வங்கிமோசடியில் சிதம்பரம் மற்றும் ரகுராம் ராஜனின் பங்கு.> பதில் என்ன? இந்த பஞ்சாப் நேஷனல் வங்கி ஏமாற்று வேலைக்கு இப்போது பலரும் அருண் ஜெட்லியை குறை கூறுகிறார்கள். அதில் நியாயமுள்ளதா?

இன்று அருண்ஜெட்லியைக் கை காட்டுபவர்கள்தான், ரகுராம் ராஜன் உத்தமர், திறமைசாலி என்று சர்டிபிகேட் கொடுத்தவர்கள். ஆனால் இந்த பிரச்சினை ஆரம்பமானதோ 2011ம் ஆண்டிலேயே. அப்போதைய பிரதமர், நிதியமைச்சர், அப்போதைய ஆர்பிஐ கவர்னர், அதற்கு பிறகு வந்த ரகுராம்ராஜன் இவர்களை யெல்லாம் தாண்டி இப்போது அருன்ஜெட்லி காலத்தில் இந்த விஷயம் வெளிவந்துள்ளது.அப்படியெனில் ரகுராம் ராஜனை தலையில் தூக்கி கொண்டாடிய அறிவாளிகள் இதற்கு என்ன சொல்வார்கள்? ரகுராம்ராஜனுக்கும் தெரிந்துதானே இந்த குற்றம் நடந்துள்ளது?

அருன்ஜெட்லி காலத்திலாவது இந்த குற்றம் வெளிவந்துவிட்டது. இப்போது வங்கியில் நடந்த இந்த குற்றம், நிதியமைச்சகத்திற்கு தெரிந்து நடந்திருக்குமா இல்லையா என்பதினைக் காணலாம்.இப்போதுள்ள சட்டத்தின்படி ஆர்பிஐ கூட ஒரு வங்கியின் நிதி நிர்வாகத்தில் தலையிட முடியாது, ஆகையால் இந்த வங்கிகள் கொடுக்கும் நிதி அறிக்கையே இறுதியானது, அதனைக் கொண்டுதான் ஆர்பிஐ நடவடிக்கை எடுக்கும்.

இந்த சூழலில் ஒரு வங்கியில் வாங்கும் கடனிற்கு அந்த வங்கியின் நிர்வாகிகள் குழுவே முழுக்க முழுக்க பொருப்பாகிறது, இது ஆர்பிஐக்கே செல்வதில்லை. இதனால் இந்த வங்கிகள் ஆளும் கட்சியினரோடு இணைந்துகொண்டு கடன் என்கின்ற பெயரில் பல கோடிகளைச் சுருட்டியுள்ளனர், ஆனால் இதனை அரசால் ஒன்றும் செய்யமுடியாது, ஏனெனில் அந்த அந்த வங்கி கம்ப்ளைண்ட் செய்தாலே தவிர, மற்றபடி அந்த வங்கியின் நிர்வாகத்திற்குள் எந்த அரசும் தலையிடமுடியாது. (இதுதான் சட்டம்). இதனை மீறி மத்திய அரசு தலையிட்டால் அது சட்டத்தினை மீறிய செயல், அது சர்வதிகாரத்திற்கு ஒப்பாகும். நீதிமன்றம் சென்றால் மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும்.

இந்த சூழலில் PNB.வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் 11000 கோடி ரூபாய் சூறையாடப் பட்டுள்ளது என்பதே சமீபத்தில்தான் அந்த வங்கியினைத் தாண்டி வெளியில் தெரிய வருகிறது, சரி இப்படி தாங்களே முன்வந்து அந்த வங்கி ஏன் தெரிவிக்க வேண்டும்? என்று யோசித்தால் அதற்கு காரணம் தற்போதைய அரசுதான்.தற்போதைய அரசு FRDI என்கின்ற சட்டமசோதாவை கடந்த டிசம்பரில் தாக்கல் செய்கிறது,

அதன்படி, தனிக்காடு ராஜாவாக இருந்த வங்கிகளை கண்காணிக்கும் குழு ஒன்றினை அமைத்து அதனை ஆர்பிஐக்கும் மேலாக கொண்டுவர வழிசெய்கிறது இந்த மசோதா.மற்றும் இந்த மசோதாவினால் அமையும் குழு, ஒரு வங்கியில் தப்பு நடக்கிறது என்றால், நேரடியாக அந்த வங்கியின் நிர்வாகத்தில் தலையிட்டு, அதனை சரி செய்யும் அதிகாரம் பெற்றது. இதனால் ஒவ்வொரு வங்கியும், வங்கிகள் அரசுடமை ஆக்கப்பட்டதிலிருந்து போட்ட ஆட்டத்தினை இனிமேல் போட முடியாது, இவ்வளவு நாள் இவர்கள் கொடுப்பதுதான் கணக்கு என்பது போய், இப்போது மிகச்சரியாக எவ்வளவு இருப்பு உள்ளது, எவ்வளவு என்பிஏ உள்ளது என்பது போன்ற கணக்குகளை அந்த குழுவிற்கு ஒப்புவிக்க வேண்டிவரும். இங்குதான் ப.நே. வங்கிக்கு பிரச்சினையே ஆரம்பிக்கின்றது.

இந்த அரசும் முந்தைய அரசு போல கண்டுகொள்ளாது சென்றிருந்தால் இந்த பிரச்சினை இப்போதும் வெளிவந்திருக்காது, வாடிக்கையாளர்கள் பணம் சுவாஹா ஆகிக்கொண்டே இருந்திருக்கும்..ஆனால் புதிய விதியின்படி இந்த வங்கிகளுக்கு தலைவலி உருவாக ஆரம்பித்துள்ளது, இதன் வெளிப்பாடுதான் முதல் ஆளாக நிரவ் மோடி விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது, இப்போது பஞ்சாபி நேஷனல். வங்கியோ இது தங்களுக்கே தெரியாமல் நடந்த தவறு என்று நாடகமாடுகிறது.

இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டவுடன் முதலில் நிரவ் மோடி குடும்பம் தப்பிக்கின்றது, பிறகு ஒரு புகார் வங்கி சார்பில் கொடுக்கப்படுகின்றது, இதில் எங்கிருந்து மத்திய அரசு உதவி செய்தது?மத்திய அரசோ, அருண் ஜெட்லியோ உதவுவதாக இருந்திருந்தால் இந்த சட்ட மசோதாவே பாராளுமன்றம் சென்றிருக்காது, அப்படி செல்லவில்லையென்றால், இப்படியொரு குற்றம் நடந்துகொண்டிருப்பதே வெளி உலகிற்கு தெரிந்திருக்காது என்னும் உண்மையை ஏன் மக்களுக்கு எடுத்துச் சொல்வதில்லை ஊடகங்கள்? இன்று நிரவ் மோடி விவகாரம் வெளிச்சத்திற்கு வருவதற்கு முக்கிய காரணம் இந்த அரசின் நடவடிக்கைகள்தான். ஊழலுக்கும் சுரண்டலுக்கும் எதிராக இந்த அரசு என்ன செய்கின்றது என்று கேட்போருக்கான பதிலே இந்த சம்பவம்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.