காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர்மன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த புதிய திட்டத்தை வகுக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்காக 6 வாரம் கெடு விதித்திருந்தது. எனவே, நடுவர்மன்ற தீர்ப்பில் உள்ளபடி காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைக்கவேண்டும். ஆனால், மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. உச்ச நீதி மன்றம் மேலாண்மை வாரியம் அமைக்க சொல்லவில்லை ஸ்கீம் என்றுதான் சொல்லி உள்ளது  எனவே குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்த விஷயத்தில் எந்தமுடிவையும் எடுக்காமல் தொடர்ந்து மவுனம் காத்த மத்திய அரசு கடைசி நேரத்தில் தீர்ப்பில் உள்ள ஸ்கீம் (திட்டம்) குறித்து விளக்கம் கேட்க முடிவு செய்தது. தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்றால் காவிரி மேலாண்மை வாரியமா? அல்லது குழுவா? என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கக் கோரி இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ‘காவிரி தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு காவிரி மேலாண்மை வாரியம் என தமிழக அரசும், புதுவை அரசும் விளக்கம் அளிக்கின்றன. வாரியம் இல்லை என கர்நாடகம் மற்றும் கேரள அரசுகள் கூறுகின்றன. எனவே இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.  என்று கூறப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.