''நாட்டின், 125 கோடி மக்களில் ஒருவனான நான், மிகவும் சாதாரண மானவன். சிலருக்கு ஆசிரியர்பணி, சிலருக்கு மருத்துவர் பணி கிடைத்திருப்பது போல், எனக்கு பிரதமர் என்ற சேவகன் பணி கிடைத்துள்ளது. ''இதன்மூலம், நாட்டு மக்களுக்கு சேவை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்,''

இந்தியா, ஜனநாயகத்தின் மீது அதீதநம்பிக்கை வைத்துள்ளது. இங்கு வந்திருக்கும் நான், இந்தியாவின் பிரதமராக உள்ள, 125 கோடி இந்தியர்களின் சேவகனாக வந்துள்ளேன். சாதாரண டீ விற்கும் நபர்கூட, நாட்டின் பிரதமர் ஆக முடியும் என்பதே, ஜனநாயகத்தின் சிறப்பு.

நம் உறவினர்களுக்காக உழைக்கும் போது, அதுநமக்கு சுமையாக தெரிவதில்லை. நாட்டின், 125 கோடி மக்களையும் என் குடும்பத்தினராகவே நினைக்கிறேன். எனவே, நாட்டிற்காக உழைப்பதில், எனக்கு எந்தசுமையும் தெரிவதில்லை. நான், அரசியல் குடும்ப பின்னணியிலிருந்து வந்தவன் அல்ல. எனவே, நாட்டிற்கு உழைக்கும் நோக்கத்துடன் மட்டுமே செயலாற்றிவருகிறேன்.

நான் மிகப்பெரிய விஷயங்களை பற்றி யோசிப்பதைவிட, அத்தியாவசிய விஷயங்களை பற்றியோசிக்கிறேன். அதுசார்ந்த திட்டங்களை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துகிறேன். குழந்தைகளுக்கு கல்வி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, வயது முதிர்ந்தோர்க்கு, மருத்துவசிகிச்சை. இவை மூன்று சிறப்பான வகையில் கிடைத்து விட்டால், அந்த நாடு முன்னேற்றப் பாதையில் செல்வதை யாராலும் தடுக்க முடியாது. 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின் மூலம், ஏழைகளுக்கான சிறந்தமருத்துவ சேவை அளிக்கப்படுகிறது.
 

சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதிசெய்ய, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. முத்ரா கடன் உதவி திட்டத்தின் மூலம், பல இளம்தொழில் அதிபர்கள் உருவாகியுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஒருபெண், முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற்று, அதில் சிலபொருட்களை தயாரித்து, அவற்றை பிரதமர் அலுவலகத்திற்கு விற்பனைசெய்து, அதற்கான பணத்தையும், 15 நாட்களுக்குள் பெற்றுள்ளதாக, எனக்கு கடிதம் எழுதினார்.

இது, 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கிறேன். முத்ரா திட்டத்தின் கீழ், 11 கோடிக்கும் மேற்பட்டோர் பலன் அடைந்துள்ளனர். பெண்களுக்கான, பேறுகால விடுப்பு, 26 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இளைஞர்கள், உடலை உறுதியுடன் வைத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியம் மிக அவசியம் என்பதை உணரவேண்டும்.

என் இறுதி காலம்வரை, இதேபோல், ஓடி, ஆடி, உழைத்தபடி இருக்க வேண்டும் என விரும்புகிறேன். என் உடல் ஆரோக்கியம் குறித்து பலரும் கேள்வி எழுப்புகின்றனர். அந்தரகசியத்தை இப்போது கூறுகிறேன். நான், தினமும், ஒரு கிலோ முதல் இரண்டு கிலோ வரை, வசைகளை எதிர்கொள்கிறேன்.

என் மீதான வசைகள், விமர்சனங்களுக்காக நான் சோர்ந்து போவதில்லை. விமர்சனங்களை நான் வரவேற்கிறேன். என் மீதான எதிர்மறை விமர்சனங் களையும் நான் வீணடிப்பதில்லை. அதிலிருந்தும் எதை கற்கலாம் என யோசிக்கிறேன். உடல் மற்றும் உள்ளத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலம், சோர்ந்துபோகாமல், தொடர்ந்து செயல்படமுடிகிறது.

