ஒரு வழியாக கடைசிகட்ட தேர்தல் பிரச்சாரமும் ஓய்ந்தது. சாதாரண குஜராத்திக்கு பாஜகவிற்கு மாற்றாக ஓட்டு போடனும்னு என்னவெல்லாம் காரணம் இருக்க வாய்ப்பு இருக்குன்னு நான் அலசியதில் தெரிந்தது இதுதான்.

1. அவனுக்கு அரசு வேலை கிடைக்கல.
2. இல்லாட்டா கிடைச்ச அரசு வேலையில் திருப்தி இல்லை
3. முன்னாடி காங்கிரஸ் காலத்தில் நல்லா(திருட்டுத்தனமா) சம்பாதித்த மாதிரி இப்ப சம்பாதிக்க முடியல
4. லோக்கல் பாஜக ஆளோட சண்டை
5. பாஜகவில் தான் எதிர்பார்த்த பதவி கிடைக்கல
6. பாஜக தன்னை சம்பாதிக்க விடலை
7. லோக்கல் வேட்பாளரை பிடிக்கல

இவ்ளோ தான் அடிப்படைகள்… அப்ப மிச்சமெல்லாம் என்ன?!

மத்தது எல்லாம் நம்மை ஏமாற்ற உருவாக்கப்படும் மாயை… பாஜக மேல அதிருப்தி இருக்கா?! நிச்சயமா இருக்கு. ஆனா அதற்கு காரணங்கள் வேற… அப்ப ஓட்டு போட மாட்டானே…!!! யார் சொன்னது?! அதிருப்தியோடவும் சாதாரண குஜராத்தி பாஜகவிற்கு தான் ஒட்டு போடுவான்

ஹர்திக் பட்டேல் போன்ற பிரச்சனைகள்…?!

அதெல்லாம் ஓட்டை பிரிக்க, குறைக்க காங்கிரசின் யுக்திகள்… பலிக்கப்போவதில்லை…

ஜிக்னேஷ் மேவானி, அல்பேஷ் தாக்கூர் போன்றவர்களால் உருவாக்கப்பட்டுள்ள பிரச்சனைகள்…?!

பாவமான, பரிதாபகரமான பகடை காய்கள் அவை. அதுக்கு மேல சொல்ல ஒன்னும் இல்லை… அல்பேஷ் தாக்கூர் காங்கிரஸ் சார்பில் தானே போட்டியிடுறார்?! அவர் முதலில் ஜெய்ப்பாரா பார்ப்போம்.

அப்ப என்னதான் நடக்கும்?!

முதலில் நாம புரிஞ்சுக்க வேண்டிய விஷயம், காங்கிரசில் யாருடைய தலைமை என்ற கேள்விக்கு பதில். இப்ப ஓபிஎஸ், எபிஎஸ் அப்படின்னா மக்கள் மதிப்பதில்லை இல்லையா?! ஜெயலலிதாவுக்கு தான் மரியாதை. அது போலத்தான் காங்கிரசில் மதிக்கப்படும் தலைமை என்று ஒன்று இல்லை. அதனால தான் அவர்கள் ராகுலை முன்னிறுத்தி பின்னாடி சவாரி செய்ய முயற்சித்தது. காங்கிரசின் பிரச்சனை என்ன?! அவர்களால் மோடிக்கு இணையான் ஒருவரை கண் முன்னால் காட்ட முடியாது. ஆங்கிலத்தில் “Seeing is believing” அப்படின்னு ஒரு கருத்து இருக்கு இல்லையா, அந்த மாதிரி தான் இதுவும்… ராகுல் என்ற நபரை மக்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அப்புறம் எங்க காங்கிரசுக்கு ஓட்டு போடுறது.

சரி, வளர்ச்சி பற்றி…?!

குஜராத்தின் வளர்ச்சி அபரீதமானது. இன்று இந்தியா விவசாய உற்பத்தியில் 3% அளவில் மட்டுமே வளரும் காலத்தில் குஜராத் 10% மேற்பட்ட வளர்ச்சியை தந்து கொண்டு இருக்கிறது. தொழில் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சென்னையில் உள்ள அனைத்து கார் தயாரிக்கும் நிறுவனங்களும் இன்று கிட்டதட்ட குஜராத்திலும் வந்தாச்சு. ஆக சென்னையை போன்று குஜராத் ஒரு பெரும் ஆட்டோமோடிவ் உற்பத்தி மாநிலமாகும் காலம் வெகு விரைவில்…

வேலையில்லா திண்டாட்டம்…!!!

7-14% பெரும்பாலான மாநிலங்களில் இருக்கும்போது இங்கு 1% தான் வேலையின்மை.

அப்ப கொஞ்சம் பேர் அதிருப்தியோட பேசுறாங்களே?!

அது இருக்கத்தான் செய்யும். 1995ல் பாஜக ஆட்சிக்கு வந்தது. இன்று 22 வருடங்கள் உருண்டோடியாச்சு. அன்று காங்கிரஸ் எப்படி ஆண்டது, அயோக்கியத்தனம் செய்தது போன்ற கற்பனைகள் 1995க்கு சற்று முன்னர் அல்லது அதற்கு பின்னர் பிறந்தவர்களிக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால் அவர்கள் சுமார் 50% வாக்காளர்கள். அதனால் வளர்ச்சியின் பல்வேறு பரிணாமங்களை அவர்கள் காணவில்லை. இங்கு ஏற்படும் பிரமாண்டங்கள் அனைத்துமே அவர்களை பொறுதத்வரை சாதாரண நிகழ்வுகள். பாஜக, குறிப்பாக மோடி வந்தவுடன் பெரிய விஷயங்கள் கூட சாதாரண விஷயமாக ஆனதன் விளைவு இது.

சரி… கடைசி நாள் என்ன நடக்கும்?!

இதுவரை மோடிக்கு எதிரா பேசிய, கூச்சல் போட்ட, அதிருப்தியா இருந்த் அத்தனை பேரும் ஒட்டு போட தான் போறாங்க… அவனோட கை பட்டனை அழுத்த போகும்போது அவன் எடுக்கும் முடிவு தான் இறுதியானது. அங்கு அவன் கண்முன் வந்து நிற்பது காங்கிரஸ்-பாஜக தலைவர்கள் இல்லை. மோடியும், ராகுலும் தான் அவனது கண் முன் வருவார்கள்… அப்போது அவனது கை விரல்கள் கை சின்னத்தை நாடும்போது தானாக நடுங்கும்… தாமரையை நோக்கி தானாக தவழ்ந்து வெற்றிக்கான முத்திரையை பதிக்கும்… ஆக பாஜகவின் வெற்றி, கடந்த 2012 தேர்தலில் பெற்ற 119 சீட்டுகளை விட கூடுதலாகத்தான் இருக்கும்…

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.