மகாபாரதமும் ராமாயணனும் பார்ப்பான் நூல்கள்.. ஜாதி தீண்டாமையை வளர்க்கிறது – கீரமணி

இவங்க ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் உருப்படியா படிச்சதில்லைங்கிறது மட்டும் தெளிவா புரியுது.. அப்படியே தெரிஞ்சாலும் திரித்து பொய் சொல்கிறார்கள்..

ராமர் சீதாதேவியை (இராவணன் கடத்தி சென்றபொழுது) தேடி அலைந்துகொண்டிருந்தபொழுது, ராமரும் லக்ஷ்மணரும் அங்கே ஒரு மலை கிராமத்தில் ஓய்வெடுக்க எண்ணினர்.. அப்பொழுது அங்கே அவர்களை பார்த்து ஓடி வந்தார் சபரி எனும் வயதான தாழ்த்தப்பட்ட குளத்தின் பெண்.. இப்பொழுது இவர்கள் சொல்லும் தலித்.. இவர் ஸ்ரீ ராமபிரானின் தீவிர பக்தை.. ஸ்ரீராமனை வணங்கி, உங்களை தரிசிக்கதான் இத்தனை காலமாக காத்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார்.. அப்பொழுது ராமர், தாயே, எங்களுக்கு களைப்பாக இருக்கிறது.. சற்று உங்கள் குடிலில் ஓய்வெடுத்துக்கொள்கிறோம் என்றனர்.. அப்பொழு சபரி, தன் கைகளால் பறித்துக்கொண்டு வந்த நவாப்பழத்தை ராமருக்கு ஆசையோடு கொடுத்தார்.. சில பழங்களை தன் சந்தோஷத்திற்க்காக பகவானுக்கு பாதிக்கடித்து பாதியை மாட்டும் கொடுத்தார். ராமரும் அன்போடு தன் பக்தை உணர மிச்ச பிரசாதத்தை உண்டு மகிழ்ந்தார்..இத்தனைக்கும் ராமரை வரவேற்க, தரிசிக்க பல ரிஷிகள், முனிவர்கள் காத்துக்கொண்டிருந்தனர்.. ஆனால் ராமர் சென்றது சபரியின் வீட்டிற்கு..

இதே போல, தனக்கு உதவிய குகன் என்ற மலைஜாதியை சேர்ந்தவரை தன் 5 ஆவது தம்பியாக ஏற்றார் (அனுமானை 4 ஆவதாக ஏற்றதால்)

இதில் ராமாயணம் சொல்லும் நியதி ? நீ எந்த குளத்தில் பிறந்தாலும் பகவானுக்கு தேவை பக்தியே

இப்பொழுது மஹாபாரதத்தை பார்க்கலாம்.. கர்ணன் என்ற மாவீரன் பிறந்ததே நமக்கு ஒரு பாடம் சொல்லித்தரவேதான்.. ஒருவன் பிறப்பால் உயர்ந்தவனாக முடியாது.. பிறப்பை சொல்லி ஒருவனை மட்டம் தட்ட கூடாது என்பதற்க்காகதான்.. அர்ஜுனன் மற்றும் பாண்டவர்கள் கர்ணனை சூத புத்திரன் என்று சொல்லும் பொழுது கிருஷ்ணர் அவர்களை பல இடங்களில் கண்டிக்கிறார்.. கர்ணன் மடிந்தபின் பாண்டவர்கள் செய்த தவறை அவர்கள் புரிந்துகொள்கின்றனர்.. அந்த பாடம் நமக்கும்தான்.. அதேபோல பல சம்பவங்கள் மகாபாரத்தில் ஒருவனை குலத்தால் குறைத்துப்பேசுவதாகாது என்று சொல்கிறது..

பகவத் கீதையில் கிருஷ்ணர் தான் படைத்த நான்கு வர்ணங்களும் செய்யும் தொழிலாலும் குணத்தாலும் ஆனது என்று சொல்கிறார் அர்ஜுனனுக்கு..

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..

இதில் ராமரும் கிருஷ்ணரும் கூட பார்ப்பனர்கள் இல்லை.. சத்திரியர்கள்..

ராமாயணம் எழுதிய வால்மீகி ஒரு வழி கொள்ளையர்.. அதாவது அந்த கால நியதிப்படி (செய்யும் தொழிலாளான வர்ணம்) சூத்திரர்..

மஹாபாரதம் எழுதிய வியாசர் சத்தியவதி எனும் மீனவகுல பெண்ணுக்கு பிறந்தவர்..

இவர்கள் மஹரிஷிகளாக ஆனது பக்தியினாலும் ஞானத்தினாலும் மட்டுமே..

இப்படி இருக்கையில் இந்த கீரமணி போன்ற ஆட்களுக்கு இதெல்லாம் எப்படி பார்ப்பன நூலானது என்று தெரியவில்லை.. இவர்கள் நோக்கமெல்லாம் இந்து மத கடவுள்களை கேவலப்படுத்த வேண்டும், இதிகாச, புராணங்களை இழிவு படுத்த வேண்டும், பார்ப்பணன் பெயரை சொல்லி.. அப்பொழுதுதான் இந்துக்களுக்கு தங்கள் நம்பிக்கைகள் மீதே ஒருதாழ்வு மனப்பான்மை வரும்.. அவர்கள் தாழ்வு மனப் பான்மையினால் மதமாற்ற மனதளவில் தயாராகுவார்கள்.. இது இப்பொழுதல்ல, 18 ஆம் நூற்றாண்டு கால்டுவெல் மற்றும் மெக்காலே காலத்திலிருந்து நடக்கும் மதமாற்று சதி.. ஈவேராவில் துவங்கி இன்று இருக்கும் வைரமுத்துவரை இதே வேலையைத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.. இந்துக்களாக ஒன்றிணையுங்கள்.. ஜாதியாக பிரிந்திருந்து இறையாகாதீர்கள் இந்த கூட்டத்திற்கு..

நன்றி; ஜெய்ஸ்ரீ ராஜன்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.