதில் இப்போ புத்தம் எதற்கு பிரிக்கவேண்டும்???? நன்கு புரிந்து கொள்ளுங்கள் மதிப்பிற்குரிய சத்குரு, சாய்பாபா இருக்கிறார்கள் , அவர் போல ஆன்மீக தலைவர்களுக்கு இங்கே பெரும் அளவு மக்கள் தேடி செல்வதால் அது தனிமதம் ஆகிவிடுமா என்ன? ஆன்மவியல் தேடலில் ஒரு பாதையை மக்களுக்கு காட்டுகிறார்கள்.  இந்தியாவில் தோன்றிய எந்தமதமும் இந்து வேதத்தின் பிரதிபலிப்பு இருக்கும்.

புத்த சிலைகள் யார் வீட்டில் இப்போ இருக்கு அதிகமாக? கௌதம் , சித்தார்த் என்று எல்லாம் பெயர் யார் வச்சுக்கிறா??? இந்துகள் தான் அதிகம் வைக்கிறார்கள் சரிதானே ??? எந்த இஸ்லாமியரும் வைக்கவில்லை எந்த கிருஸ்தவரும் வைக்க மாட்டார்.

எனவே புத்தம் வேறு – இந்துமதம் வேறு அல்ல;
புத்தம்  புரிந்த யாரும் இந்துகளின் பிராமணம் புரியும். {ஜாதி ஆரம்பித்துவிடாதீர்}

எனவே இந்திய வரலாறு – இந்திய மத வழிபாட்டின் வரலாறு உங்களுக்கு ஒழுங்கா தெரியவில்லை. ஒரு நல்ல இந்துத்துவா தலைவரை பிடித்து கேளுங்கள் அவர் உங்களுக்கு நீங்கள் செய்யும் தவறை உணர்த்துவார்.
 

இறுதியாக :

ஒருநாள் நான் இஸ்லாமிய கட்சி என்று கூறுகிறீர் – இன்னொரு நாள் நான் புத்தன் என்று கூறுகிறீர் – மறுநாள் கிருஷ்தவர்களோடு நிற்கிறீர்?? ஜாதி ஒழிப்பேன் என்று ஜாதி அரசியல் செய்கிறீர்?? இந்த தடுமாற்றம் காரணம் என்ன தெரியுமா????  உங்களுக்குள் இருக்கும் இந்துமத வெறுப்பு – பிராமண வெறுப்பு. வெறுப்பு என்பது பகுத்தறிவு ஆகாது திருமாவளவன். பெரியாரியம் வேறு – பகுத்தறிவு என்பது வேறு. அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். rationality thinking என்பதற்கும் periyarism என்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. ஏன் கூறுகிறேன் என்றால் அம்பேத்கர் – பெரியார் இருவரையும் ஒரே நேரத்தில் நீங்கள் பின்தொடரவே முடியாது. ஆனால் நீங்கள் ஒரே நேரத்தில் இருவரையும் பின்தொடர்வது பெரிய சிந்தனை குழப்பம். அடுத்து இஸ்லாம் , கிருஷ்தவம் என்று ஆப்ரகாம் வழிவந்த இந்தியாவில் தோன்றாத இந்த மதங்களை வைத்து கொண்டு புத்தம் பேசவே முடியாது.

அதாவது மீண்டும் கூறுகிறேன் புத்தம் நீங்கள் விரும்பகூடியவர் என்றால் – அங்கே பிராமணம் வெறுக்க முடியாது. {முக்கியம்:பிறப்பால் ஜாதி பிராமணம் பேசுபவர்களை கொண்டு இதை குழப்ப வேண்டாம். சோ, அப்துல்கலாம் போன்றவர்களை நான் பிராமணனாகவே பார்க்கிறேன்.}

இந்துகள் முகாலாயர் காலத்தில் இஸ்லாமிய மன்னார்களால் இடிக்கபட்ட ஏறக்குறைய 40,000கோவில்களை கேட்கவில்லை- சோமநாதர் கோவிலில் கொள்ளை அடிக்கபட்ட 3000கிலோ தங்கம் போன்ற செல்வங்களை கேட்கவில்லை. கேட்பது கிருணன் – சிவன் – ராமன் இந்த மூவருக்கும் புனித இடமான அயோத்தி ராமர் கோவில் , காசி விஷ்வநாத் சிவன் கோவில் ,மதுரா கிருஷ்ணன் கோவில். பின்ன இந்துகள் புனிதம் தேடி ஜெருசலமா போக முடியும்? இஸ்லாமியர்க்கு மெக்கா , மதினா இருக்கு- கிருத்தவர்களுக்கு வாட்டிகன் இருக்கு – ஜீஸ் , கிருஸ்தவர்கள் , இஸ்லாமியர் மூவருக்கும் ஜெருசலம் இருக்கு. அது போல புனித பூமி என்றால் இந்துகளுக்கு இந்தியாவில் தானே இருக்க முடியும்?

எது எப்படியோ தயவு கூர்ந்து வரலாறு ஒழுங்கா படிங்க. {முக்கிய வேண்டுகோள் : இந்த கட்டபஞ்சாயத்து , கொள்ளை கொலை வழிப்பறி – நக்சல் மாவோஸ்ட் என்று தயவு கூர்ந்து தலித் மாணவர்களை தவறாக வழிநடத்தாதீர், அதிகார சக்தியாக வரவேண்டும் என்று அலையாதீர். கொஞ்சம் தொழில் முனைவோர்களாக , நன்கு படித்து அம்பேத்கர் சட்ட மேதை ஆனது போல அனைத்து துறைகளிலும் வல்லுனர்களை உருவாக்கபாடுபடுங்கள். வசதி வாய்ப்பு கிடைக்க முதலில் இந்த தலித் என்று சான்றிதழை தூக்கி எறியுங்கள். அது இன்னும் நல்லது- மிக முக்கியமாக வெறுப்பை விதைகாதீர்.}

இந்துத்துவா கூறும் எளிமையான விஷயம் "இந்த மண் நமக்கு புனிதமானது- வரலாற்றில் நடந்த தவறுகளை சரி செய்து ஒற்றுமையாக இந்த தேசம் நேசியுங்கள். அனைவரும் இந்த பாரததாயின் குழந்தைகள் என்று உணருங்கள்" என்கிறது. அதை முதலில் மனதளவில் அமைதியாக ஏற்றுகொள்ளுங்கள் தன்னால் அனைத்தும் புரியும்.

மாரிதாஸ்

Leave a Reply