இந்தியா-ஆசியான் நாடுகளின் உறவில் போட்டி, பொறாமைக்கு இடமில்லை என பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.


நாட்டின் 69-ஆவது குடியரசு தினம் மற்றும் ஆசியான்-இந்தியா நல்லுறவு ஏற்பட்டு 25-ஆண்டுகளா வதையொட்டி நடைபெறும் மாநாடு ஆகியவற்றை முன்னிட்டு பிரதமர் மோடி ஒருகட்டுரையை எழுதியுள்ளார். அந்த கட்டுரை 10 ஆசியான் நாடுகளின் 27 பத்திரிகைகளில் இடம்பெற்றுள்ளது. அதில் மோடி கூறியிருப்பதாவது:


தாய்லாந்து, வியத்நாம், இந்தோனேஷியா, பிலிப்பின்ஸ், மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், கம்போடியா, லாவோஸ், புருணே ஆகிய ஆசியான் நாடுகளு டனான இந்தியாவின் உறவில் எவ்வித போட்டியோ, பொறாமையோ இல்லை. எதிர் காலம் குறித்து நமக்குள் தெளிவான இலக்கு உள்ளது. நாடுகளின் வலிமை, பரப்பளவு உள்ளிட்ட அனைத்து வேறுபாடுகளையும் கடந்து, வர்த்தகம், தொழில் உள்பட அனைத்து நிலைகளிலும் நாம் ஒருவரை மற்றொருவர்மதித்து ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம்.


இந்தியா-ஆசியான் நாடுகளிடையிலான சிறப்பான நல்லுறவு கால் நூற்றாண்டை எட்டியுள்ளது. உலக மக்கள் தொகையில் 4-இல் ஒருபங்கை நாம் கொண்டுள்ளோம். நாட்டு மக்கள் மத்தியிலும் நாம் நல்லுறவை ஏற்படுத்தியுள்ளோம். கலை, இலக்கியம், மொழி, கலாசாரம் உள்ளிட்டவற்றை நமக்கிடையே பகிர்ந்துவருகிறோம். இந்தியா-ஆசியான் அமைப்பு உறவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் மட்டும் ஆகியிருக்கலாம். ஆனால், தெற்காசிய நாடுகளுடான இந்தியாவின் தொடர்பு பலநூற்றாண்டுகள் தொன்மை வாய்ந்தது. பண்டைய வரலாறு முழுவதும் இதற்கு ஆதாரங்கள் உள்ளன. இந்திய கட்டடக்கலை உள்ளிட்டவற்றின் தாக்கம் தெற்காசிய நாடுகளில் முழுமையாகப் பரவியுள்ளது.


இன்றைய நவீன உலகில் நமக்கிடையே வர்த்தகம், பாதுகாப்புத்துறை உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பு சிறப்பாக உள்ளது. ஆசியான் நாடுகளுடன் அதிக வர்த்தகம் செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியா 4-ஆவது இடத்தில் உள்ளது. இந்தியா மேற்கொள்ளும் வெளிநாட்டு முதலீடுகளில் 20 சதவீதம் ஆசியான் நாடுகளில் உள்ளது. நமக்கிடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்ளது.

இந்தியாவின் 16 நகரங்களில் இருந்து ஒருவாரத்தில் சிங்கப்பூருக்கு மட்டும் 240 நேரடி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நூற்றுக் கணக்கான் இந்திய நிறுவனங்கள் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாம் கடந்து செல்ல வேண்டிய பாதைகளும், அடையவேண்டிய இலக்குகளும் அதிகம் உள்ளன. ஆசியான் நாடுகளை இந்தியாவின் நட்பு நாடுகள் என்று மட்டும் கூறி நிறுத்திவிட முடியாது. உருவாகிவரும் புதிய இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமாகவும் ஆசியான் நாடுகள் விளங்கி வருகின்றன என்று அந்தக் கட்டுரையில் மோடி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.