ஜனநாயக நாட்டில், மக்கள் சக்தியை விட மிகப்பெரிய சக்தி வேறு ஏதும் கிடையாது. ஒருமுறை ஓட்டளித்துவிட்டு, அடுத்த, ஐந்து ஆண்டுகளுக்கு, நமக்கு தேவையான அனைத்தையும், அரசுசெய்யும் என நினைத்து, மக்கள் சோம்பேறியாக இருக்ககூடாது. நாடு என் சொத்து என, ஒவ்வொருவரும் உணரவேண்டும். நம் சொத்தை பாதுகாப்பது நம் கடமை. அதேபோல், அரசை செயல்படவைப்பதும், அரசின் திட்டங்களுக்கு கைகொடுப்பதும், ஒவ்வொரு குடிமகனின் கடமை. ஓட்டளிப்பதுடன் ஒருவரின் ஜனநாயக கடமை முடிந்து விடுவதில்லை.

இயற்கை பேரிடர் நிகழும்போது, மீட்புப் பணிகளில், அரசு இயந்திரத்தின் செயல்பாட்டைவிட, பொதுமக்களின் செயல்பாடு அதிகம் என்பதை யாரும்மறுக்க முடியாது. அதுபோலவே, ஒவ்வொரு செயலிலும், மக்கள் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்படவேண்டும்.பயங்கரவாதத்தை வேரறுப்பதில் எப்படிசெயல்பட வேண்டுமோ,அந்தவகையில், இந்த அரசு செயல்படுகிறது.

 

யாருக்கு எந்த வகையில் பதில் அளிக்க வேண்டுமோ அப்படி பதில் அளிக்கப்படுகிறது. பாக்., பயங்கரவாதிகளுக்கு எதிரான, சர்ஜிக்கல் ஸ்டிரைக் விவகாரத்திலும், அந்தவகையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பெண்கள் மீதான கொடுமைகள் கண்டனத்திற் குரியவை. சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை ஒருபோதும் ஏற்கமுடியாது. பெண் குழந்தைகளை பாதுகாப்பதில், நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது. மானியவிலை காஸ் சிலிண்டர் என்ற பெயரில் அரசியல் நிகழ்ந்தது. கடந்த, 2014 லோக்சபா தேர்தலின் போது, எங்களுக்கு ஓட்டளித்தால், ஆண்டுக்கு, 12 மானியவிலை சிலிண்டர்களை தருவதாக, சிலர் வாக்குறுதி அளித்தனர்.ஆனால், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, கோடிக்கணக்கான பேர், தங்களுக்கான காஸ் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். ரயில்களில், ஏசிபெட்டிகளில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் சலுகை, தங்களுக்கு வேண்டாம் என, 40 பேர் விட்டுக் கொடுத்துள்ளனர்.

தேச முன்னேற்றத்திற்காக, இப்படி பலரும் தங்கள் பங்களிப்பை அளிக்க தயாராக உள்ளனர். அது போன்றவர்களை அடையாளம் கண்டு, தேவையற்ற செலவினங்களை குறைக்கும் பணியை, மத்திய அரசு சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. நாட்டின், 125 கோடி மக்களில் ஒருவனான நான் மிகவும் சாதாரணமானவன். சிலர் ஆசிரியர் பணி செய்கின்றனர்; மேலும் சிலர் மருத்துவர் பணி செய்கின்றனர். சிலர் சொந்த தொழில் புரிகின்றனர். அதுபோலவே, எனக்கு, பிரதமர் என்ற சேவகன் பணி கிடைத்துள்ளது. அதன் மூலம், நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

வரலாற்றில் எனக்கென தனி இடம்கிடைக்க வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. பழம்பெரும் பெருமைகளை உடைய, இந்தியாவுக்கென சிறப்பான வரலாறு உள்ளது. ஏராளமான சான்றோர்களும், ஞானிகளும் நம்நாட்டில் பிறந்து, உலகிற்கு உபதேசம் செய்துள்ளனர். உலகநாடுகளை வழிநடத்தும் வல்லமை நமக்கு உள்ளது. நம் நாட்டின் பெருமையை, உலகளவில் மேலும் சிறப்படைய செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். நம்மால், இந்த உலகிற்கே வழிகாட்டமுடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

 

பிரிட்டன் சென்றுள்ள, பிரதமர் நரேந்திர மோடி, லண்டனில் உள்ள, வெஸ்ட்மின்ஸ்டர் சென்ட்ரல் ஹாலில் நடந்த நிகழ்ச்சியில், பொதுமக்களின் கேள்விகளுக்கு விடையளித்து பேசினார். சென்ட்ரல் ஹாலில் குழுமியிருந்த, வெளிநாடு வாழ் இந்தியர்கள் நேரடியாக எழுப்பிய கேள்விகள், சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளை, கவிஞரும், எழுத்தாளருமான பிரசூன் ஜோஷி, பிரதமர் மோடியிடம் கேட்டார்.

அந்த கேள்விகளுக்கு பதிலளித்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியது

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.