காவிரிவிவகாரம் குறித்து விவாதிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் வியாழக்கிழமை காலை 10:30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.

இதில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ,பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், காங்கிரஸ் தலைவர் திருநாவுக் கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முத்தரசன், பாலகிருஷ்ணன், விசிகதலைவர் திருமாவளவன், சீமான், ஜி.கே.வாசன், கி.வீரமணி, ஜி.கே.மணி, சரத் குமார், செ.கு.தமிழரசன், தமிமுன் அன்சாரி, வேல்முருகன், கிருஷ்ணசாமி, தனியரசு, ஈஸ்வரன், எல்.கே.சுதீஷ், காதர் மெகிதீன் உட்பட மொத்தம் 30 அரசியல் கட்சிகள், 9 அரசியல் அமைப்புகள், 54 விவசாய அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

இக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது:

காவிரி விவகாரத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழக உரிமைகளை நிலைநாட்ட பாடுபடவேண்டும். அனைத்து கட்சிகளும் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து தமிழகமக்களின் நலனுக்காக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். முக்கிய பிரச்னைகளில் அனைத்து கட்சிகளும் ஒரு மித்த கருத்துடன் பாடுபடவேண்டும். காவிரி நதிநீர்ப்பிரச்னை ஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வுகளுடன் பின்னிப்பிணைந்த பிரச்னை. காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சியினரின் கருத்துகளை ஆலோசித்து உரியநடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கப்பூர்வமான முறையில் தெரிவிக்கப்படும் கருத்துகளை சட்ட வல்லுநர்களின் ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். 

இதில் பேசிய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீர்ப்பாசனத்துக்கு தனிஅமைச்சகம் உடனடியாக அமைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். .

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கவுள்ளது. அடுத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பான ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசை வலியுறுத்தவேண்டும், இதுதொடர்பாக பிரதமரிடம் நேரில்வலியுறுத்தவும் இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சித்தலைவர்களும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், மாலை 5:30 மணியளவில் அனைத்து கட்சிக்கூட்டம் நிறைவடைந்தது. இதில்,

1. காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை 6 வாரத்திற்குள் அமைக்கப்படவேண்டும்.

2. காவிரியில் தண்ணீர் குறைக்கப் பட்டது குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை முழுமையாக ஏற்றுகொண்டு, சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

3. முதல்வர் தலைமையில், அனைத்துக்கட்சி தலைவர்கள், விவசாயசங்க தலைவர்கள் எம்பி.,க்கள் அடங்கிய குழுவுடன் பிரதமரை நேரில்சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம், காவிரிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்கவும், உச்சநீதிமன்றத் தீர்ப்பிலுள்ள தமிழகத்துக்கு சாதகமான அம்சங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துவது.

உள்ளிட்ட 3 முக்கியத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.