ஆராய்ச்சி மாணவர்கள், வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்கும்வகையிலும், உள்நாட்டில் அவர்களுடைய திறமையை பயன்படுத்தும் வகையிலும், பிஎம்ஆர்எப்., எனப்படும் பிரதமர் ஆராய்ச்சி பெலோஷிப் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை, 80 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது. இந்ததிட்டத்துக்காக, 1,650 கோடி ரூபாயை மத்திய அமைச்சரவை ஒதுக்கியுள்ளது

ஐஐடி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையம், ஐஐஎஸ்இஆர்., எனப்படும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிமையம், என்.ஐ.டி., எனப்படும் தேசிய தொழில்நுட்ப மையம், ஐ.ஐ.எஸ்.சி., எனப்படும் இந்திய அறிவியல் மையம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள், ஆராய்ச்சி படிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். வெளிநாடுகளில் அவர்களுக்கு அதிகளவு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இவ்வாறு நம் மாணவர்கள், வெளிநாடுகளுக்கு செல்வதால், அவர்களுடைய திறமையை பயன் படுத்திக் கொள்ள முடிவ தில்லை. மேலும், ஆராய்ச்சிகள் இங்கு நடைபெறுவதும் தடைபடுகிறது. இதைதடுக்கும் வகையில்,

'ஆராய்ச்சி மாணவர்களுக்கான, பிரதமர் ஆராய்ச்சி பெலோஷிப் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை உயர்த்தப்படும்' என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி, பட்ஜெட்டில் அறிவித்து இருந்தார்.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில், சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக, 1,650 கோடி ரூபாயை ஒதுக்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்ததிட்டத்தின்படி, ஆண்டுக்கு, 3,000 பேர் தேர்ந்தெடுக்கப் படுவர். ஐஐடி., உள்ளிட்ட உயர் கல்வி மைய மாணவர்கள் இதற்கு விண்ணப் பிக்கலாம். வரும், 2018 – 19 கல்வியாண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, முதல் இரண்டு ஆண்டுகளில், ஒவ்வொரு மாதத்துக்கும், 70 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மூன்றாம் ஆண்டில், ஒவ்வொரு மாதமும், 75 ஆயிரம்ரூபாய் வழங்கப்படும். நான்கு மற்றும் ஐந்தாம் ஆண்டில், ஒவ்வொரு மாதமும், 80 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

இதைத்தவிர, வெளிநாடுகளில் நடக்கும் கருத்தரங்குகள் உள்ளிட்டவற்றில் பங்கேற்பதற்காக, ஐந்து ஆண்டுகளுக்கும் சேர்த்து, ஆராய்ச்சி நிதியாக, இரண்டுலட்சம் ரூபாய் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

 பிரதமர் ஆராய்ச்சி பெலோஷிப் திட்டத்தில் சேருவதற்கு, பி.டெக்., ஒருங்கிணைந்த, எம்.டெக்., அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில், எம்.எஸ்சி., படிப்பை முடித்தவர்கள் அல்லது இறுதியாண்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில் நுட்ப மையம், ஐஐஎஸ்இஆர்., எனப்படும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிமையம், என்.ஐ.டி., எனப்படும் தேசிய தொழில்நுட்ப மையம், ஐ.ஐ.எஸ்.சி., எனப்படும் இந்திய அறிவியல்மையம் போன்ற உயர்கல்வி நிறுவன மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
சி.ஜி.பி.ஏ., எனப்படும் ஒட்டுமொத்த தர பள்ளி சராசரி, 8.5 சதவீதம் இருக்க வேண்டும்.
 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில், நம் நாட்டின் மிகச்சிறந்த திறமையை, நாம் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடியும். ஒரு புறத்தில் நாட்டின் முன்னுரிமைகளுக்கு ஏற்ற ஆராய்ச்சிகள் நடக்கும். அதேநேரத்தில், உயர்கல்வி நிறுவனங்களில் தகுதியுடைய ஆசிரியர்களும் கிடைப்பர்.
-பிரகாஷ் ஜாவடேகர், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பா.ஜ.,

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.