உச்ச நீதி மன்றம் சட்ட ரீதியாக எந்தெந்த வகையில் இறுதி தீர்ப்பை செயலாக்க வேண்டிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமோ அதை தெளிவாக சொல்லியிருக்கிறாரகள், இதில் மத்திய அரசு Scheme பற்றிய விளக்கம் கேட்டுக்கொண்டதின் பெயரில் இது "வழி காட்டும் குழு" என்பதனையும் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள், அதேபோல் அதனை செயலாக்க தேவையான கால அவகாசத்தையும் நீட்டித்து கொடுத்திருக்கிறார்கள்,

ஆக சட்ட ரீதியாக நடவடிக்கை சரியான நோக்கில் மத்திய அரசால் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெளிவாக தெரிகிறது, அதுமட்டுமல்ல மத்திய அரசை எதிர் கட்சிகள் குற்றம் சொன்னதை போல உயர்நீதி மன்றம் 6 வாரத்திற்குள் என்று கால நிர்ணயம் செய்த பின்பும் காலம் தாழ்த்தி ஏன் மத்திய அரசு ஏன் உச்ச நீதிமன்றம் சென்று விளக்கம் கேட்டு தாமதப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உச்ச நீதி மன்றத்தின் பதில் சரியான பதிலடியாக அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது

ஏனென்றால் எதிர் கட்சிகளின் குற்றச்சாட்டு சரியில்லை என்பதை உணர்த்தும் விதமாக மத்திய அரசு கொடுத்த விளக்க மனுவையும், கேள்வி மனுவையும் ஏற்றுக்கொண்டுதான் மூலம்  மத்திய அரசின் நிலைப்பாடு சரி என்பது உறுதி ஆனது. உச்ச நீதி மன்றம் இவர்கள் சொல்வது தவறு என்று உணர்த்துவது போல மத்திய அரசு விளக்கம் கேட்டு கொடுத்த மனுவையும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது அதேபோல Scheme என்பதற்கான விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார்கள்  அதே போல சற்று கால அவகாசத்தையும் நீடித்துக் கொடுத்திருக்கிறார்கள். இதிலிருந்து தெளிவுப்படுத்த வேண்டியதும், அவகாசம் கொடுக்க வேண்டியதும் உச்ச நீதி மன்றத்தின் சரியான வழி முறை என்பதும் உச்ச நீதி மன்றம் நிரூபித்திருக்கிறது.

அதுமட்டுமல்ல  மத்திய அரசு சட்ட ரீதியாக சரியான நகர்வை தான் கொண்டிருக்கிறது என்பதையும் தெளிவுப்படுத்திருக்கிறது அதனால் மத்திய அரசை குறைக்கூறுவது தேவையற்றது என்பதும் மத்திய அரசை மட்டுமே குறிவைத்து தாக்குவது என்பதும் சரியானது அல்ல என்பதை இன்றைய உச்ச நீதி மன்ற வார்த்தைகள் நிரூபித்திருக்கிறது. பாஜக சார்பில் திரும்ப திரும்ப நாங்கள் சொன்னது சட்ட ரீதியாக சில தெளிவுகளை பெற்று அதே நேரத்தில் அதை நிரந்தர தீர்வாக இருக்க வேண்டும்.

இரு மாநிலமும் மறுபடியும் வழக்காடு மன்றம் சென்று அது கிடப்பில் போடப்பட்டுவிட கூடாது என்ற உண்மையான அக்கரையில் மத்திய அரசு செயல்படுகிறது. ஆனால் அரசியல் லாபத்திற்காக மத்திய அரசை குறைக்கூறி தாங்கள் பன்னெடுங்காலமாக கிடப்பில் போட்டதை மக்களுக்கு தெரியக்கூடாது என்ற காரணத்தினால் கடுமையாக மத்திய அரசை குறைக்கூறுவது மட்டுமல்லாமல் மத்திய அரசுக்கு எதிராக போராடியும் வருகிறார்கள், 

 

இன்று உச்ச நீதி மன்றம் மற்றும் ஒரு மக்கிய செய்தியையும் சொல்லி இருக்கிறது இரண்டு மாநிலங்களிலும் அமைதி காக்க வேண்டும் என்றும் அதற்கான அமைதி சூழ்நிலை உறுதி செய்ய வேண்டும். உச்ச நீதி மன்றத்தில் வழக்கு இருப்பதினால் அது தெளிவான தீர்வை நோக்கி நகர்கிறது என்பதனை உச்ச நீதி மன்றமும் தெளிவாக்கி இருக்கிறது, அப்படியென்றால் தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் அனைத்தும் தேவையற்றது என்பதையும், எதிர் கட்சிகள் உள்நோக்கத்தோடு போராடுகிறார்கள் என்பதனையும் தான் உச்ச நீதி மன்றம் உணர்த்தி இருக்கிறது, உச்ச நீதி மன்றம் சொன்ன விளக்கங்களுக்கு பின்பும் பொது அமைதியை கெடுக்கும் வகையில் எதிர் கட்சிகள் போராட்டம் நடத்தினால் அதுதான் உச்ச நீதி மன்ற அவமதிப்பு ஆகும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

 

50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்த  காங்கிரஸ் திமுக செய்த துரோகத்தினாலும், அலட்சியத்தினாலும் இவ்வளவு நாட்கள் காவிரி நீர் கிடைக்காமல் இன்றும் சட்ட ரீதியாக போராட வேண்டிய சூழ்நிலையில் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம் அதே நேரத்தில் மத்திய அரசு உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை செயலாக்க வேண்டும் என்ற நோக்கில் தெளிவான முடிவை எடுத்து அதற்காக தங்களுக்கு நடைமுறை படுத்துவதற்கான வழிகாட்டுதலை தெளிவுப்படுத்த வேண்டும் என உச்ச நீதி மன்றத்தை அணுகி இருக்கிறார்கள். மத்திய அரசின் கோரிக்கை மனு தவறு என்றால் உச்ச நீதி மன்றமே இந்த வழக்கை ஏற்றுக்கொண்டிருக்காது, ஆக உச்ச நீதி மன்றம் இந்த வழக்கை ஏற்றுக்கொண்டு இன்று அதற்க்கு ஒரு தெளிவான விளக்கம் கொடுத்ததன் மூலம் மத்திய அரசின் நடவடிக்கைகள் சரி என்று உச்ச நீதி மன்றமே ஒப்புக்கொள்கிறது ஆக இனிமேலும் சுய அரசியல் லாபத்திற்காக போராட்டங்கள் நடத்துவதை விட்டுவிட்டு மக்களை இடையூறு செய்து சுய நலத்திற்காக போராடும் கட்சிகள் உடனே போராட்டத்தை கைவிட்டு தமிழகத்தை அமைதி பூங்காவாக மற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

காங்கிரஸ் கம்யூனிஸ்ட், திமுக கட்சிகளால் தீர்க்கப்படாத காவிரி பிரச்சனை வெகு விரைவில் பாஜக வின் நடவடிக்கையினால் தீர்க்கப்படும். இனிமேல் போராட்டம் தீக்குளிப்பு, கடையடைப்பு என எதிர்மறை அரசியலில் இருந்து ஆக்கப்பூர்வமான அரசியலுக்கு தமிழகம் திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். காவிரி நீரை பாஜக அரசு நிச்சயம் கொண்டு வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம். 

டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக பாஜக தலைவர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.