நான்கு பேர் கேட்க சிரிப்பது பெண்களுக்கு அழகல்ல!, இதற்காக பெண்களின் உரிமை பறிக்கப்படுவதாக எண்ணி பெண்ணியம் பேசுகிறார்கள். நமது கலாச்சாரத்தில் ஆண்களை விட பெண்கள் வணக்கத்திற்கு உரியவர்கள், இதற்காக எந்த பெண்ணியவாதியும் பெருமை கொள்வது இல்லை. ஆணும்  பெண்ணும் சமம் என்பார்கள், அப்படியே 33% இட ஒதுக்கிடும் கேட்பார்கள். இந்த சமூகத்தில் உரிமைமைகளை மட்டுமே கேட்பவர்கள் பெருகி விட்டார்கள், ஒரு சார்பு எடை கல்லுடனேயே அலைகிறார்கள்.  எனவேதான் காங்கிரஸ் பெண் எம்.பி ரேணுகா சௌத்திரி நாடே கேட்க சிரித்த போதும் கேள்வி கேட்காமல், அதற்கு சாதூரியமாக பதிலளித்த பிரதமர் மோடியை விமர்சிக்கிறார்கள்.

                   

நடந்தது என்ன? 1998 இல் அத்வானி பார்லின்ட்டில் முதன்முதலாக ஆதாரைப் போன்ற அடையாள அட்டை அத்தியாவசியம் மிகவும் அவசியம் என்று  பேசியது தான் ஆதாருக்கு அடித்தளம் இட்டது. பின்னர் அரசால் நியமிக்கப்பட்ட அத்வானி கமிட்டி அடையாள அட்டையை வலியுறுத்தி அறிக்கை கொடுத்ததுபின்னர் காங்கிரஸ் அதே திட்டத்தை பலவிதக்  குறைபாடுகளுடன் , ஊழல் செய்யும் வாய்ப்புடன் கொண்டுவந்ததை பாஜக  எதிர்த்தது. இதைப் பற்றி மோடி பாரளுமன்றத்தில் பேசும் போது ரேணுகா சௌத்திரி வெறிச் சிரிப்புடன் மிகவும் சத்தமாக சிரித்து அநாகரிகமாக நடந்து கொண்டார். பாராளுமன்ற வரலாற்றில் இதுவரை  கேற்றிடாத அதிக ஓசை இது . பிரதமரின் உரைக்கும் இடையூறு தரும் வகையிலும் இருந்தது.

இதனால் கோபம் கொண்ட அவைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு. 'என்ன ஆயிற்று? உங்களுக்கு எதுவும் பிரச்சனை எனில் மருத்துவரிடம் செல்லுங்கள்' எனக் கூறி அவரைக் கண்டித்தார். அதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும் எனவும் நாயுடு எச்சரித்தார்.

இதைக்கேட்ட பிரதமர், 'தலைவர் அவர்களே! ரேணுகாஜியை எதுவும் கூறாதீர்கள். ராமாயாணம் தொலைக்காட்சி தொடருக்குப் பின் இதுபோல் ஒரு சிரிப்பைக் கேட்க அனைவருக்கும் ஒரு பாக்கியம் கிடைத்துள்ளது’ எனத் தெரிவித்தார். இதை அடுத்து அவை முழுவதிலும் உள்ள உறுப்பினர்கள் வாய்விட்டு சிரித்து பிரதமரின் கருத்தை மிகவும் ரசித்தனர். நேரத்துக்கு ஏற்ற, காலத்துக்கு ஏற்ற ஒப்புமையும் கூட.   எதிர்கட்சி உறுப்பினர்களும் ரேணுகா சவுத்திரி செய்தது தவறு என்று உணர்ந்ததால் வாயடைத்து அமைதி காத்தனர்.

இப்போது என்னை சூர்ப்பனகையுடன் ஒப்பிடுவதா. இது உரிமை மீறல், பாஜக பெண்களுக்கு எதிரானது என்று பெண்ணியம் பேசுகிறார்.

இந்த பெண்ணிய வாதிதான் 2 வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் தனது குடும்பத்தாருடன் நட்ச்சத்திர விடுதியில் தன்னுடைய பணிப் பெண்ணாக செயல்பட்ட 10 வயது சிறுமியை தனது பக்கத்திலேயே நிறுத்தி பார்க்க வைத்து கொண்டு மூக்கு பிடிக்க உண்டு களித்தார். இவரது மனிதாபிமானமற்ற செயலை சமூக ஊடகங்கள் அதிகம் பகிர்ந்து மூக்கருத்தது. எனவே இவர் ஒரு பெண்ணியவாதியே அல்ல.

 

முதலில் என்டிஆர் முதல்வராக இருந்தபோது அவருடன் ஒட்டி கொண்டு எம்பி பதவியை பெற்று சுகவாழ்வு வாழ்ந்தார். பின்னர் உபேந்திரா கட்சி தொடங்கியவுடன் அந்த கட்சிக்கு ஓட்டம் பிடித்தார். பின்னர் சந்திர பாபு நாயுடுவுடன் சில காலம். அதன் பின்னர் தனது பரம வைரியான காங்கிரஸ் கட்சியில் ஐக்கியம் எனவே  இவர் ஒரு சித்தாந்த வாதியும் அல்ல.

1993ம்  ஆண்டு அன்றைய பிரதமரின் வாகன அணிவகுப்புக்குள் தனது வாகனத்தை விட மறுத்த தலைமை காவலரை தாக்கியவர். இதற்காக இவர்மீது வழக்கும் பதியப்பட்டது.  2015ம் ஆண்டு சட்ட மன்றத்தில் போட்டியிட சீட்டு வாங்கித்தருவதாக கூறி 1.2 கோடியை ஒருவரிடம் லஞ்சமாக வாங்கி ஏமாற்றியதாக கூறி ஒரு வழக்கும் உள்ளது. மிகப்பெரிய ஹவால புரோக்கரான ஹாசன் அலிகானிடம் இருந்து 1.5 கோடி மதிப்பிலான வைர மோதிரத்தை பரிசாக பெற்றதாக ஒரு புகாரும் உண்டு. எனவே இவர் ஒரு சிறந்த சமூகவாதியும் அல்ல.

எனவே பிரதமர் நரேந்திர மோடி ரேணுகா சௌத்திரியை, ராமாயணத்தின் முக்கிய கதாப்பாத்திரமான சூப்பனகையுடன் ஒப்பிட்டரோ, இல்லையோ அது அவர் அவர் யூகமே. அப்படியே ஒப்பிட்டிருந்தலும் அது குறித்து கோபப்பட  வேண்டியது ரேணுகா சௌத்திரி அல்ல, சூப்பனகையே!!.

நன்றி;- தமிழ்த் தாமரை VM வெங்கடேஸ்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.