:அடிக்கடி தேர்தல் நடத்துவது, அரசுக்கு பெரும்செலவை ஏற்படுத்துகிறது. இதனால், நாட்டின் வளர்ச்சிப்பணிகள் பாதிக்கின்றன. இதைத்தவிர்க்க, லோக்சபாவுக்கும், அனைத்து மாநிலங்களின் சட்ட சபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.


இது தொடர்பாக, அனைத்து அரசியல் கட்சிகளும் விரிவான, ஆக்கப் பூர்வ விவாதங்கள் நடத்தி, தக்க தீர்வு காண வேண்டும். மக்களின் நலன் கருதி, தடையற்ற மின்சாரம், ஏழைகளுக்கு, இலவசசமையல் காஸ் இணைப்பு, இலவசவீடுகள் உட்பட எண்ணற்ற திட்டங்களை அரசு வழங்கிவருகிறது.முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், பவுத்தர், பார்சி உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 'புதிய இந்தியா' கனவு, தனியொரு அரசியல் கட்சிக்கோ, அமைப்புக்கோ சொந்தமானதல்ல. இதை அடைய, நாம் அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் தீவிரபங்காற்ற வேண்டும்.ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் சிலபகுதிகளில் நிகழ்ந்து வரும் பயங்கரவாத செயல்கள், எல்லை தாண்டி நடக்கும் ஊடுருவல்களுடன் நேரடி தொடர்புள்ளவை.நம் ராணுவம், துணை ராணுவம், ஜம்மு – காஷ்மீர் மாநில போலீசார் ஒருங்கிணைந்து எடுத்துவரும் நடவடிக்கைகளால், விஷமிகளுக்கு தக்க பதிலடி தரப்பட்டு வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில், நக்சலைட்டுகளின் தாக்குதல்கள் குறைந்து வருகின்றன. அங்கு, நிலைமை கணிசமாக முன்னேற்றம் அடைந்துள்ளது. வன்முறையை

கைவிடுவோருடன் பேச்சு நடத்த, அரசு தயாராக உள்ளது.உலகளவில், பொருளாதாரத்தில் தேக்கம் காணப்பட்ட போதும், இந்தியாவில் வளர்ச்சி விகிதம், சிறப்பானதாக உள்ளது. 2016 – 17 நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் பொருளாதாரம், தற்காலிக பின்னடைவை சந்தித்தது. இருப்பினும், 2017 – 18 நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில், நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, வளர்ச்சிப்பாதையில் பயணித்து வருகிறோம்.நாடு சுதந்திரம்பெற்ற பின், மிகப்பெரும் பொருளாதார சீர்திருத்தமாக, ஜிஎஸ்டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது.

இதன் மூலம், பொருளாதார ஒருங்கிணைப்பை அடைய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. வங்கி நடைமுறைகள் வெளிப்படை தன்மை மிக்கதாக மாற்றப்பட்டுள்ளன. வங்கிகளின் நிதியாதாரம் பெருக நடவடிக்கை எடுத்துள் ளோம்.விவசாயிகளின் பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வரும், 2022க்குள், அனைத்து கிராமங்களுக்கும், சாலைவசதி செய்து கொடுக்கவும், விவசாய வருவாயை இரட்டிப் பாக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளுடன் தொடர்ந்து நடத்தப்பட்டுவரும் ஆக்கப்பூர்வமான பேச்சுகளால், நட்பு நாடுகளுடனும், முக்கிய வல்லரசு நாடுகளுடனும், உறவு சிறப்பான நிலையை எட்டியுள்ளது.

முஸ்லிம் பெண்கள், கண்ணியமான வாழ்க்கை வாழவும், சுயமரியாதை, துணிவுடன் திகழவும், முத்தலாக் தடை சட்ட மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தமசோதா விரைவில் சட்டமாகும் என நம்புகிறேன். சிறுபான்மையினரை அதிகாரம் படைத்தோராக மாற்றவேண்டும் என்பதில், அரசு உறுதியாக உள்ளது. சிறுபான்மையினரை, பொருளாதார, சமூக ரீதியில் முன்னேற்றவும், கல்வியில் மேம்படுத்தவும், அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ஊழலுக்கு எதிரான, அரசின் போராட்டம் தொடர்ந்துவருகிறது. போலியாக பதிவுசெய்யப்பட்டிருந்த, 3.5 லட்சம் நிறுவனங்கள், கடந்த ஓர் ஆண்டில் ரத்துசெய்யப்பட்டு உள்ளன. விவசாய உற்பத்தி பாதிப்பை தடுக்கவும், விவசாய பொருட்களை பாதுகாக்கவும், பல்வேறு திட்டங்களை அரசு தீட்டியுள்ளது. விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கவும், உற்பத்திபெருகவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பார்லிமென்டில், வரும், பிப்., 1ல், பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி, பட்ஜெட் கூட்டத் தொடர், லோக்சபா, ராஜ்யசபா உறுப்பினர்கள் அடங்கிய கூட்டுகூட்டத்தில், ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், முதல் முறையாக உரையாற்றியது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.