பஞ்சாப் மாநில முதல்வர், அமரீந்தர் சிங்கின் மருமகன் துணைஇயக்குனராக உள்ள, உ.பி.,யைச் சேர்ந்த சர்க்கரை ஆலை நிறுவனம், வங்கிக்கடன் வாங்கி மோசடி செய்துள்ளதாக, சிபிஐ., வழக்கு பதிவுசெய்துள்ளது இங்குள்ள சிம்போலியைச் சேர்ந்த, தனியாருக்கு சொந்தமான சிம்போலி சர்க்கரை ஆலை நிறுவனம், வங்கியில் கடன்வாங்கி மோசடி செய்ததாக, சிபிஐ., வழக்குபதிவு செய்தது. இதில், பஞ்சாப் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, அமரீந்தர் சிங்கின் மருமகன் மீதும் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ள தகவல், தற்போது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:

சிம்போலி சர்க்கரை ஆலை நிறுவனத்துக்கு, ஓரியன்டல் பேங்க் ஆப்காமர்ஸ், 2011ல், 150 கோடி ரூபாய் கடன் அளித்தது. ஆலைக்கு கரும்புவழங்கிய விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, சிறப்பு திட்டத்தில் இந்தக்கடன் வழங்கப்பட்டது.ஆனால், இந்தப்பணம் விவசாயிகளுக்கு தரப்பட வில்லை. இதற்கிடையே, 2015, மார்ச்சில், இந்தக்கடன், வாராக் கடனாக மாறியது.இந்தப் பணத்தை, நிறுவனம் வேறு வழியில் செலவிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, 2015, ஜூனில், மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பழையகடனை அடைப்பதற்காக, சர்க்கரை ஆலை நிறுவனத்துக்கு, 2015ல், 110 கோடி ரூபாய் மதிப்புள்ள மற்றொருகடனை, ஓரியன்டல் வங்கி வழங்கியுள்ளது; இதுவும் வாராக்கடனாகி உள்ளது. இந்த நிறுவனம், 109 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக, கடந்தாண்டு நவம்பரில், ஓரியன்டல் வங்கி புகார்கூறியது.அதனடிப்படையில், முதல்கட்ட விசாரணைக்குப் பின், அந்தநிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம், டில்லி மற்றும், உ.பி.,யில் பல்வேறு இடங்களில் அதிரடிச்சோதனை செய்யப்பட்டது.இந்த சர்க்கரை ஆலை நிறுவனத்தின், உயர் அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், அந்தசர்க்கரை ஆலையின் துணை இயக்குனராக உள்ள, குர்பால் சிங், பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங்கின் மகள் இந்தர்கவுரின் கணவர். இவர், எட்டுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இயக்குனராக உள்ளதும் தெரிய வந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.