இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்தபோரானது கடந்த 1971ம் ஆண்டு இதே நாளில் முடிவுக்கு வந்தது.  இதனைதொடர்ந்து வங்காளதேசம் என்ற தனி நாடு உருவானது.

இந்தபோரின் முடிவில் பாகிஸ்தான் நாட்டின் 90 ஆயிரம் ராணுவ வீரர்கள் இந்திய ராணுவம்முன் சரண் அடைந்தனர்.  போர் முடிவுக்கு வந்த இந்த நாள் வெற்றிதிருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், 1971ம் ஆண்டில் வெற்றி திருநாளான இதேநாளில் ஈடு இணையில்லாத தைரியமுடன் போரிட்டு விடா முயற்சியுடன் நமது நாட்டை காத்த அனைவருக்கும் நாம் வணக்கத்தினை செலுத்துவோம்.

அவர்களது வீரம் மற்றும் சேவைக்காக ஒவ்வொரு இந்தியரும் பெருமைகொள்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.