நாங்கள் ஜனநாயகத்தின் அடையாளம் , காங்கிரஸ் பிரிவினை வாதத்தின் அடையாளம். இந்திய வளர்ச்சி குறித்தும், நாடு முழுதும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் ஜனாதிபதி உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலை கருத்தில்கொண்டு நீங்கள் (எதிர்க்கட்சிகள்) பார்லிமென்ட் கதவை மூடினீர்கள். சுதந்திரம்பெற்று 70 வருடங்கள் ஆன பின்னரும், 125 கோடி மக்கள் காங்கிரஸ் செய்த பாவங்களுக்கான தண்டனையை மக்கள் தினமும் அனுபவித்து வருகின்றனர். வாஜ்பாய் ஆட்சிகாலத்திலும் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. ஆனால், அவை அனைவரின் நம்பிக்கை பெற்றும் சுமூகமாக நடந்தன. ஆனால், அரசியல் குழப்பத்திற்காக ஆந்திராவை காங்கிரஸ் அவசரகதியில் பிரித்தது. இதற்காக எந்த முன்னேற்பாடுகளும் செய்யவில்லை.

 

புதிய மாநிலங்கள் உருவாக்கும் போது, வாஜ்பாய் ஆட்சியில் ஜார்க்கண்ட், ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் உருவாக்கப்பட்டது பற்றி நினைவுக்கு வருகிறது. அரசியல் லாபத்திற்காக முடிவு எடுக்கக் கூடாது என்பதை பிரதமர் வாஜ்பாய் செய்துகாண்பித்தார். சுயநலத்திற்காக காங்கிரஸ் நாட்டை பிரித்தது. 70 வருடங்களுக்கு முன் தேர்தல் காரணங்களு க்காகவும், அற்ப காரணங்களுக் காகவும் நாட்டை காங்கிரஸ் பிரித்தது. காங்கிரசின் சுய நலத்தால் 125 கோடி மக்களும் இன்று அவதிப்படுகின்றனர்.

நான் கார்கே பேச்சை கவனித்தேன். ஆனால், எனது உரைக்கு எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது வேதனையளிக்கிறது. எதிர்ப்பு குரல்கள் எனதுகுரலை ஒடுக்க முடியாது. கார்கே, யாரை திருப்திபடுத்த முயன்றார் என தெரியவில்லை. கார்கே பேச்சுக்கு சித்தராமையா விலை கொடுக்க வேண்டியிருக்கும்.கர்நாடக தேர்தலுக்கு பின் கார்கே லோக்சபாவில் இருப்பாரா என்பது உறுதியாகவில்லை. அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருப்பது ஜனநாயகத்தின் உயிர்நாடி. கடந்தகாலங்களில் செய்ததற்கான பலனை தற்போது காங்கிரஸ் அறுவடை செய்து வருகிறது.
 

எந்த காரணமும் இல்லாமல் காங்கிரஸ் என்னை விமர்சித்துவருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா வளர்ச்சி பெறவில்லை. ரேடியோவும், டிவியும் காங்கிரஸ் கட்சிக்காக அர்ப்பணிக்கப்பட்டன. எதிர்ப்பை வெளிக்காட்ட காங்கிரஸ் ஆட்சியில் இடமில்லை. நீதித் துறை உள்ளிட்ட அனைத்தும் காங்கிரசின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.
 

பண்டைய காலத்தில் இருந்த ஜனநாயகத்தை, காங்கிரஸ் அளிக்க வில்லை. ஜனநாயகம் பற்றி பேசும் நீங்கள், அதுகுறித்து எங்களுக்கு பாடம் நடத்த முயற்சி செய்கிறீர்களா? மீடியா முன் உங்கள் கட்சி தலைவர் பேப்பரை கிழித்து எறிந்தார். உங்கள் கட்சி தலைவர், இளம் தலைவர்களின் பேச்சைகேட்க மாட்டார். ஆனால், நீங்கள் ஜனநாயகம் குறித்து பேசுகிறீர்கள். இந்தியாவின் பாரம்பரிய வரலாற்றை திரும்பி பார்த்தால், ஜனநாயகத்திற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. நமது கலாசாரத்தின் ஜனநாயகம் ஒரு அங்கம்.

