புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர் தொடர்ந்து ஆய்வில்ஈடுபட்டு வருகிறார். இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் இல்லை. அதேநேரத்தில் பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் இதுபோன்ற ஆய்வில் ஈடுபடுவதில்லை. ஆளுநர்களை வைத்து மாநில அரசைகட்டுப்படுத்த பாஜக முயல்கிறது என குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது.

 

இருந்தாலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது ஆய்வைநிறுத்தாமல் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். நேற்று தஞ்சையில் அவர் ஆய்வில்ஈடுபட்டார். திமுகவினரும் தொடர்ந்து ஆளுநர் ஆய்வுக்கு கருப்புக்கொடி காட்டி வருகின்றனர்.

 

இந்நிலையில் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் தமிழிசையிடம் பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் ஆளுநர் ஆய்வுநடக்கவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்தவர், பாஜக ஆளும் மாநிலங்களில் ஆட்சி சரியாக நடப்பதால் அங்கு ஆளுநர் ஆய்வுசெய்ய வில்லை, ஆய்வு நடைபெறுவதால் ஆளுநர் ஆட்சி நடக்கிறது என்று சொல்லக்கூடாது என்று விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply