பாரத ஸ்டேட் வங்கி உள்பட 20 பொதுத்துறை வங்கிகளுக்கு நிகழ் நிதியாண்டு இறுதிக்குள் ரூ. 88,000 கோடி மூலதன நிதி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வாராக்கடன் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண கடுமையான விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொதுத்துறை வங்கிகளின் நிதிச்சூழலை மேம்படுத்தும் வகையில் ரூ.2.11 லட்சம் கோடி மூலதனநிதி அளிப்பதாக மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. 
அதில் நிகழ்நிதியாண்டில் ஒருபகுதியும், அடுத்த நிதியாண்டில் மீதமுள்ள தொகையும் பிரித்தளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.


அதன் அடிப்படையில், தற்போது முதல் கட்டமாக ரூ. 88,139 கோடியை வழங்குவதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் வெளியி ட்டுள்ளது. 
அந்த தொகையில் ரூ.80,000 கோடியானது மறு மூலதனப் பத்திரங்கள் மூலமாக வங்கிகளுக்கு அளிக்கப்படும். மீதமுள்ள ரூ.8,139 கோடியானது பட்ஜெட்டில் ஒதுக்கப்படும்.


இதைத்தவிர, வங்கிகளின் பங்குகளை விற்பனைசெய்யும் நடவடிக்கைகளின் வாயிலாக பல்லாயிரம் கோடி ரூபாய் மூலதன நிதி திரட்டவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. 


இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய நிதிச் சேவைகள் துறைச்செயலர் ராஜீவ் குமார், நிகழ் நிதியாண்டு நிறைவடைவதற்குள் வங்கிகளுக்கு கிடைக்கும் மூலதன நிதியானது ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டும் என்றார்.


மத்திய அரசின் அறிவிப்பின்படி நிகழ்நிதியாண்டில் அதிகபட்சமாக ஐடிபிஐ வங்கிக்கு ரூ.10,610 கோடி நிதிகிடைக்கவுள்ளது. அதற்கு அடுத்தபடியாக பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ரூ.9,232 கோடியும், பாரத ஸ்டேட்வங்கிக்கு ரூ.8,800 கோடியும் மூலதன நிதி அளிக்கப்படவுள்ளது.


அவற்றைத் தவிர, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பஞ்சாப் நேஷனல் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஓரியண்டல் வங்கி, தேனா வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்டவற்றுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.இதனிடையே, வங்கிகளுக்கு பெரும்நிதி இழப்பை ஏற்படுத்தும் வாராக் கடன் பிரச்னைக்குத் தீர்வுகாணும் நடவடிக்கைகளை முன்னெடுத் துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. 
குறிப்பாக, அந்தவிவகாரத்தில் கடுமையான விதிகள் வகுக்கப் பட்டுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி, வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாத வர்களைத் தீவிரக் கண்காணிப்புக் குட்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.