“ இந்திய பெருளாதாரம் நன்றாக உள்ளது. 2.5 டிரில்லியனாக இந்தியப் பொருளாதாரம் உள்ளது”- இது பொருளாதார மேதை, மத்திய நிதி அமைச்சர் அருன் ஜெட்டிலியின் சொந்த கருத்தல்ல! அரசின் கருவூல கணக்கின் அடிப்படையில் அவர் சொல்லும் தகவல் இது!


     2914 மே 26 ல் பாஜக நான்காவது முறையாக பொருப்பேற்றபோது, நாடு ஊழலில் திளைத்து இருந்தது.(முதல் முறை வாஜ்பாய் தலைமையில் 13 நாள், அடுத்தமுறை 13 மாதங்கள், அடுத்த மூன்றாவது முறை முப்பத்திரண்டு கட்சிகளின் துணையோடு 5 ஆண்டிகள்) 2014 முதல்
 சராசரியாக மூன்று ஆண்டுகளில் 7.5% வளர்ச்சியை அடைந்துள்ளோம். 8% பொருளாதார வளர்ச்சி அடைவதில் இந்தியா உறுதியாக உள்ளது
 வெளிப்படையான நிர்வாகம் வழங்குவதில் பாஜக அரசு உறுதியாக உள்ளது. நலிந்தோருக்கு நன்மை செய்யும் பஜெட்டாக 2018 பட்ஜெட் அமைந்துள்ளது!

 

     இது மக்களுக்கு நன்மை செய்யும் பட்ஜெட்தான் என்பதற்கு எதிர் கட்சிகளின் மற்றும் ஊடகங்கள் பத்திரிக்கைகளின் எதிர்ப்புதான் சான்றாக உள்ளது! இந்த நாட்டில் நல்ல விசயங்கள் பரபரப்பு செய்தியாவதில்லை! கெட்ட விசயங்கள்தான் பரபரப்பாக பேசப்படும்!

 

     120 கோடி இந்திய ஜனத்தொகை என எடுத்துக்கொண்டால் ஏறத்தாள 24 கோடி இந்திய குடும்பங்கள் உள்ளன! 24 கோடி குடும்பங்களில் கிட்டத்தட்ட பாதி குடும்பங்களான 10 கோடி குடும்பங்களுக்கு வருடாவருடம் ரூபாய் 5 லட்சம் வரை மருத்துவ செலவுக்கு வழங்கப்படும் என்னும் அறிவிப்பும், அதற்காக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதும் சாதாரன பரபரப்பு செய்தியல்ல, இது இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் பிரமாண்ட திட்டமாகும்!

     இது மருத்துவத்திற்கு மட்டும் உதவுவதல்ல, இந்திய குடும்பங்களுக்கு உதவுவது! மருத்துவச் செலவை அரசு ஏற்றால் அதனால் மீதமாகும் பணத்தைக்கொண்டு குடும்பத்தில் இதர செலவுகளை செய்து நிம்மதியாக வாழலாம்! இது ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் செயல்!

 

     ஒரு குடும்பத்திற்கு வருடாவருடம் ரூ.5 லட்சம்வரை மருத்துவ செலவை அரசே ஏற்கும்! இதனால் குடும்பங்களின் சேமிப்பு கூடும், கடன் சுமை குறையும்!

 

     ஏற்கெனவே புற்று நோய்க்கு மாதாமாதம் ஆகும் செலவான ஒரு லட்சத்து பதினெட்டாயிரம் ரூபாயை வெறும் எட்டாயிரம் ரூபாயாக குறைத்தது பாஜக அரசு! இறுதய நோய்க்கு பொருத்தப்படும் ஸ்டெண்ட் என்னும் வலை ரத்தக்குழாயின் விலையை ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மற்றும் இரண்டு லட்சம் என்றிருந்த்தை 7 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை என குறைத்துள்ளது பாஜக அரசு!

 

     மத்திய பாஜக அரசின் மாத்திரை வினியோகத்தில் நடத்தப்படும் பிரதம மந்திரி மக்கள் நல மருந்தகங்களில் டாக்டர்கள் எழுதும் அனைத்து ஆங்கில மாத்திரைகளும் 50 விழுக்காடு முதல் 75 விழுக்காடுவரை மானிய விலையில் வழங்கப்படுகிறது! மருந்து மாத்திரை விசயத்தில் நரேந்திரமோடியின் தாயுள்ளத்தை நானே அனுபவித்திருக்கிறேன்! வழக்கமாக மாதம் ரூ.5000 என்றிருந்த எனது மாத்திரை செலவு, பிரதம மந்திரியின் மக்கள் நல மருந்தகத்தில் மாதம் ரூ.1000 தான் ஆகிறது! என் குடும்பத்திற்கு மாதம் நாலாயிரம் ரூபாய் மிச்சம்! எல்லா குடும்பங்களுக்கும் இத்தகைய மிச்சம் இருக்கிறது! மக்கள் நல மருந்தகங்களை நீங்கள் தேடி கண்டுபிடித்து வாங்கவேண்டும்! தமிழகத்தில் இதுவரை 250 மருந்தகங்கள் உள்ளன!

 

மாவட்டத்திற்கு ஒரு இலவச டயலிசிஸ் மையங்களை மத்திய அரசு நடத்துகிறது! ஒரு முறை தனியார் மருத்துவ மனைகளில் டயலிசிஸ் செய்தால் ரூ.5000, 10,000! ஒருவருக்கு வாரம் ஒருமுறை இரண்டு முறை செய்ய வேண்டியது இருந்தால் அந்த குடும்பத்திற்கு பாஜக அரசால் எவ்வளவு லாபம் பாருங்கள்!

 

     மாவட்டந்தோறும் இலவச உடல் பரிசோதனை நிலையங்களை அமைக்கப்போவதாக 2018 பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

 

    ”உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு!” என்னும் வள்ளுவனின் வாக்கினை பின்பற்றி, நோய் என்னும் இடுக்கண் வரும்போது உதவி செய்து குடும்பங்களின் சேமிப்பினை கூட்டுகிறது மத்திய பாஜக அரசு! ஆண்டுக்கு 5 லட்சம் மட்டுமல்ல, இன்னும் பல லட்சங்களை குடும்பங்களில் கொட்டி ஒவ்வொரு குடும்பத்தையும் உயர்த்துகிறது பாஜக அரசு!

நன்றி குமரிகிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.