நாட்டின் முன்னேற்றத்துக்காக பா.ஜ.க, அரசால் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி., உள்ளிட்ட அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த ஆட்சி எப்படிநடக்கிறது என்பது குறித்து மக்கள் வழங்கிடும் சான்றிதழ்தான், மகத்தானது,'' என, பிரதமர் நரேந்திர மோடி, தெரிவித்தார்.

தனியார் 'டிவி'க்கு, பிரதமர் நரேந்திரமோடி அளித்த சிறப்பு பேட்டி:இந்திய அரசு மேற்கொண்டிருக்கும் நிதிசார்ந்த முன்னேற்ற நடவடிக்கைகளை, சர்வதேச நிதியம், உலகவங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும், வல்லுநர்களும் வரவேற்றுள்ளனர். இன்றைய நிலையில் மத்திய அரசின் நிதிக் கொள்கை சிறப்பானதாக மிளிர்கிறது.


கடந்த மூன்று ஆண்டுகளில், முன்னேப் போதும் இல்லாத வகையில், பல்வேறு விதத்திலும் இந்திய உலகளவில் புதியசகாப்தத்தை படைத்துவருகிறது. அந்நிய நேரடி முதலீடானது முன்பு, 30 பில்லியன் டாலராக இருந்தது; தற்போது, இது 60 பில்லியன் டாலராக அதிகரித் துள்ளது. புதியபொருளாதார கொள்கையின் மீதான நம்பகத்தன்மை அதிகரித்த காரணத்தாலேயே, இதுபோன்ற வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது.


நாட்டின் முன்னேற்றத்துக்காக பாஜக, அரசால் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி., உள்ளிட்ட அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மக்கள் ஏற்றுக்கொண்டு உள்ளனர். இந்த ஆட்சி எப்படி நடக்கிறது.

என்பது குறித்து மக்கள் வழங்கிடும் சான்றிதழ்தான், மகத்தானது.

இந்நாட்டின் வளர்ச்சிக்கு இன்னும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. முதலில் தற்போதுள்ள அரசியல்கலாசாரம் அடியோடு மாற்றப்பட வேண்டும். ஏனெனில், இது காங்கிரசால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று. லோக்சபா மற்றும் சட்ட சபைகளுக்கு ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதன் மூலமாக, தேவையற்ற வகையில் மக்களின் வரிப் பணம் விரயமாவதை தடுக்க முடியும்.

தவிர, தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதும் மிக எளிதாகிவிடும். இதுதொடர்பாக, அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களுடன் தனித்தனியாக பேசுகையில், 'இந்தயோசனை நல்லது'என்கின்றனர். அதுவே, பொதுவெளியில் பேசும்போது அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளின் நிலைபாட்டினைத் துாக்கிப் பிடிக்கின்றனர்.

விவசாயத் துறையில் இன்னும் நாம் நிறையமாற்றங்களை, குறிப்பாக அறிவியல் தொழில் நுட்பங்களைப் புகுத்த வேண்டியுள்ளது. விவசாயம் நிலைக்க செழிப்பான நிலம், போதியதண்ணீர் வசதி அவசியம். வறட்சியின் காரணமாக விவசாயம் பெரிதும்பாதிக்கிறது. இவ்வாறான நேரங்களில் புதியதொழில்நுட்ப முறைகளை கையாள வேண்டும்.

மூன்றுமாடி கட்டடத்தை, படிக்கட்டு இல்லாமல் கட்டுவதால் என்ன பயன் இருக்கமுடியும்? தனிநபர் ஒருவர் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் மருத்துவரிடம் செல்கிறார்; அவர் ரத்த பரிசோதனை செய்யுமாறு பரிந்துரைக்கிறார். அது போலத்தான், விவசாயம். சில பிரச்னைகள் எழும்போது தொழில் நுட்பத்தை நாட வேண்டும்.இந்தமண்ணின் விளைச்சல் தன்மை எவ்வாறு இருக்கும் என்பதை அறிய, மண் பரிசோதனை செய்யப்பட வேண்டும். தண்ணீர் சேமிப்புடன், சூரியமின் சக்தியிலான மோட்டார்களை பயன்படுத்த வேண்டும். இதன்  மூலமாக மின்சார செலவினை, நிதிச்செலவினை கட்டுப்படுத்த முடியும்.

 

''நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்ல, காங்கிரஸ் இல்லா இந்தியாவை உருவாக்கவேண்டும். ஏதோ தேர்தலைமட்டும் கருத்தில் கொண்டு இதை கூறவில்லை. காங்கிரஸ், இந்திய விடுதலை போராட்டத்தின்போது இளைஞர்கள் மத்தியில் தியாக மனப்பான்மை விதைத்தது; சுதந்திரத்துக்கு பின் காங்கிரசின் போக்கு மாறிப்போனது. பரம்பரை ஆட்சியில் ஊழலும், சாதியமும், சுரண்டலும் அதிகரித்து விட்டது. அதனால் தான், காங்கிரஸ் கட்சியின் அரசியல் கலாசாரத்தில் இருந்து விடுபடவேண்டும் என்கிறேன்.

