விழாவில் "காலை வணக்கம்" என தமிழில்கூறி பேச்சை தொடங்கினார். வரலாற்று சிறப்பு மிக்க ஊரில் ராணுவ தளவாட கண்காட்சி நடக்கிறது.

தளவாடங்களின் தேவை மற்றும் முக்கியதுவம் பற்றி ராணுவம் நன்கு அறிந்திருக்கிறது .உலகிற்கு அஹிம்சையை போதித்தநாடு நமது நாடாகும் 

 

2100க்கும் மேற்பட்ட உள்நாட்டு நிறுவனங்கள் 125 வெளிநாட்டு நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன சோழர்கள் ஆண்டபகுதியில் நீங்கள் இந்த அளவுக்கு கூடியிருப்பதை கண்டு மகிழ்ச்சி யடைகிறேன்.

 

முதன் முறை நான் ராணுவ தளவாடகண்காட்சிக்கு வருகைதந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். முதன் முறையாக இந்திய நாடுகளில் தயார்செய்யப்பட்ட ராணுவ தளவாட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.இந்தியா முதல் முறையாக ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் ஈடுபட்டு சாதனைபடைத்து வருகிறது 

இதற்கு முன்பு வெளிநாட்டை நம்பி இருந்தோம். இப்போது நாம் ராணுவ தளவாடங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு முன்னேறி உள்ளோம்.

கடந்த 4 ஆண்டுகளில் ரூ.3,500 கோடி மதிப்பிலான 794-க்கும் அதிகமான வெளிநாட்டு ஏற்றுமதி ஆர்டர்கள் பெற்றுள்ளோம்.

போர் தொடுத்து பிறநாடுகளை வெல்வதுவிட, மனங்களை வெல்ல வேண்டும் என்ற கொள்கையில் இந்தியா  நம்பிக்கை வைத்துள்ளது.மேக் இன் இந்தியா திட்டத்தில் ராணுவதளவாட உற்பத்தியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

 

சிறு குறு நிறுவனங்கள் ராணுவ தளவாட உற்பத்தியில் தங்களது பங்களிப்பை செலுத்தவேண்டும் . அமைதியை விரும்பும் இந்தியா எல்லையில் நாட்டு மக்களுக்காக தனது பங்களிப்பை அளிக்கிறது. 

 

சிறிய அளவில் தொடங்கிய ராணுவ தளவாடஉற்பத்தி, தற்போது இமாலய வளர்ச்சி அடைந்துள்ளது. ராணுவ தளவாடங்களை இந்தியாவில் உற்பத்திசெய்ய தொடங்கியது நமக்கு பெருமை.  பாதுகாப்புத் துறையில் முதலீடுசெய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடங்கள் அமைய உள்ளது.  ராணுவதளவாட உற்பத்தியில் பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் 200% வளர்ச்சி  அடைந்துள்ளன. அப்துல் கலாமின் கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும்.

 

"தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு" என திருக்குறள் கூறி பேச்சை நிறைவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.