மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்றிரவு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது! இது பற்றிய விபரங்கள் கூட சில நிமிடங்கள் வரை கேமிராக்களில் பதிவாகியுள்ளது.  அதற்குப்பின் முற்றிலுமாக அந்த கேமிராக்களும் பழுதடைந்து விட்டதால் அங்கு நடந்த பாதிப்புகள் பற்றி முழுவிபரம் இல்லை.  ஆனால் அதே நேரத்தில் இது முற்றிலும் தவிர்த்திருக்கப்பட வேண்டிய விபத்து அதுமட்டுமல்ல வழிபாட்டுத் தலங்கள் வியாபார தலங்களாக மாற்றப்பட்டிருக்கிறது.  தமிழகத்தில் பல இடங்களில் உள்ள அதே நிலை மீனாட்சி அம்மன் கோவிலிலும் இருந்ததால்தான் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.


    அந்த கடைகள் எல்லாம் காலி செய்யப்பட வேண்டும்.  கோயிலில் புனிதத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் நெடுநாளைய கோரிக்கை.  ஆதற்கு அரசு செவிசாய்க்காமல் இருந்தது மட்டுமல்லாமல் அங்குள்ள கடைகளை தங்களது வருமானத்திற்குப் பயன்படுத்தி, கடைகள் வைத்திருந்தவரிடம்  அதிக கட்டணத்தை வசூலித்து, ஆனால் எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லை என்பதால் தான் தீ விபத்து என்று சொல்கிறார்கள்.  எல்லா கடைகளுக்கும் ஒரே இடத்தில் மின்னிணைப்பு இருந்ததும் காரணம் என்கிறார்கள்.  இது அப்பட்டமான நிர்வாக சீர்கேடு; இன்று மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.  அதே நேரம் அங்கு தூண்களில் இருந்த சிற்பங்களும் மாயமாகி இருந்தது என்ற தகவலும் கசிந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள தூண்களில் பல சிற்பங்கள் காணவில்லை என்ற செய்தியும் வந்து கொண்டுதான் இருந்தது.
   
ஆக தமிழகத்தில் அறநிலை துறை ஒரு இலக்கா இருந்ததாலும் அது எந்த விதத்திலும் கோவில்களைப் பாதுகாப்பதாகத் தெரியவில்லை.  பாதுகாக்காதது மட்டுமல்ல, சிலைகள் திருடு போயிருக்கின்றன்  நகைகள் திருடு போயிருக்கின்றன் சிற்பங்களும் திருடு போயிருக்கின்றன்  உண்டியலும் திருடு போயுள்ளது.


ஆக நேற்றைய சம்பவத்திற்கு அறநிலை துறையும், அரசும் முழுப்பொறுப்பேற்று விபத்திற்கான காரணங்களை கண்டறிந்து வருங்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் நிகழாமல் தடுக்கப்பட வேண்டும்.


கோவில்களில் கையூட்டுப் பெற்றுக் கொண்டு லஞ்சத்திற்கு வழிவகுத்து கடைகள் நடத்துவது முழுவதுமாக தடுக்கப்பட வேண்டும்.  அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே சிற்பங்கள் காணாமல் போயிருப்பதால், இந்த விபத்து இயற்கையானதா?  உள்நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்டதா? அந்த பகுதியில் உள்ள கோயிலில் வரலாற்று சிற்பங்கள் பத்திரமாக உள்ளனவா?  அவைகளை அபகரிக்க வேண்டும்  என்ற நோக்கத்தில் சில நடவடிக்கைகள் இருந்தா? இதனால் விபத்து ஏற்படுத்தப்பட்டதா?  நிர்வாக நீதியிலுள்ள போட்டியினால் விபத்து ஏற்படுத்தப்பட்டதா?  என்பது போன்ற பல சந்தேகங்கள் எழுகின்றன.  எனவே இந்த சம்பவத்திற்கு முழுமையாக நீதி விசாரணை வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி கேட்டுக் கொள்கிறது. அத்தகைய நீதி விசாரணை ஒன்றுதான் இத்தகைய குளறுபடிகளுக்கான காரணங்களை வெளிக் கொண்டு வர முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள்.
 என்றும் மக்கள்;; பணியில்
                                                                                                                                 

(Dr. தமிழிசை சௌந்தரராஜன்)

பாஜக மாநில தலைவர்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.