'' சாதாரண மக்களின் வாழ்க்கை போராட்டத்துக்கு தீர்வு காணப்பட வேண்டும், அதுவே முக்கியம். பொது மக்களின் தேவைக்கு ஏற்றவாறு அரசு கட்டமைப்பு இருக்கவேண்டும். வாழ்க்கை முறை எளிதாக அதிக முயற்சிகளை மேற்கொள்வோம். சாதாரண ஏழைதாய்க்கு புகையில் இருந்து விடுதலை கிடைக்க 3.3 கோடி குடும்பங்களுக்கு சமையல் காஸ் வழங்கும், 'உஜ்வாலா' திட்டத்தை ஏற்படுத்தினேன்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக, நான்கு மூத்த நீதிபதிகள் போர்க்கொடி துாக்கி உள்ளனர். தலைமை நீதிபதி குறித்து, பல்வேறு குற்றச்சாட்டுகளை, அவர்கள் முன்வைத்துள்ளனர்.

இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படாத நிலையில், தனியார், 'டிவி'க்கு அளித்த பேட்டியில், பிரதமர் மோடி கூறியதாவது: நம் நீதித்துறைக்கு, மிக பிரகாசமான வரலாறு உள்ளது. அதில் உள்ளவர்கள் அனைவரும், மிகவும் திறமையானவர்கள். நீதித்துறை மீது, எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து விவாதிக்க விரும்ப வில்லை. இந்த பிரச்னையில், அரசோ, அரசியல் கட்சிகளோ தலையிட கூடாது. தங்களுக்குள் உள்ள பிரச்னைக்கு, நீதித்துறையினரே தீர்வு காண்பர்.
 

நான், காங்., இல்லாத இந்தியா எனக்கூறியது, காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் கூறவில்லை. மதரீதியிலான நடவடிக்கைகள், வாரிசு அரசியல், ஊழல், ஆட்சி அதிகாரத்தை, தங்கள் கட்டுப்பாட்டில் மட்டும் வைத்திருப்பது போன்ற, பல்வேறு மோசமான, காங்., கொள்கைகளில் இருந்து, நாடு விடுதலை பெறவேண்டும் என்பதே, எங்களுடைய விருப்பம்.


எதிர்ப்பு அரசியலில் இருந்து, காங்., வெளிவரவேண்டும். 'முத்தலாக்' முறைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட மசோதாவுக்கு, அவர்கள் எதிர்ப்புதெரிவித்து உள்ளனர். இது, மத ரீதியிலான மசோதா அல்ல; பெண்களின் பாதுகாப் புக்கானது என்பதை, அவர்கள் உணரவேண்டும்.

ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவைவரி விதிப்பு முறையை அமல்படுத்துவதில் உள்ள ஓட்டைகளை அடைக்க, அதில் மாற்றம்செய்ய தயாராக உள்ளேன். ஜிஎஸ்டி.,யை எதிர்ப்போர்,பார்லிமென்டை அவமதிக்கின்றனர்.


ஜி.எஸ்.டி., என்பது, புதியவரி விதிப்பு முறை. இதை புரிந்துகொள்ள, மக்களுக்கு சிலகாலமாகும் என, முதல் நாளில் இருந்து கூறிவருகிறேன். இதில், சிறப்பான நடைமுறையை உருவாக்க, ஆறுமாதங்கள் முதல், இரண்டு ஆண்டுகள் கூட ஆகலாம்.

நம் நாட்டுக்கு நீண்ட காலம் பயன் தரும் திட்டத்தை அளிக்க, ஒவ்வொருவரும் முயற்சிக்கவேண்டும். ஜி.எஸ்.டி., என்பது, நல்ல எண்ணத்துடன் அமல்படுத்தப்பட்டது. இதை, செம்மைப்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன.

ஜி.எஸ்.டி.,யை யாரும் எதிர்க்கவில்லை. நாடு முழுவதும், ஒரே வரி விதிப்பு இருக்க வேண்டும் என்பதே, எல்லாருடைய எண்ணமாக உள்ளது. ஏழு ஆண்டுகள் விவாதத்துக்கு பின் தான், பார்லி.,யில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு முன், எந்தவொரு விஷயத்துக்காகவும், இவ்வளவு நீண்டநாள் விவாதம் நடந்தது இல்லை. முந்தைய ஆட்சியில் இதை ஆதரித்தவர்கள், தற்போது எதிர்க்கின்றனர்.

நாட்டின் வளர்ச்சிக்காக, மத்திய அரசு எடுத்த ஒவ்வொரு நடவடிக்கையும், நாட்டுமக்கள் ஆதரித்தனர். எனக்குகிடைத்த மிகப்பெரிய வரம் இது.
 

பார்லி.,யில் சமர்ப்பிக்கப்பட உள்ள பட்ஜெட், மக்களுக்கு இலவசங்களை வாரிவழங்கும் வகையில் இருக்காது. சீர்திருத்த நடவடிக்கைகளை, மத்திய அரசு தொடர்ந்து அமல்படுத்தும். உலகரங்கில்,இந்தியாவை உயர்த்தும் வகையில் திட்டங்கள் அமல்படுத்தப்படும்.


செல்லாத ரூபாய் நோட்டு திட்டம், மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. வேலைவாய்ப்பு அற்ற வளர்ச்சியை, மத்திய அரசு வழங்கி உள்ளதாக, விமர்சனங்களை கூறுகின்றனர்; அதில் உண்மை இல்லை. வேலைவாய்ப்பு உருவாக்கல் தொடர்பாக, எதிர்க்கட்சியினர் பொய்களை பரப்பி வருகின்றனர்.

மத்திய அரசின் திட்டங்கள், வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளன. விவசாயிகளின் பிரச்னைகளை கண்டறிந்து, அவற்றுக்கு தீர்வு காண வேண்டியது, மத்திய, மாநில அரசுகளின் கடமை. இவ்வாறு அவர் கூறினார்

 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.