பா.,ஜனதா கட்சியின் 38-வது ஆண்டு நிறுவன நாள் நேற்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக மராட்டியத்தின் அனைத்து பகுதிகளிலும்இருந்து பா.ஜனதா தொண்டர்கள் மும்பையில் குவிந்தனர். அவர்கள் பஸ், கார், வேன் உள்ளிட்ட 50 ஆயிரம்வாகனங்கள் மற்றும் 28 சிறப்பு ரெயில்களில் வந்தனர்.

பிரமாண்ட மாநாட்டில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, மகாராஷ்டிர முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நிதின் கட்கரி உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது அமித்ஷா பேசியதாவது:

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் நேரம் நெருங்கி விட்டது. ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று பிரதமர் மோடி ஆட்சியின் 4 ஆண்டுகால சாதனைகளை மக்களுக்கு எடுத்துக்கூறவேண்டும்.

பிரதமர் மோடியின் கனவான புதியஇந்தியாவை படைக்க மீண்டும் பா.ஜ.க.வை முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியில் அமர்த்த தொண்டர்கள் உறுதியேற்கவேண்டும். பாராளுமன்ற தேர்தல் மட்டுமின்றி ஒடிசா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தல்களிலும் பாஜக. ஆட்சியை கைப்பற்றவேண்டும்.

பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் கூட்டணி அமைக்க முயற்சித்து வருகின்றன. வெள்ளம்பெருக்கெடுத்து வரும் போது, பாம்புகள், குரங்குகள், பூனைகள் என ஒன்றுக்கொன்று சம்பந்தமற்ற விலங்குகள் உயிர்பிழைப்பதற்காக ஒரே இடத்தில் கூடுவது இயல்பானது. அதுபோலவே, நரேந்திர மோடி எனும் வெள்ளம் இந்திய அரசியலில் பெருக்கெடுத்ததன் விளைவாக, எதிர்க் கட்சிகள் தங்களை காத்துக் கொள்ள கூட்டணி வைக்க முயற்சி செய்கின்றன

4 ஆண்டு ஆட்சியில் பாரதீய ஜனதா என்ன செய்துவிட்டது என ராகுல் காந்தி கேட்கிறார். 4 தலைமுறை ஆட்சியில் காங்கிரஸ் நாட்டுக்கு என்ன செய்துள்ளது என்பதை முதலில் அவர் மக்களுக்கு கூற வேண்டும்.

உத்தரபிரதேச இடைத்தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்ததற்கு ராகுல் காந்தி இனிப்பு வழங்கி கொண்டாடி உள்ளார். ஆனால் அந்த தொகுதிகளில் காங்கிரஸ் ‘டெபாசிட்’ கூட பெறவில்லை. தனது கட்சி ‘டெபாசிட்’ இழந்துள்ள ஒரு தேர்தலை இனிப்பு வழங்கி கொண்டாடிய ஒரே தலைவர் நாட்டிலேயே ராகுல் காந்தியாக மட்டும்தான் இருப்பார் என ஆவேசமாக பேசினார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.