பத்தாண்டுகளுக்கு முன்னல் நமது ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் ஆந்திராவில் உள்ள பார்வையற்ற பள்ளிக்கு சென்றிருந்தார்.அங்குள்ள மாணவனை பார்த்து, உன் எதிர்கால ஆசை என்ன என்று வினவினார். அந்த மாணவன் ஸ்ரீகாந்த்," உங்களைப் போல் ஜனாதிபதி ஆகவேண்டுமென" கூறினான்.

அவனது உற்சாகத்தையும், தெளிவையும் உணர்ந்த கலாம் அவனை லீட் இந்தியா2020 அமைப்பில் இணைத்து படிக்க வைத்தார்.

12 ம் வகுப்பில் 98% மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதல் மாணவனாக வெளிவந்தான். அவன் IIT யில் சேர விழைந்தான். பார்வையற்ற குறைபாட்டினால் அவனை இந்திய IIT சேர்க்க மறுத்தது.

கலாம் ஆலோசனைப்படி அமெரிக்காவில் உள்ள MIT( மசாசூட் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி) யில் சேர்த்து படிக்க வைத்தார். அமெரிக்க கல்லூரியிலே முதல் மாணவனாக வெளியே வந்தான். அவனுக்கு அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் சிறந்த வேலைவாய்ப்பை வழங்க முன் வந்தது. ஆண்டிற்கு 100000 டாலர்( இந்திய ரூபாய் 63 லட்சம்) ஜப்பான் நிறுவனம் மாதத்திற்கு உதவித்தொகை 6 லட்சம். தர முன் வந்தது. எதையும் ஏற்கவில்லை. அதற்கு அவன் சொன்ன காரணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

என்னை வளர்த்தது இந்தியா. என்னை படிக்க வைத்தது இந்தியா. வாழவைத்துக் கொண்டிருப்பது இந்தியா. நான் எனது தாய்நாடு தவிர எந்த நாட்டிற்கும் உழைக்க மாட்டேன் . எனது உழைப்பு பார்வையற்ற வர்களுக்கு உதவ வேண்டும் என்றான்.

இந்தியா வந்த ஸ்ரீகாந்த் பார்வையற்றவர்களுக்காக சமன்வயா என்ற சிறு தொழில் நிறுவனத்தை துவங்கினான். 8 பார்வையற்றவர்களுடன் துவக்கிய அந்த நிறுவனம், இன்றைக்கு 350 தொழிலாளர்களுடன் ஆந்திரா, கர்னாடகா, தெலுங்கானா மாநிலங்களில் செயல்படுகிறது.

பார்வையே இல்லாத ஒரு மனிதன், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒரு மாணவன் எதிர்நீச்சல் போட்டு உயர்ந்த பின்பும், மற்றவர்களை தூக்கி விட வேண்டும். பிறருக்கு நல்லது செய்ய வேண்டும், என பார்வையற்றவர்கள் வாழ்விற்காக தன்னை அர்ப்பணித்து கொள்கின்றபோது,

பார்வையுள்ள நாம், படிப்பறிவுள்ள நாம், நம்மை உருவாக்கிய சமூகத்திற்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, ஆதரவற்ற நிலையில் உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய வேண்டாமா!

இன்று இவனது நிறுவனத்திற்கு டாடா முதலீடு செய்து, 100 சதம் சூரிய ஒளியை பயன்படுத்தி 5 வது நிறுவனமாக ஸ்ரீசிட்டியில் அமைய இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.