சுதந்திரத்திற்கு பின்னர், காங்கிரஸ் கடுமையாகவும் உண்மையாகவும் மக்கள் நலனுக்காக உழைத்திருந்தால், இந்தியா இன்று இருக்கும் நிலையைவிட பல மைல்தூரம் முன்னேறியிருக்கும். ஆனால், ஒருகுடும்பத்தின் வளர்ச்சிக்கு மட்டுமே காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தியது. அந்த குடும்பத்தின் புகழ் பாடுவதையே, காங்கிரசார் வேலையாக வைத்திருந்தனர். ஜனநாயகம் நமது ரத்தத்தில் உள்ளது. ஆனால், அதனை காங்கிரசும், நேருவும் கொண்டு வரவில்லை. ஜனநாயகம் தழைப்பதையும் காங்கிரஸ் தடுத்தது. ஜனநாயகம் குறித்து பேச காங்கிரசுக்கு அருகதையில்லை . வாரிசுகள் ஜனநாயகம் குறித்து பேசக்கூடாது.அக்கட்சி ஜனநாயகம் குறித்து பாடம் நடத்தக்கூடாது.
 

ஆந்திராவின் பெருமைக்குரிய மகன் நீலம் சஞ்சீவி ரெட்டியை காங்கிரஸ் அவமானபடுத்தியதை நாம் மறந்துவிட முடியாது. இந்தியாவில் யாரும் காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஜனநாயகம் குறித்து பாடம் கேட்க வில்லை. கேரளாவில் காங்கிரஸ் செயல்பட்டது எப்படி? பஞ்சாபில் அகாலிதளத்தை எப்படி நடத்தியது? தமிழகத்தில் நடந்து கொண்டது எவ்வாறு? தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பல மாநில அரசுகளை காங்கிரஸ் கலைத்தது ஏன்? இது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல. ராஜிவ் ஐதராபாத் சென்ற போது, காங்கிரஸ் தலைவராக இருந்த அஞ்சையாவிடம் எப்படி நடந்து கொண்டார் ? மிகப்பெரிய பின்னணி இல்லாத பெரியதலைவரை அவமானபடுத்தினார்.
 

சொந்த ஜனாதிபதி வேட்பாளரையே அக்கட்சி ஆதரிக்காமல் பின் வாங்கியது. காங்கிரசில் உள்ள 15 குழுக்களில் 12 குழுக்களை உருவாக்கியது சர்தார்வல்லபாய் படேல். ஆனால், அவரை அக்கட்சி பிரதமராக்க வில்லை. படேல் பிரதமராகி யிருந்தால், காஷ்மீரின் ஒருபகுதியை பாகிஸ்தான் கொண்டு சென்றிருக்க முடியாது. காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டிருக்கும் .ரயில்வே குறித்து கார்கே பேசியதால், பிடார் – கல்புர்கி ரயில்வே திட்டம் குறித்து உண்மையை தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த 2004ம் வருடம் இந்த திட்டத்திற்கு வாஜ்பாய் ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், 2013 வரை எந்த பணியும் நடக்கவில்லை.
 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசைவிட, உள்கட்டமைப்பில் எனது அரசு வேகமாக செயல்படுகிறது. எங்களின் பணிக்கு காங்கிரஸ் பேர் எடுக்க முயற்சிக்கிறது. குறுகிய காலத்தில் நாங்கள் நீண்டதூரத்திற்கு பைபர்வயர்கள் பதித்துள்ளோம். காங்கிரஸ் ஆட்சியை விட நீண்ட தூரம் சாலை அமைத்துள்ளோம். அக்கட்சி விட்டுசென்ற பணிகளை நிறைவு செய்துள்ளோம். 3 ஆண்டுகளில் அரசின் பணியை நீங்கள் புறக்கணிக்க முடியாது. வேகமான ரயில், நீண்ட சுரங்கப்பாதை தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் அமைக்கப்பட்டது.
 

