சமீபத்தில் நடந்து முடிந்த இமாச்சலப் பிரதேசம் மாநில சட்ட சபை தேர்தலில் மொத்தம் உள்ள 68 இடங்களில் பாஜக. 44 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை பலத்தைபெற்றது.

இந்த தேர்தலில் பா.ஜ.க. சார்பில் முதல்மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேம் குமார் துமால் சுஜான்பூர் தொகுதியில் தன்னை எதிர்த்துபோட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரிடம் சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இதைதொடர்ந்து அம்மாநிலத்தின் புதிய முதல்மந்திரியை தேர்வு செய்யும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மத்திய மந்திரி ஜே.பி.நட்டா மற்றும் அக்கட்சியின் மேலிட பார்வையாளர்கள் முன்னிலையில் சிம்லா நகரில் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் சட்டமன்ற பாஜக. தலைவராகவும் புதிய முதல் மந்திரி யாகவும் ஜெய்ராம் தாக்கூர் தேர்வு செய்யப் பட்டார்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மாணவர் அமைப்பான அகிலபாரத வித்யார்தி பரிஷத் அமைப்பில் ஆரம்பத்தில் இணைந்து செயலாற்றிய ஜெய்ராம்தாக்கூர், கடந்த 1998-ம் ஆண்டு சாச்சியோட் சட்டமன்றதொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

2007 மற்றும் 2012 ஆண்டுகளுக்கு இடையில் இமாச்சலப் பிரதேசம் மாநில ஊரகம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரியாகவும் இவர் பதவிவகித்தார்.

அதே தொகுதியில் தொடர்ந்து ஐந்து முறை வெற்றிபெற்றுள்ள இவர் இந்ததேர்தலில் 11,524 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜக. தொண்டர்களுடனும், பொது மக்களிடமும் மிக இனிமையாகவும், எளிமையாகவும் பழகும் இயல்புடையவர் என அறியப்படும் ஜெய் ராம் தாக்கூர்(52) இமாச்சலப் பிரதேசத்தின் 13-வது முதல் மந்திரியாக சிம்லா நகரில் உள்ள ரிட்ஜேதிடலில் நாளை (புதன்கிழமை) பதவியேற்கவுள்ளார்.

இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, பாஜக. தேசிய தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், நிதின்கட்கரி, அனந்த்குமார், இமாச்சலப்பிரதேசம் மாநில பாஜக. பொறுப்பாளர் தாவர் சந்த் கேலாட், அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார், கோவா முதல் மந்திரி மனோகர் பரிக்கர், உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், ராஜஸ்தான் முதல் மந்திரி வசுந்தரா ராஜே, சத்தீஸ்கர் முதல் மந்திரி சி.எம்.ரமன் சிங், மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னவிஸ், அசாம் முதல் மந்திரி சர்பானந்தா சோனோவால், அருணாச்சலப்பிரதேசம் முதல் மந்திரி பேமா கன்டு, ஜம்மு-காஷ்மீர் துணை முதல் மந்திரி நிர்மல் சிங், உத்தரப்பிரதேசம் துணைமுதல் மந்திரிகள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் தினேஷ் சர்மா, பீகார் துணை முதல் மந்திரி சுஷில் குமார் மோடி உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்தபதவியேற்பு விழாவுக்கு நாளை காலை சுமார் 10.45 மணியளவில் சிம்லாநகரை வந்தடையும் பிரதமர் மோடியை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழாவை சிம்லா நகரில் உள்ள பலபகுதி மக்களும் காணும் வகையில் நகரின் பல பகுதிகளில் பிரமாண்டமான எல்.இ.டி. தொலைக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.