மாநிலங்களவையில் செவ்வாய் கிழமை அன்று,  கேள்வி எழுப்பிய  பாஜக எம்.பி சுப்பிர மணியன் சுவாமி, ' மாபெரும் சுதந்திர போராட்ட தியாகியான முத்துராமலிங்க தேவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுடன் இருந்தார் என்பதற்காக புறக்கணிப் படுகிறார்' என்றார்

இதற்கு பதில்அளித்து பேசிய மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அசோக்கஜபதி ராஜு,    'விமான நிலையங்களின் பெயரை மாற்றுவது தொடர்பாக மாநில சட்டப் பேரவைகளில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் தீர்மானம் நிறைவேற்றினால், விமான நிலையங்களின் பெயர் மாற்றப்படுகின்றன. ஆனால் தமிழகத்தை பொறுத்த வரை , தமிழக அரசு 2001 மற்றும் 2005-இல் வெளியிட்ட உத்தரவில். மாநிலத்தில் உள்ள அரசுக்கட்டடங்கள், இடங்கள் அல்லது மாநகராட்சிகளுக்கு அரசியல் தலைவர்களின் பெயர்கள் வைக்கப்படமாட்டாது எனக் கூறப்பட்டிருந்தது.

எனவே தற்போதுள்ள அரசு இதுதொடர்பாக முன்மொழிவு அனுப்பினால், அதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காது. தேவர்மீது நாங்கள் மிகவும்மதிப்பு வைத்துள்ளோம்'  என்றார். மேலும் விமான நிலையங்களுக்கு பெயர் வைக்கும் விவகாரத்தில் 9 திட்டங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags:

Leave a Reply