கடந்த சில வருடங்களுக்குமுன் உங்களுக்கு மக்கள் கசப்பு மருந்தை கொடுத்தனர். ஆனால் சிலர் இன்னும் உண்மையை உணரவில்லை. தேர்தலுக்காக ராஜஸ்தான் மக்களை தவறாக வழிநடத்தினீர்கள். ஆனால், கடந்த 3 வருடங்களாக மத்திய அரசும், ராஜஸ்தான் அரசும் தான் இந்தபிரச்னையை தீர்த்து வைத்தது.
 

சுதந்திர தினத்தின்போதும், பல முறையும் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கும், முக்கிய முடிவுகள் எடுக்கப் பட்டதற்கும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் நன்றிதெரிவித்து கொண்டுள்ளது. தேவைப்படும் இடத்தில் நான் அதற்குரிய பெருமையை அளித்துள்ளேன். ஆனால், காங்கிரஸ் பிரதமர் ஒருவராவது இவ்வாறு கூறிய துண்டா? மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஒருவரை யாவது பாராட்டினார்களா? அவர்கள் குடும்பத்தைதவிர வேறுயாரையும் பாராட்டவில்லை. உங்கள் கோஷங்களும் கூச்சலும் என்னை தடுக்காது. இதனால், உங்கள்நேரத்தை வீணடிப்பதை நீங்கள் தொடரலாம். வேலைவாய்ப்பு மற்றும் வேலை குறித்து பொய்யான தகவல்தந்து மக்களை தவறாக வழிநடத்தவேண்டாம். எதிர்க்கட்சிகள் உண்மையை மறைக்கின்றன.

பிரதமர் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 10 கோடி ரூபாய் கடன் அளிக்கப் பட்டுள்ளது. இதில், ஒருரூபாய் கூட கொள்ளையடிக்கப் படவில்லை. ஒரு புகார் கூட விரவில்லை. 10 கோடி ரூபாய் கடன் என்பது சாதாரண தொகையல்ல. இதனால், பலருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இளைஞர்களின் உற்சாகம் மற்றும் எழுச்சியை நான் பார்க்கிறேன். சுயமாக எதையாவது செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். சொந்தமாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவக்க முயற்சிக்கிறார்கள். அவர்களின் கனவுகளுக்கு மத்திய அரசு உருவம் தருகிறது. ஸ்டார்ட் அப் இந்தியா, முத்ரா யோஜனா, ஸ்கில் இந்தியா, மேக் இன் இந்தியா ஆகியவற்றின் பாதிப்புகள், காங்கிரஸ் சொல்லும் பொய்யை தகர்த்தெறிந்துள்ளது.
 

நீங்கள் என்னவேண்டுமானாலும், விருப்பத்திற்கேற்ப சொல்லிகொள்ளுங்கள். ஆனால், மக்கள் மாற்றத்தை பார்க்கின்றனர். வட கிழக்கு மாநிலங்களுக்கு காங்கிரஸ் எதையும் செய்ய வில்லை. அங்கு நீங்கள் சென்றுபார்த்தால், அங்கு செய்யப் பட்டிருக்கும் பணியை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

வேலை வாய்ப்பு விகிதம் அதிகரித்துள்ளது. ஆனால், நீங்கள் உங்கள் கண்களை மூடிக் கொண்டு ஒரேபாடலை பாடி கொண்டுள்ளீர்கள். ஆனால், உண்மையில், பெரிய மனதுடன் வேலை பார்க்கவில்லை. சுய நலத்திற்காக, அரசியல் லாபத்திற்காகவும்தான் எதையும் செய்வீர்கள். நாட்டிற்காக பணிசெய்ய பெரிய மனதுவேண்டும். ஆனால், அது உங்களிடம் இல்லை.

ஜனாதிபதி உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி பேசியது

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.